நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

34 பாயிரம் முதலாமின இலக்கணம் சொல்லுவது செய்கைச் சூத்திரமாயினும், கொண்டியல் புறநடை - இவற்றைக்கொண்டு இவ்விலக்கணம் வழு வாமற்கு வருமியல்பு சொல்லுவது புறநடைச் சூத்திரமாயினும், கூற்றன சூத்திரம் - இவ்வாறு வகைக் கூறுபாடு உடையது சூத்தி ரங்களாம் என்றவாறு. (21) 22. உரையின் பொது இலக்கணம் பாடங் கருத்தே சொல்வகை சொற்பொருள் தொகுத்துரை யுதாரணம் வினாவிடை விசேடம் விரிவதி காரந் துணிவு பயனோ டாசிரிய வசனமென் றீரே ழுரையே. சூ-ம், பதினான்கு வகை உரை பெறும் சூத்திரங்களெனக் கூறு கின்றது. (இ-ள்) பாடம் - பாடம் சொல்லுதலும், கருத்தே - சூத்திரக் கருத்து உரைத்தலும், சூத்திரத்து உட்கோள் உரைத்தல் என்றுமாம், சொல் வகை - சூத்திரங்களிலும் சொற்களையெல்லாம் வகுத்து எழுத்துச் சந்தி சொற் சந்தி கூறுதலும், சொற் பொருள் - தனித்தனியே பதப் பொருள் உணர்த்தலும் என்னை? “சொற்றொறுஞ் சொற் றொறுஞ் துணிபொருள் உணர்த்தல் கற்ற புலவர் கண்ணழி யென்ப ," தொகுத்துரை - பதப்பொருளையெல்லாம் கூட்டிப் பிண்டமாக்கிப் பொழிப்புரையாக உரைத்தலும், உதாரணம் கூறப்பட்ட இலக் கணத்திற்கு இலக்கியமாகிய உதாரணம் காட்டலும், துணிவு - இச் சொற்கு இதுவே பொருள் இச்சொற்கு இதுவே இலக்கண மெனத் துணிவு கூறலும், பயனொடு - சொற்றொறும் அளாவிய பொருளை யெல்லாம் கூட்டிப் பயனிதுவென உடன்படுத்தலும், ஆசிரிய வசனம் கூடிய இலக்கணத்திற்குச் சரியாக ஆசிரியவசனம் காட்டலும், என்று ஈரேழுரையே - என்னும் இப் பதினான்கு பகுதியையும் உரைக் கப்படும் சூத்திரப் பொருள் என்றவாறு. (22) காண்டிகை உரை 23. கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும் அவற்றொடு வினாவிடை யாக்க லானும் சூத்திரத் துட்பொரு டோற்றுவ காண்டிகை. சூ-ம், காண்டிகை உரையாமாறு கூறுகின்றது.
34 பாயிரம் முதலாமின இலக்கணம் சொல்லுவது செய்கைச் சூத்திரமாயினும் கொண்டியல் புறநடை - இவற்றைக்கொண்டு இவ்விலக்கணம் வழு வாமற்கு வருமியல்பு சொல்லுவது புறநடைச் சூத்திரமாயினும் கூற்றன சூத்திரம் - இவ்வாறு வகைக் கூறுபாடு உடையது சூத்தி ரங்களாம் என்றவாறு . ( 21 ) 22 . உரையின் பொது இலக்கணம் பாடங் கருத்தே சொல்வகை சொற்பொருள் தொகுத்துரை யுதாரணம் வினாவிடை விசேடம் விரிவதி காரந் துணிவு பயனோ டாசிரிய வசனமென் றீரே ழுரையே . சூ - ம் பதினான்கு வகை உரை பெறும் சூத்திரங்களெனக் கூறு கின்றது . ( - ள் ) பாடம் - பாடம் சொல்லுதலும் கருத்தே - சூத்திரக் கருத்து உரைத்தலும் சூத்திரத்து உட்கோள் உரைத்தல் என்றுமாம் சொல் வகை - சூத்திரங்களிலும் சொற்களையெல்லாம் வகுத்து எழுத்துச் சந்தி சொற் சந்தி கூறுதலும் சொற் பொருள் - தனித்தனியே பதப் பொருள் உணர்த்தலும் என்னை ? சொற்றொறுஞ் சொற் றொறுஞ் துணிபொருள் உணர்த்தல் கற்ற புலவர் கண்ணழி யென்ப தொகுத்துரை - பதப்பொருளையெல்லாம் கூட்டிப் பிண்டமாக்கிப் பொழிப்புரையாக உரைத்தலும் உதாரணம் கூறப்பட்ட இலக் கணத்திற்கு இலக்கியமாகிய உதாரணம் காட்டலும் துணிவு - இச் சொற்கு இதுவே பொருள் இச்சொற்கு இதுவே இலக்கண மெனத் துணிவு கூறலும் பயனொடு - சொற்றொறும் அளாவிய பொருளை யெல்லாம் கூட்டிப் பயனிதுவென உடன்படுத்தலும் ஆசிரிய வசனம் கூடிய இலக்கணத்திற்குச் சரியாக ஆசிரியவசனம் காட்டலும் என்று ஈரேழுரையே - என்னும் இப் பதினான்கு பகுதியையும் உரைக் கப்படும் சூத்திரப் பொருள் என்றவாறு . ( 22 ) காண்டிகை உரை 23 . கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும் அவற்றொடு வினாவிடை யாக்க லானும் சூத்திரத் துட்பொரு டோற்றுவ காண்டிகை . சூ - ம் காண்டிகை உரையாமாறு கூறுகின்றது .