நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 83 யென்னும் விரவுத்திணை முன்னிலை ஒருமை ஏவல் வாய்பாடு போன்ற, வினைப் பகாப்பதமே - தெரிநிலைவினைப் பகாப்பதம் என்றவாறு. (10) 138. செய்யென் வினைவழி விப்பி தனிவரிற் செய்வியெ னேவ லிணையினீ ரேவல். சூ-ம், இருமடியேவல் மும்மடியேவல் வினைப் பகாப்பதங்கள் ஆமாறு உரைத்தது. (இ-ள்) செய்யென் வினைவழி - செய்யென்னும் ஏவல் வாய்பாட்டு வினையின்பின், விப்பி தனிவரில் -விப்பியென்னும் இரண்டினுள் ஒன்று தனித்து வரில், செய்வியென் ஏவல் - செய்வி என்னும் ஏவல் வாய்பாட்டு வினையென்னும் பொருளைப் பெறும், இணையின் - வி பி என்னும் இவையிரண்டும் ஒருங்கு வரினும் ஒன்றே இணைந்து வரினும், ஈரேவல் ஏவன்மேல் ஏவலொன்று மூவராவானொரு கருத்தனைக் காட்டும் என்றவாறு. உ-ம்: வருவி, சீப்பி, கூவுவி, வைவி, போவுவி, நடப்பி, மடிவி, விடுவி, ஏவுவி, நொவ்வுவி, வௌவுவி, உரினுவி, உண்பி, பொருநுவி, திருமுவி, தின்பி, தேய்வி, தேய்ப்பி, பார்ப்பி, செல்வி, அவ்வுவி, வாழ்வி, கேட்பி, அஃகுவி எனச் செய்வி யென்னும் ஏவல் வாய்பாட்டு வினைப் பகாப்பதம் வந்தவாறு நடத்துவிப்பி, வருவிப்பி, மடிவிப்பி என இரண்டும் ஒருங்கு வந்தன. நடப்பிப்பி, கற்பிப்பி, படிப்பிப்பி என ஒன்றே இணைந்து வந்தன. இவ்வாறு செய்விப்பி என்னும் ஏவல் வாய் பாட்டு வினைப் பகாப்பதம் வந்தவாறு உணர்க. இவற்றாற் பகுபதம் வருமாறு: நடத்துவித்தான், நடத்துவித்தாள், நடத்து வித்தார் எனவும், நடப்பித்தான், நடப்பித்தாள், நடப்பித்தார் எனவும், இவ்வாறு எல்லாம் பால் இடம் காலங்கடோறும் ஒட் டிச் செய்வியென் ஏவற்குப் பகுபதம் ஆமாறு உணர்க. நடத்து விப்பித்தான், நடத்து விப்பித்தாள், நடத்துவிப்பித்தார் எனவும் நடப்பிப்பிச் தான், நடப்பிப்பித்தாள், நடப்பிப்பித்தார், கற்பிப் பித்தான், கற்பிப்பித்தாள், கற்பிப்பித்தார் எனவும் எல்லாப் பால் இடம் காலங்டோறும் ஒட்டிச் செய்விப்பி என்னும் இருமடி யேவற்குப் பகுபதம் வந்தவாறு காண்க. இவையெல்லாம் ஏற்ற பெற்றி கொள்க. (11) 139. விளம்பிய பகுதிவே றாதலும் விதியே. சூ-ம், பகுதிக்கு உரியதோர் விதி கூறியது. (இ-ள்) விளம்பிய பகுதி - மேற்கூறிய எனைவகைப் பகுதிகளுள் ளும், வேறாதலும் - சில பொருள் வேறுபட்டும் சில மிக்கும் சில திரிந் தும் சில ஈறுகெட்டும் வருவது, விதியே - முறைமையாம் என்றவாறு.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 83 யென்னும் விரவுத்திணை முன்னிலை ஒருமை ஏவல் வாய்பாடு போன்ற வினைப் பகாப்பதமே - தெரிநிலைவினைப் பகாப்பதம் என்றவாறு . ( 10 ) 138. செய்யென் வினைவழி விப்பி தனிவரிற் செய்வியெ னேவ லிணையினீ ரேவல் . சூ - ம் இருமடியேவல் மும்மடியேவல் வினைப் பகாப்பதங்கள் ஆமாறு உரைத்தது . ( - ள் ) செய்யென் வினைவழி - செய்யென்னும் ஏவல் வாய்பாட்டு வினையின்பின் விப்பி தனிவரில் -விப்பியென்னும் இரண்டினுள் ஒன்று தனித்து வரில் செய்வியென் ஏவல் - செய்வி என்னும் ஏவல் வாய்பாட்டு வினையென்னும் பொருளைப் பெறும் இணையின் - வி பி என்னும் இவையிரண்டும் ஒருங்கு வரினும் ஒன்றே இணைந்து வரினும் ஈரேவல் ஏவன்மேல் ஏவலொன்று மூவராவானொரு கருத்தனைக் காட்டும் என்றவாறு . - ம் : வருவி சீப்பி கூவுவி வைவி போவுவி நடப்பி மடிவி விடுவி ஏவுவி நொவ்வுவி வௌவுவி உரினுவி உண்பி பொருநுவி திருமுவி தின்பி தேய்வி தேய்ப்பி பார்ப்பி செல்வி அவ்வுவி வாழ்வி கேட்பி அஃகுவி எனச் செய்வி யென்னும் ஏவல் வாய்பாட்டு வினைப் பகாப்பதம் வந்தவாறு நடத்துவிப்பி வருவிப்பி மடிவிப்பி என இரண்டும் ஒருங்கு வந்தன . நடப்பிப்பி கற்பிப்பி படிப்பிப்பி என ஒன்றே இணைந்து வந்தன . இவ்வாறு செய்விப்பி என்னும் ஏவல் வாய் பாட்டு வினைப் பகாப்பதம் வந்தவாறு உணர்க . இவற்றாற் பகுபதம் வருமாறு : நடத்துவித்தான் நடத்துவித்தாள் நடத்து வித்தார் எனவும் நடப்பித்தான் நடப்பித்தாள் நடப்பித்தார் எனவும் இவ்வாறு எல்லாம் பால் இடம் காலங்கடோறும் ஒட் டிச் செய்வியென் ஏவற்குப் பகுபதம் ஆமாறு உணர்க . நடத்து விப்பித்தான் நடத்து விப்பித்தாள் நடத்துவிப்பித்தார் எனவும் நடப்பிப்பிச் தான் நடப்பிப்பித்தாள் நடப்பிப்பித்தார் கற்பிப் பித்தான் கற்பிப்பித்தாள் கற்பிப்பித்தார் எனவும் எல்லாப் பால் இடம் காலங்டோறும் ஒட்டிச் செய்விப்பி என்னும் இருமடி யேவற்குப் பகுபதம் வந்தவாறு காண்க . இவையெல்லாம் ஏற்ற பெற்றி கொள்க . ( 11 ) 139. விளம்பிய பகுதிவே றாதலும் விதியே . சூ - ம் பகுதிக்கு உரியதோர் விதி கூறியது . ( - ள் ) விளம்பிய பகுதி - மேற்கூறிய எனைவகைப் பகுதிகளுள் ளும் வேறாதலும் - சில பொருள் வேறுபட்டும் சில மிக்கும் சில திரிந் தும் சில ஈறுகெட்டும் வருவது விதியே - முறைமையாம் என்றவாறு .