நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

44 பாயிரம் தாகமெடுத்தவன் குடித்தாலொத்த ஆசை உடையோனாகி, சித்திரப் பாவையின் அத்தகவடங்கி - மாடத்தில் எழுதிய சித்திரப்பாவை போலச் சலனம் இல்லாதவனாய், செவி வாயாக - செவியே சரக்கறை வாசலாக, நெஞ்சு களனாக - நெஞ்சே சரக்கறையாக, கேட்டவை கேட் டவை - கேட்ட கேட்ட நூற்பொருளை எல்லாம், விடாது உளத்தமைத்து - சிந்தை விடாது உள்ளத்திலே அமைவுபெற நிறுத்தி, போவெனப் போதல் - செல்லென்றால் செல்லுதல், என்மனார் புலவர் - என்று சொல் லுவர் புலவர் என்றவாறு. (41) 42. நூல் பயிலும் முறை நூல்பயி லியல்பே நுவலின் வழக்கறிதல் பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் ஆசாற் சார்ந்தவை யமைவரக் கேட்டல் அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் வினாதல் வினாயவை விடுத்த லென்றிவை கடனாக் கொளினே எமட நனி யிகக்கும். சூ-ம், சீடர் நூலைச் சிந்திக்கும் முறைமை இ வையெனக் கூறு கின்றது. (இ-ள்) நூல் பயில் இயல்பே நுவலின் - மாணாக்கன் நூலைச் சிந் திக்கும் முறைமையைச் சொல்லின், வழக்கறிதல் - நூலிலக்கணத் தின் வழக்கை அறிதலும், பாடம் போற்றல் - இடை விடாது பாடத் தைப் போற்றலும், கேட்டவை நினைத்தல் - கேட்ட கேட்ட பொருளை யெல்லாம் மீண்டும் மீண்டுணர்தலும், ஆசாற் சார்ந்து அவை அமைவரக் கேட்டல் - அம்மாண்புடையோர் தம்மொடு பயிறல் - தன்னொடொத்துக் கேட்கும் மாண்புடைய மாணாக்கரோடு பயிறலும், வினாதல் - அந்நூற் பொருளைத் தானாய் வினாவுதலும், வினாயவை விடுத்தல் - பிறர் வினாய பொருளுக்குத் தான் விடை கூறலும், என் றிவை கடனாக் கொளிளே - என்று சொல்லப்பட்ட இவையனைத்தும் முறைமைப்பாடாகக் கொள்ளின், மடநனி இகக்கும். அறியாமை மிகவும் நீங்கும் என்றவாறு. (42) 43. ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பிற் பெருக நூலிற் பிழைபா டிலனே. சூ-ம், நூலைக் கற்றுச் சிந்தித்துத் தெளிவோனது இயல்பு கூறு கின்றது.
44 பாயிரம் தாகமெடுத்தவன் குடித்தாலொத்த ஆசை உடையோனாகி சித்திரப் பாவையின் அத்தகவடங்கி - மாடத்தில் எழுதிய சித்திரப்பாவை போலச் சலனம் இல்லாதவனாய் செவி வாயாக - செவியே சரக்கறை வாசலாக நெஞ்சு களனாக - நெஞ்சே சரக்கறையாக கேட்டவை கேட் டவை - கேட்ட கேட்ட நூற்பொருளை எல்லாம் விடாது உளத்தமைத்து - சிந்தை விடாது உள்ளத்திலே அமைவுபெற நிறுத்தி போவெனப் போதல் - செல்லென்றால் செல்லுதல் என்மனார் புலவர் - என்று சொல் லுவர் புலவர் என்றவாறு . ( 41 ) 42 . நூல் பயிலும் முறை நூல்பயி லியல்பே நுவலின் வழக்கறிதல் பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் ஆசாற் சார்ந்தவை யமைவரக் கேட்டல் அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் வினாதல் வினாயவை விடுத்த லென்றிவை கடனாக் கொளினே எமட நனி யிகக்கும் . சூ - ம் சீடர் நூலைச் சிந்திக்கும் முறைமை வையெனக் கூறு கின்றது . ( - ள் ) நூல் பயில் இயல்பே நுவலின் - மாணாக்கன் நூலைச் சிந் திக்கும் முறைமையைச் சொல்லின் வழக்கறிதல் - நூலிலக்கணத் தின் வழக்கை அறிதலும் பாடம் போற்றல் - இடை விடாது பாடத் தைப் போற்றலும் கேட்டவை நினைத்தல் - கேட்ட கேட்ட பொருளை யெல்லாம் மீண்டும் மீண்டுணர்தலும் ஆசாற் சார்ந்து அவை அமைவரக் கேட்டல் - அம்மாண்புடையோர் தம்மொடு பயிறல் - தன்னொடொத்துக் கேட்கும் மாண்புடைய மாணாக்கரோடு பயிறலும் வினாதல் - அந்நூற் பொருளைத் தானாய் வினாவுதலும் வினாயவை விடுத்தல் - பிறர் வினாய பொருளுக்குத் தான் விடை கூறலும் என் றிவை கடனாக் கொளிளே - என்று சொல்லப்பட்ட இவையனைத்தும் முறைமைப்பாடாகக் கொள்ளின் மடநனி இகக்கும் . அறியாமை மிகவும் நீங்கும் என்றவாறு . ( 42 ) 43 . ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பிற் பெருக நூலிற் பிழைபா டிலனே . சூ - ம் நூலைக் கற்றுச் சிந்தித்துத் தெளிவோனது இயல்பு கூறு கின்றது .