நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 43 கோடலும் இவ்விருவகைக் கருத்தாய் ஈயாது அறியாமை உடை யானுக்கும், பிணக்கன் - சிற்றறி வினனாயிருந்து தன்னைப் பேரறி வினனாக மதித்து உயர்ந்தோர் கூறும் முறைச்சொல் கேளாது பிணங் குவானுக்கும், சினத்தன் - அறியாமையால் ஒருவன் தினையளவு குற் றம் வரத் தோற்றினும் அதனைப் பனையளவாகக் கொண்டு முனிவா னுக்கும், துயில்வோன் - எப்பொழுதும் துயில்வானுக்கும், மந்தன் - புத்தி நுணுக்கம் இல்லாதவனுக்கும், தொன்னூற்கு அஞ்சித் தடு மாறுளத்தன் - பழமையாகிய நூலினது தொகையை இத்துணைத் தோவென அஞ்சித் தடுமாறும் நெஞ்சுடையானுக்கும், தறுகணன் - ... பாவி - பல வகைக் கூறுபாடாகிய தீவினைகளைச் செய்வானுக் கும், படிறன் - காம மயக்கத்தாற் பிறனுடைய இல்லாளை விரும்பு வானுக்கும், இன்னோர்க்கு - இன்னோர்க்கு, பகரார் நூலே - நூலறிவை உணர்த்தார்கள் என்றவாறு. இவ்வொன்பதின்மரும் நெடுநூலைக் கற்கலாகார். இவர் தன்மை கடை மாணக்கர் தன்மையாம். 'குரங் கெறி விளாங்காய் எருமை யாடே தோணி யன்னார் இவரென மொழிப.' (40) கற்கும் முறைமை 41. கோடன் மரபே கூறுங் காலைப் பொழுதொடு சென்று வழிபடன் முனியான் குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந் திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப் பருகுவ னன்ன வார்வத்த னாகிச் சித்திரப் பாவையி னத்தக வடங்கிச் செவிவா யாக நெஞ்சுகள னாகக் கேட்டவை கேட்டவை விடா ரத் தமைத்துப் போவெனப் போத லென்மனார் புலவர். சூ-ம், நிறுத்திய முறை சீடன் கற்கும் முறைமை இதுவெனக் கூறு கின்றது. (இ-ள்) கோடன் மரபே கூறுங் காலை - சீடன் கற்கும் முறைமை யைச் சொல்லுமிடத்து, பொழுதொடு சென்று - ஓதுங்காலச் சமய மறிந்து சென்று, வழிபடன் முனியான் - வழிபடுதலிலே விருப்பமுடை யானாகி, குணத்தொடு பழகி - அவனது நன்மை சேர்ந்த குணத்தோ டொத்த பயிற்சியைப் பயின்று, அவன் குறிப்பிற் சார்ந்து - அசிரியர் கருதியதனைக் கூறி முன்னர்க் குறிப்பின் வழியே சார்ந்து, இருவென இருந்து சொல்லெனச் சொல்லி - இருவென்றால் இருந்து சொல் லென்றால் சொல்லி, பருகுவன் அன்ன ஆர்வத்தனாகி - கண்ணீர்த்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 43 கோடலும் இவ்விருவகைக் கருத்தாய் ஈயாது அறியாமை உடை யானுக்கும் பிணக்கன் - சிற்றறி வினனாயிருந்து தன்னைப் பேரறி வினனாக மதித்து உயர்ந்தோர் கூறும் முறைச்சொல் கேளாது பிணங் குவானுக்கும் சினத்தன் - அறியாமையால் ஒருவன் தினையளவு குற் றம் வரத் தோற்றினும் அதனைப் பனையளவாகக் கொண்டு முனிவா னுக்கும் துயில்வோன் - எப்பொழுதும் துயில்வானுக்கும் மந்தன் - புத்தி நுணுக்கம் இல்லாதவனுக்கும் தொன்னூற்கு அஞ்சித் தடு மாறுளத்தன் - பழமையாகிய நூலினது தொகையை இத்துணைத் தோவென அஞ்சித் தடுமாறும் நெஞ்சுடையானுக்கும் தறுகணன் - ... பாவி - பல வகைக் கூறுபாடாகிய தீவினைகளைச் செய்வானுக் கும் படிறன் - காம மயக்கத்தாற் பிறனுடைய இல்லாளை விரும்பு வானுக்கும் இன்னோர்க்கு - இன்னோர்க்கு பகரார் நூலே - நூலறிவை உணர்த்தார்கள் என்றவாறு . இவ்வொன்பதின்மரும் நெடுநூலைக் கற்கலாகார் . இவர் தன்மை கடை மாணக்கர் தன்மையாம் . ' குரங் கெறி விளாங்காய் எருமை யாடே தோணி யன்னார் இவரென மொழிப . ' ( 40 ) கற்கும் முறைமை 41 . கோடன் மரபே கூறுங் காலைப் பொழுதொடு சென்று வழிபடன் முனியான் குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந் திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப் பருகுவ னன்ன வார்வத்த னாகிச் சித்திரப் பாவையி னத்தக வடங்கிச் செவிவா யாக நெஞ்சுகள னாகக் கேட்டவை கேட்டவை விடா ரத் தமைத்துப் போவெனப் போத லென்மனார் புலவர் . சூ - ம் நிறுத்திய முறை சீடன் கற்கும் முறைமை இதுவெனக் கூறு கின்றது . ( - ள் ) கோடன் மரபே கூறுங் காலை - சீடன் கற்கும் முறைமை யைச் சொல்லுமிடத்து பொழுதொடு சென்று - ஓதுங்காலச் சமய மறிந்து சென்று வழிபடன் முனியான் - வழிபடுதலிலே விருப்பமுடை யானாகி குணத்தொடு பழகி - அவனது நன்மை சேர்ந்த குணத்தோ டொத்த பயிற்சியைப் பயின்று அவன் குறிப்பிற் சார்ந்து - அசிரியர் கருதியதனைக் கூறி முன்னர்க் குறிப்பின் வழியே சார்ந்து இருவென இருந்து சொல்லெனச் சொல்லி - இருவென்றால் இருந்து சொல் லென்றால் சொல்லி பருகுவன் அன்ன ஆர்வத்தனாகி - கண்ணீர்த்