நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

இரண்டாவது பதவியல் பதம் 128. எழுத்தே தனித்துந் தொடர்ந்தும் பொருடரிற் பதமா மதுபகாப் பதம்பகு பதமென இருபா லாகி யியலு மென்ப, சூ-ம், நிறுத்தமுறையானே பொதுவகையாற் பதம் ஆமாறும் அதன் பகுதியும் கூறுகின்றது. (இ-ள்) எழுத்தே தனித்தும் - மேற்சொன்ன எழுத்துத்தானே தனித்து நின்றும், தொடர்ந்தும் - அவ்வெழுத்து இரண்டு முதலாகத் தொடர்ந்து நின்றும், பொருள் தரில் - பொருள் விளக்குமெனின், பதமாம் அது - பதமென்பதாம்; அப்பதம், பகாப்பதம் பகுபதமென - பகாப்பதம் பகு பதமென்னும் இருபாலாகி இயலுமென்ப - இரண்டு பகுதியாய் நடக்குமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. "தன்னை யுணர்த்தி னெழுத்தாம் பிறபொருளைச் சுட்டுதற் கண்ணே யாஞ் சொல்” என்பது அவினயப் புறநடை. எல்லா மொழியும் ஓரெழுத்துப் பதம் தொடரெழுத்துப் பதமெனவும் பகாப்பதம் பகுபத மெனவும் இவ்விரண்டாய் அடங்கும் என்ப. இPD, மிறிஸ் முத லாயின தொடர்ந்தனவேனும் பொருள் தராவெனிற் பதமாகாததென மறுக்க. (1) ஓரெழுத்தொருமொழி 129. உயிர்மவி லாறுந் தபநவி லைந்தும் கவசவி னாலும் யவ்வி லொன்றும் ஆகு நெடினொது வாங்குறி லிரண்டொ டோரெழுத் தியல்பத மாறேழ் சிறப்பின. சூ-ம், ஓரெழுத்துப் பதமாவன இவையெனக் கூறியது.
இரண்டாவது பதவியல் பதம் 128. எழுத்தே தனித்துந் தொடர்ந்தும் பொருடரிற் பதமா மதுபகாப் பதம்பகு பதமென இருபா லாகி யியலு மென்ப சூ - ம் நிறுத்தமுறையானே பொதுவகையாற் பதம் ஆமாறும் அதன் பகுதியும் கூறுகின்றது . ( - ள் ) எழுத்தே தனித்தும் - மேற்சொன்ன எழுத்துத்தானே தனித்து நின்றும் தொடர்ந்தும் - அவ்வெழுத்து இரண்டு முதலாகத் தொடர்ந்து நின்றும் பொருள் தரில் - பொருள் விளக்குமெனின் பதமாம் அது - பதமென்பதாம் ; அப்பதம் பகாப்பதம் பகுபதமென - பகாப்பதம் பகு பதமென்னும் இருபாலாகி இயலுமென்ப - இரண்டு பகுதியாய் நடக்குமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு . தன்னை யுணர்த்தி னெழுத்தாம் பிறபொருளைச் சுட்டுதற் கண்ணே யாஞ் சொல் என்பது அவினயப் புறநடை . எல்லா மொழியும் ஓரெழுத்துப் பதம் தொடரெழுத்துப் பதமெனவும் பகாப்பதம் பகுபத மெனவும் இவ்விரண்டாய் அடங்கும் என்ப . PD மிறிஸ் முத லாயின தொடர்ந்தனவேனும் பொருள் தராவெனிற் பதமாகாததென மறுக்க . ( 1 ) ஓரெழுத்தொருமொழி 129. உயிர்மவி லாறுந் தபநவி லைந்தும் கவசவி னாலும் யவ்வி லொன்றும் ஆகு நெடினொது வாங்குறி லிரண்டொ டோரெழுத் தியல்பத மாறேழ் சிறப்பின . சூ - ம் ஓரெழுத்துப் பதமாவன இவையெனக் கூறியது .