நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 33 (இ-ள்) சில்வகை எழுத்திற் - பல சொற்பொருளையும் அடக்கிய சில எழுத்துக்கூடிய சில சொற்களாலே, பல் வகைப் பொருளைச் - பல வேறு வகைப்பட்ட தொலைவற்ற பொருளையும் பயப்பதாய், செவ் வன் ஆடியிற் - செவ்விதாகிய கண்ணாடியிற் சிறிய பொருள் பெரிய ; பொருளாகத் தோன்றுவ போலவும் அல்லது சிறிய கண்ணாடியிற் பெரிய பொருளெல்லாம் காட்டினது போலவும், செறிந்து இனிது விளக்கி - பொருந்திய பல பொருளையும் இனிதாக விளக்கி, திட்பம் - வலிதாகிய கட்டுரையாகவும், நுட்பம் - நுணுக்கமாகிய பொருளாக வும், சிறந்தன சூத்திரம் - சிறந்து விளங்கப்படுவன சூத்திர நிலை யாம் என்றவாறு. (19) சூத்திரப் பொருள்கோள் நிலை 20. ஆற்றொழுக் கரிமா நோக்கந் தவளைப் பாய்த்துப் பருந்தின் வீழ் வன்னசூத் திர நிலை சூ-ம், சூத்திரப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) ஆற்றொழுக்கு - ஆற்று மணல் அற்றற்று ஒழுகுவது போலச் சொற்றொறும் பொருள் அற்று வருவதும் ஆற்று நீர் ஒழுக்கம் போலப் பொருள் தொடர்ச்சி பின்னோக்காமல் வருவதும், அரிமா நோக்கம் - ஒரு காலத்தில் இரு பக்கமும் நோக்கி அறியும் சிங்க நோக்குப் போல இடையினின்ற சொல் முதலினும் ஈற்றினும் சென்று பொருள் கொள்ளுவதும், தவளைப் பாய்த்து - தவளை பாய்தல் போல ஒரு சொல் தன்னையடுத்த சொல்லை விட்டு அயற் சொல்லொடு தாவிப் பொருள் கொள்வதும், பருந்தின் வீழ்வு - ஆகாயத்தின் கண் வட்ட மிட்ட. பருந்து எவ்விடத்தேனும் இரை கண்டு வீழ்வது போல ஒரு சொல் எவ்விடத்தேனும் சென்று பொருள்களாவது, அன்ன சூத்திர நிலை - இவை போல்வன பிறவும் சூத்திரப் பொருள்கோள் நிலை யாம் என்றவாறு. (20) சூத்திர வகை 21. பிண்டந் தொகைவகை குறியே செய்கை கொண்டியல் புறநடைக் கூற்றன சூத்திரம் சூ-ம், சூத்திரத்தின் பகுதி இத்துணையெனக் கூறுகின்றது. (இ-ள்) பிண்டம் - பிண்டச் சூத்திரமாயினும், தொகை - தொகைப் பொரு ளாகச் சொல்லுவது தொகைச் சூத்திரமாயினும், வகை - வகைப் படுத்து உரைப்பது வகைச் சூத்திரமாயினும், குறியே - பெயராகிய குறியிட வருவது குறிச் சூத்திரமாயினும், செய்கை - சொற் புணர்ச்சி
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 33 ( - ள் ) சில்வகை எழுத்திற் - பல சொற்பொருளையும் அடக்கிய சில எழுத்துக்கூடிய சில சொற்களாலே பல் வகைப் பொருளைச் - பல வேறு வகைப்பட்ட தொலைவற்ற பொருளையும் பயப்பதாய் செவ் வன் ஆடியிற் - செவ்விதாகிய கண்ணாடியிற் சிறிய பொருள் பெரிய ; பொருளாகத் தோன்றுவ போலவும் அல்லது சிறிய கண்ணாடியிற் பெரிய பொருளெல்லாம் காட்டினது போலவும் செறிந்து இனிது விளக்கி - பொருந்திய பல பொருளையும் இனிதாக விளக்கி திட்பம் - வலிதாகிய கட்டுரையாகவும் நுட்பம் - நுணுக்கமாகிய பொருளாக வும் சிறந்தன சூத்திரம் - சிறந்து விளங்கப்படுவன சூத்திர நிலை யாம் என்றவாறு . ( 19 ) சூத்திரப் பொருள்கோள் நிலை 20 . ஆற்றொழுக் கரிமா நோக்கந் தவளைப் பாய்த்துப் பருந்தின் வீழ் வன்னசூத் திர நிலை சூ - ம் சூத்திரப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது . ( - ள் ) ஆற்றொழுக்கு - ஆற்று மணல் அற்றற்று ஒழுகுவது போலச் சொற்றொறும் பொருள் அற்று வருவதும் ஆற்று நீர் ஒழுக்கம் போலப் பொருள் தொடர்ச்சி பின்னோக்காமல் வருவதும் அரிமா நோக்கம் - ஒரு காலத்தில் இரு பக்கமும் நோக்கி அறியும் சிங்க நோக்குப் போல இடையினின்ற சொல் முதலினும் ஈற்றினும் சென்று பொருள் கொள்ளுவதும் தவளைப் பாய்த்து - தவளை பாய்தல் போல ஒரு சொல் தன்னையடுத்த சொல்லை விட்டு அயற் சொல்லொடு தாவிப் பொருள் கொள்வதும் பருந்தின் வீழ்வு - ஆகாயத்தின் கண் வட்ட மிட்ட . பருந்து எவ்விடத்தேனும் இரை கண்டு வீழ்வது போல ஒரு சொல் எவ்விடத்தேனும் சென்று பொருள்களாவது அன்ன சூத்திர நிலை - இவை போல்வன பிறவும் சூத்திரப் பொருள்கோள் நிலை யாம் என்றவாறு . ( 20 ) சூத்திர வகை 21 . பிண்டந் தொகைவகை குறியே செய்கை கொண்டியல் புறநடைக் கூற்றன சூத்திரம் சூ - ம் சூத்திரத்தின் பகுதி இத்துணையெனக் கூறுகின்றது . ( - ள் ) பிண்டம் - பிண்டச் சூத்திரமாயினும் தொகை - தொகைப் பொரு ளாகச் சொல்லுவது தொகைச் சூத்திரமாயினும் வகை - வகைப் படுத்து உரைப்பது வகைச் சூத்திரமாயினும் குறியே - பெயராகிய குறியிட வருவது குறிச் சூத்திரமாயினும் செய்கை - சொற் புணர்ச்சி