நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

ஐந்தாவது உரிச்சொல்லியல் உரிச்சொல்லின் பொதுவியல்பு 441. பலவகைப் பண்பும் பகர்பெய ராகி ஒருகுணம் பலகுணந் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல். சூ-ம், உரிச்சொல்லினது இயல்பு கூறுகின்றது. (இ-ள்) பலவகைப் பண்பும் - குணப்பண்பு தொழிற்பண்பு முதலாகிய பலவகைப் பட்ட பண்புகளையும், பகர்பெயராகி - அறிவிப்பனவான பெயர்ச்சொல்லாகி, ஒருகுணம் பலகுணந்தழுவி - ஒரு குணத்துக்கே உரியவாகியும் பல குணத்துக்கே உரியவாகியும், பெயர்வினை ஒருவா - ஏனைப் பெயர்ச் சொல்லையும் வினைச்சொல்லையும் தழுவி, செய்யுட் குரியன - செய்யுட்கே வரும் உரிமையுடையன, உரிச்சொல் - உரிச்சொல்லாவது என்றவாறு. உரிய சொல் யாது அது உரிச்சொல்லென்க. உ-ம்: “உறுபுகழ்”, “தவச்சேய் நாட்டா ரானும்” (நற்.115), “நனிபேதையே” (புறம்.227), “புண்கூர் யானை” எனவும் சாலக் கொண்டான், தவச் சென்றான், நனி சொன்னான், நோய் கூர்ந்தது எனவும் பெயரொடும் வினையொடும் வந்தவாறு காண்க. பெயர் வினைகட்கு பின் முன் வரும் என்னாமையின் ஏற்பது வருமென்க. (1) பண்பு இன்னதென்பது 442. உயிருயி ரில்லதாம் பொருட்குணம் பண்பே. சூ-ம், மேற் “பண்பு” என்றார்; அஃது இஃதெனக் கூறுகின்றது.
ஐந்தாவது உரிச்சொல்லியல் உரிச்சொல்லின் பொதுவியல்பு 441 . பலவகைப் பண்பும் பகர்பெய ராகி ஒருகுணம் பலகுணந் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல் . சூ - ம் உரிச்சொல்லினது இயல்பு கூறுகின்றது . ( - ள் ) பலவகைப் பண்பும் - குணப்பண்பு தொழிற்பண்பு முதலாகிய பலவகைப் பட்ட பண்புகளையும் பகர்பெயராகி - அறிவிப்பனவான பெயர்ச்சொல்லாகி ஒருகுணம் பலகுணந்தழுவி - ஒரு குணத்துக்கே உரியவாகியும் பல குணத்துக்கே உரியவாகியும் பெயர்வினை ஒருவா - ஏனைப் பெயர்ச் சொல்லையும் வினைச்சொல்லையும் தழுவி செய்யுட் குரியன - செய்யுட்கே வரும் உரிமையுடையன உரிச்சொல் - உரிச்சொல்லாவது என்றவாறு . உரிய சொல் யாது அது உரிச்சொல்லென்க . - ம் : உறுபுகழ் தவச்சேய் நாட்டா ரானும் ( நற் .115 ) நனிபேதையே ( புறம் .227 ) புண்கூர் யானை எனவும் சாலக் கொண்டான் தவச் சென்றான் நனி சொன்னான் நோய் கூர்ந்தது எனவும் பெயரொடும் வினையொடும் வந்தவாறு காண்க . பெயர் வினைகட்கு பின் முன் வரும் என்னாமையின் ஏற்பது வருமென்க . ( 1 ) பண்பு இன்னதென்பது 442. உயிருயி ரில்லதாம் பொருட்குணம் பண்பே . சூ - ம் மேற் பண்பு என்றார் ; அஃது இஃதெனக் கூறுகின்றது .