நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 61 85. மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே. சூ-ம், இதுவுமது. (இ-ள்) மேற்பல் இதழுற - மேற்பல்லானது கீழிதழைப் பொருந்த, மேவிடும் வவ்வே - வகாரம் பிறக்கும் என்றவாறு. (30) 85. அண்ண நுனிநா நனியுறிற் றனவரும். சூ-ம், இதுவுமது. (இ-ள்) அண்ண நுனி நா நனியுறின் - அண்ணத்தின் நுனி நா மிகவும் பொருந்த, றன வரும் - றகாரமும் னகாரமும் பிறக்கும் என்றவாறு. (31) சார்பெழுத்தின் இடமும் முயற்சியும் 87. ஆய்தக் கிடந்தலை யங்கா முயற்சி சார்பெழுத் தேனவுந் தம்முத லனைய சூ-ம், சார்பெழுத்துக்களுக்கு இடமும் முயற்சியும் கூறியது. (இ-ள்) ஆய்தக் கிடந்தலை - ஆய்த எழுத்திற்கு இடம் தலையாம், அங்கா முயற்சி - அங்காந்து சொல்லுதல் முயற்சியாம், சார்பெழுத் தேனவும் - ஒழிந்த சார்பெழுத்துக்களுக்கு இடமும் முயற்சியும், தம் முதலனைய - தத்தம் முதலெழுத்துக்களோடு ஒப்பனவாம் என்ற வாறு. உ-ம்: ககா, எஃகு, ஆது, மங்ங்கலம், கேண்மியா, நான்கு, மைப்புறம், மௌவல், வாழும் வணிகன், கஃறீது எனவும் கண்டுகொள்க. (32) பிறப்பின் புறநடை 88. எடுத்தல் படுத்த னலித லுழப்பில் திரிவுந் தத்தமிற் சிறிதுள வாகும். சூ-ம், மேற் கூறியவற்றிற்கு ஓர் புறநடை கூறியது. (இ-ள்) எடுத்தல் படுத்தல் - எடுத்தல் ஓசையினாலும் படுத்தல் ஓசையினாலும், நலிதல் உழப்பில் - நலிதல் முதலான உழப்பு விகற் பங்களினாலும், திரிவும் தத்தமில் - தத்தம் எழுத்துப் பிறப்பினுள் ஒன்றுக்கொன்று வேறுபாடுகளும், சிறிதுளவாகும் - சிறிது உளவாம் என்றவாறு. (33)
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 61 85. மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே . சூ - ம் இதுவுமது . ( - ள் ) மேற்பல் இதழுற - மேற்பல்லானது கீழிதழைப் பொருந்த மேவிடும் வவ்வே - வகாரம் பிறக்கும் என்றவாறு . ( 30 ) 85. அண்ண நுனிநா நனியுறிற் றனவரும் . சூ - ம் இதுவுமது . ( - ள் ) அண்ண நுனி நா நனியுறின் - அண்ணத்தின் நுனி நா மிகவும் பொருந்த றன வரும் - றகாரமும் னகாரமும் பிறக்கும் என்றவாறு . ( 31 ) சார்பெழுத்தின் இடமும் முயற்சியும் 87. ஆய்தக் கிடந்தலை யங்கா முயற்சி சார்பெழுத் தேனவுந் தம்முத லனைய சூ - ம் சார்பெழுத்துக்களுக்கு இடமும் முயற்சியும் கூறியது . ( - ள் ) ஆய்தக் கிடந்தலை - ஆய்த எழுத்திற்கு இடம் தலையாம் அங்கா முயற்சி - அங்காந்து சொல்லுதல் முயற்சியாம் சார்பெழுத் தேனவும் - ஒழிந்த சார்பெழுத்துக்களுக்கு இடமும் முயற்சியும் தம் முதலனைய - தத்தம் முதலெழுத்துக்களோடு ஒப்பனவாம் என்ற வாறு . - ம் : ககா எஃகு ஆது மங்ங்கலம் கேண்மியா நான்கு மைப்புறம் மௌவல் வாழும் வணிகன் கஃறீது எனவும் கண்டுகொள்க . ( 32 ) பிறப்பின் புறநடை 88. எடுத்தல் படுத்த னலித லுழப்பில் திரிவுந் தத்தமிற் சிறிதுள வாகும் . சூ - ம் மேற் கூறியவற்றிற்கு ஓர் புறநடை கூறியது . ( - ள் ) எடுத்தல் படுத்தல் - எடுத்தல் ஓசையினாலும் படுத்தல் ஓசையினாலும் நலிதல் உழப்பில் - நலிதல் முதலான உழப்பு விகற் பங்களினாலும் திரிவும் தத்தமில் - தத்தம் எழுத்துப் பிறப்பினுள் ஒன்றுக்கொன்று வேறுபாடுகளும் சிறிதுளவாகும் - சிறிது உளவாம் என்றவாறு . ( 33 )