நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

30 பாயிரம் சொல்லுவதும், மிகைபடக் கூறல் - எழுத்தும் சொல்லும் பொருளும் சொல்லுமெனத் தொடங்கி யாப்பிலக்கணம் கூறுதலும், கூறியது கூறல் - எழுத்திலக்கணம் கூறிச் சொல்லிலக்கணம் கூறப் புகுந் தவர் மீண்டும் எழுத்திலக்கணத்தைக் கூறதலும், மாறுகொளக் கூறல் - தாம் முன்னர் விதித்த இலக்கணத்திற்குப் பின்னர் மாறு பாடாகக் கூறுதலும், வழூஉச் சொற் புணர்த்தல் - இலக்கண விதி மில்லாத வழுவான சொற்களைப் புணர்த்தலும், மயங்க வைத்தல் - கற்றோர்க்கும் பொருள் மயங்க வைத்தலும், வெற்றெனத் தொடுத் தல் - பயனில்லாத சொற்களைப் பயத்தலும், மற்றொன்று விரித்தல் - தமிழ் இலக்கணம் சொல்லுவோமெனத் தொடங்கி வடசொல் இலக் கணம் சொல்லுதலும், சென்று தேய்ந்து இறுதல் - சொல்லின்பம் பொருளின்பம் பயப்பத் தொடங்கி வரவரத் தேய்தலும், நின்று பயன் இன்மை - மோனை முதலாகிய இலக்கணம் வழுவாது வைத்துப் பொருளிற் பயினின்றி முடித்தலும், என்றிவை ஈரைங் குற்ற நூற்கே - எனக் கூறிய இப்பத்து நூற்குக் குற்றமாம் என்றவாறு. (13) பத்து அழகு 14. சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல் ஓசை யுடைமை யாழமுடைத் தாதல் முறையின் வைப்பே யுலகமலை யாமை விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த தாகுத னூலிற் கழகெனும் பத்தே சூ-ம், பத்துப் பெருமையாவன இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) சுருங்கச் சொல்லல் - பல் வகைப்பட்ட பொருளும் விளங்கத் தொகைநிலைச் சொல்லாகச் சுருங்கச் சொல்லுதலும், விளங்க வைத் தல் - இன் இலை மறை காய்போல ஆழ்ந்த பொருளையும் விளங்கிக் கிடக்க வைத்தலும், நவின்றோர்க்கு இனிமை நன்மொழி புணர்த்தல் - கூறினோர்க்கு இனிமையாகிய மொழிகளைப் புணர்த்தலும், கதலி பாகம் என்றுமாம், ஓசை உடைமை - நாவுக்கு இசைந்த ஒழுங்குள்ள ஓசையைப் பயத்தலும், ஆழம் உடைத்தாதல் - கயிற்றுக் கோணி விளங்காய் போல வெளிப்பட்டும் எடுக்கக் கூடாது ஆழ்ந்த பொரு ளாக வைத்தலும், நாளிகேர பாகம் என்றுமாம், முறையின் வைப்பே - ஒன்றற்கு ஒன்று ஏற்றம் குறைவு கண்டு ஒன்றன் பின்னொன்று வரன் முறையாக வைத்தலும், உலக மலையாமை - கற்றுணர்ந்தோர்க்கு மலையாத பொருளாகக் கொடுத்துக் கூறலும், விழுமியது பயத்தல் - உயர்ச்சியுள்ள பயனாகத் தோற்றலும், விளங்கு உதாரணத்தாகுதல் -
30 பாயிரம் சொல்லுவதும் மிகைபடக் கூறல் - எழுத்தும் சொல்லும் பொருளும் சொல்லுமெனத் தொடங்கி யாப்பிலக்கணம் கூறுதலும் கூறியது கூறல் - எழுத்திலக்கணம் கூறிச் சொல்லிலக்கணம் கூறப் புகுந் தவர் மீண்டும் எழுத்திலக்கணத்தைக் கூறதலும் மாறுகொளக் கூறல் - தாம் முன்னர் விதித்த இலக்கணத்திற்குப் பின்னர் மாறு பாடாகக் கூறுதலும் வழூஉச் சொற் புணர்த்தல் - இலக்கண விதி மில்லாத வழுவான சொற்களைப் புணர்த்தலும் மயங்க வைத்தல் - கற்றோர்க்கும் பொருள் மயங்க வைத்தலும் வெற்றெனத் தொடுத் தல் - பயனில்லாத சொற்களைப் பயத்தலும் மற்றொன்று விரித்தல் - தமிழ் இலக்கணம் சொல்லுவோமெனத் தொடங்கி வடசொல் இலக் கணம் சொல்லுதலும் சென்று தேய்ந்து இறுதல் - சொல்லின்பம் பொருளின்பம் பயப்பத் தொடங்கி வரவரத் தேய்தலும் நின்று பயன் இன்மை - மோனை முதலாகிய இலக்கணம் வழுவாது வைத்துப் பொருளிற் பயினின்றி முடித்தலும் என்றிவை ஈரைங் குற்ற நூற்கே - எனக் கூறிய இப்பத்து நூற்குக் குற்றமாம் என்றவாறு . ( 13 ) பத்து அழகு 14 . சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல் ஓசை யுடைமை யாழமுடைத் தாதல் முறையின் வைப்பே யுலகமலை யாமை விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த தாகுத னூலிற் கழகெனும் பத்தே சூ - ம் பத்துப் பெருமையாவன இவையெனக் கூறுகின்றது . ( - ள் ) சுருங்கச் சொல்லல் - பல் வகைப்பட்ட பொருளும் விளங்கத் தொகைநிலைச் சொல்லாகச் சுருங்கச் சொல்லுதலும் விளங்க வைத் தல் - இன் இலை மறை காய்போல ஆழ்ந்த பொருளையும் விளங்கிக் கிடக்க வைத்தலும் நவின்றோர்க்கு இனிமை நன்மொழி புணர்த்தல் - கூறினோர்க்கு இனிமையாகிய மொழிகளைப் புணர்த்தலும் கதலி பாகம் என்றுமாம் ஓசை உடைமை - நாவுக்கு இசைந்த ஒழுங்குள்ள ஓசையைப் பயத்தலும் ஆழம் உடைத்தாதல் - கயிற்றுக் கோணி விளங்காய் போல வெளிப்பட்டும் எடுக்கக் கூடாது ஆழ்ந்த பொரு ளாக வைத்தலும் நாளிகேர பாகம் என்றுமாம் முறையின் வைப்பே - ஒன்றற்கு ஒன்று ஏற்றம் குறைவு கண்டு ஒன்றன் பின்னொன்று வரன் முறையாக வைத்தலும் உலக மலையாமை - கற்றுணர்ந்தோர்க்கு மலையாத பொருளாகக் கொடுத்துக் கூறலும் விழுமியது பயத்தல் - உயர்ச்சியுள்ள பயனாகத் தோற்றலும் விளங்கு உதாரணத்தாகுதல் -