நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 269 ஆர்த்தான், கூவினான், பாடினான்; உயிர்ப்பொருள் இசைத்தல். கடல் ஒலித்தது, மழை முழங்கிற்று, இடி இடித்தது; உயிரில் பொருள் இசைத்தல், பயந்தாள், கொடுத்தான் உயிர்ப்பொருள் ஈதல், மழை பயந்தது, கொடுத்தது உயிரில் பொருள் ஈதல் எனவும் முறையே காண்க. (14) ஒரு பண்பிற்குரிய உரிச்சொல் 455. சால வுறுதவ நனிகூர் கழிமிகல். சூ-ம், ஒரு பண்பிற்குரிய உரிச்சொல் இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) சால - ) - “பருவந்து சாலப் பலர்கொலென் றெண்ணி”, உறு - “உறுவளி தூக்கு முயர்சினை மாவின்” (கலி.84), தவ - “தவச் சேய் நாட்டா ராயினும்” (நற்.115), நனி - “நனிபே தையே நயனில் கூற்றம்” (புறம்.227), கூர் - “பொறை நில்லா நோய்கூரப் புல் லென்ற” (கலி.3), கழி - “சினனே காமங்கழிகண் ணோட்டம்” (பதிற். 22), மிகல் இவ்வாறு உரிச்சொல் மிகுதியின் பொருண்மை விளக்கும் பெயர்களாம் என்றவாறு. (15) பல பண்பிற்குரிய ஓர் உரிச்சொல் 456. கடியென் கிளவி காப்பே கூர்மை விரையே விளக்க மச்சஞ் சிறப்பே விரைவே மிகுதி புதுமை யார்த்தல் வரைவே மன்றல் கரிப்பி னாகும். சூ-ம், பல பண்பிற்குரிய உரிச்சொல் இதுவெனக் கூறுகின்றது. (இ-ள்) கடியென் கிளவி - கடியென்று சொல்லப்படும் உரிச்சொல், காப்பு - “ஒண்சுடர் நல்லி லருங்கடி நீவி” (அகம்.7) எனக் காப்புப் பொருண்மையிலும், கூர்மை - “கடிநுனைப் பகழி” எனக் கூர்மையின் கண்ணும், விரையே - “கடிமாலை சூடி” (சீவக.1574) என நாற்றத் தின் கண்ணும், விளக்கம் - “கண்ணாடி யன்ன கடிமார்பன்” (சீவக. 2327) என விளக்கத்தின் கண்ணும், அச்சம் - “கடியர மகளிர்க்கும் கைவிளக்காகி” என அச்சத்தின் கண்ணும், சிறப்பே - “கடிமலர் மிசை பூத்துக் கம்புளோ டன்ன மார்க்கும்” எனச் சிறப்பின்கண்ணும், விரைவே - “எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மின்” (புறம்.9), மிகுதி - “கடி யுண் கடவுட் கிட்ட செழுங்குரல்” (குறு.105), புதுமை - புதிதுண்ட கடவுள் எனப் புதுமைக்கண்ணும், ஆர்த்தல் - “அளந்தறியாப் பல பண்ட ... அருங்கடிப் பெருங்காப்பின்” (பட்டின.131-33) என யாப் புடைக் காப்பின் கண்ணும், வரைவே - “கடித்துக் கரும்பினை” (நாலடி. 156), ஊர் கடிந்தான் என வரைதற்கண்ணும், மன்றல் -
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 269 ஆர்த்தான் கூவினான் பாடினான் ; உயிர்ப்பொருள் இசைத்தல் . கடல் ஒலித்தது மழை முழங்கிற்று இடி இடித்தது ; உயிரில் பொருள் இசைத்தல் பயந்தாள் கொடுத்தான் உயிர்ப்பொருள் ஈதல் மழை பயந்தது கொடுத்தது உயிரில் பொருள் ஈதல் எனவும் முறையே காண்க . ( 14 ) ஒரு பண்பிற்குரிய உரிச்சொல் 455. சால வுறுதவ நனிகூர் கழிமிகல் . சூ - ம் ஒரு பண்பிற்குரிய உரிச்சொல் இவையெனக் கூறுகின்றது . ( - ள் ) சால - ) - பருவந்து சாலப் பலர்கொலென் றெண்ணி உறு - உறுவளி தூக்கு முயர்சினை மாவின் ( கலி .84 ) தவ - தவச் சேய் நாட்டா ராயினும் ( நற் .115 ) நனி - நனிபே தையே நயனில் கூற்றம் ( புறம் .227 ) கூர் - பொறை நில்லா நோய்கூரப் புல் லென்ற ( கலி .3 ) கழி - சினனே காமங்கழிகண் ணோட்டம் ( பதிற் . 22 ) மிகல் இவ்வாறு உரிச்சொல் மிகுதியின் பொருண்மை விளக்கும் பெயர்களாம் என்றவாறு . ( 15 ) பல பண்பிற்குரிய ஓர் உரிச்சொல் 456. கடியென் கிளவி காப்பே கூர்மை விரையே விளக்க மச்சஞ் சிறப்பே விரைவே மிகுதி புதுமை யார்த்தல் வரைவே மன்றல் கரிப்பி னாகும் . சூ - ம் பல பண்பிற்குரிய உரிச்சொல் இதுவெனக் கூறுகின்றது . ( - ள் ) கடியென் கிளவி - கடியென்று சொல்லப்படும் உரிச்சொல் காப்பு - ஒண்சுடர் நல்லி லருங்கடி நீவி ( அகம் .7 ) எனக் காப்புப் பொருண்மையிலும் கூர்மை - கடிநுனைப் பகழி எனக் கூர்மையின் கண்ணும் விரையே - கடிமாலை சூடி ( சீவக .1574 ) என நாற்றத் தின் கண்ணும் விளக்கம் - கண்ணாடி யன்ன கடிமார்பன் ( சீவக . 2327 ) என விளக்கத்தின் கண்ணும் அச்சம் - கடியர மகளிர்க்கும் கைவிளக்காகி என அச்சத்தின் கண்ணும் சிறப்பே - கடிமலர் மிசை பூத்துக் கம்புளோ டன்ன மார்க்கும் எனச் சிறப்பின்கண்ணும் விரைவே - எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மின் ( புறம் .9 ) மிகுதி - கடி யுண் கடவுட் கிட்ட செழுங்குரல் ( குறு .105 ) புதுமை - புதிதுண்ட கடவுள் எனப் புதுமைக்கண்ணும் ஆர்த்தல் - அளந்தறியாப் பல பண்ட ... அருங்கடிப் பெருங்காப்பின் ( பட்டின.131-33 ) என யாப் புடைக் காப்பின் கண்ணும் வரைவே - கடித்துக் கரும்பினை ( நாலடி . 156 ) ஊர் கடிந்தான் என வரைதற்கண்ணும் மன்றல் -