நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 259 மற்றையதென்னும் இடைச்செல் 433. மற்றைய தென்பது கட்டிய தற்கினம். சூ-ம், மற்றையதென்னும் இடைச்சொல் வருமிடம் கூறுகின்றது. (இ-ள்) மற்றைய தென்பது - மற்றையதென்று சொல்லப்படும் இடைச் சொல், சுட்டிய தற்கினம் - சுட்டியதனை ஒழிய இதற்கு இனமான பிறிதொன்றனைக் காட்டும் என்றவாறு. உ-ம்: பல பொத்தகங் கிடப்புழி ஏவலாளனைப் பொத்தகம் கொண்டுவா என்றால் அவன் ஒரு பொத்தகம் கொடுவந்த விடத்தில் தான் கருதியது அன்றெனில் மற்றையது கொணர வேண்டும் என்றால் கொணர்ந்ததன் இனமதனைச் சுட்டிற்று ஆகலான் அதனையொழித்து அதற்கினமான பொத்தகம் கொணர வேண்டும் என்பதாம். (15) கொல்லென்னும் இடைச்சொல் 434. கொல்லே யைய மசைநிலைக் கூற்றே. சூ-ம், கொல்லென்னும் இடைச்சொல் வருமிடம் கூறுகின்றது. (இ-ள்) கொல்லே - கொல்லென்று சொல்லப்படும் இடைச் சொல், ஐயம் - ஒரு பொருளை ஐயப்பாடு செய்யும் பொருண்மைக் கண்ணும், அசைநிலை - அசைநிலைப் பொருண்மைக்கண்ணும், கூற்றே - ஆன இவ்விரு கூற்றின்கண்ணதாம் என்றவாறு. உ-ம்: குற்றிகொல்லோ? மகன்கொல்லோ? என்பது ஐயத்தின் கண் வந்தது. பிரிவெண்ணிக்கொல்லோ என்பது அசைநிலை. (16) ஒடு தெய்ய என்னும் இடைச்சொற்கள் 435. ஒடுவுந் தெய்யவு மிசைநிறை மொழியே. சூ-ம், ஒடு தெய்ய என்னும் இரண்டு இடைச்சொல்லும் வருமிடம் கூறுகின்றது. (இ-ள்) ஒடுவுந் தெய்யவும் - ஒடுவென்னும் இடைச் சொல்லும் தெய்யவென்னும் இடைச்சொல்லும், இசைநிறை மொழியே - இசை நிறைத்தற்கண் வரும் சொற்களாம் என்றவாறு. * உ-ம்: முதைப்புனங் கொன்ற வார்கலி யுழவர் விதைக்குறு வட்டி போதொடு போதுள (குறு.155),
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 259 மற்றையதென்னும் இடைச்செல் 433. மற்றைய தென்பது கட்டிய தற்கினம் . சூ - ம் மற்றையதென்னும் இடைச்சொல் வருமிடம் கூறுகின்றது . ( - ள் ) மற்றைய தென்பது - மற்றையதென்று சொல்லப்படும் இடைச் சொல் சுட்டிய தற்கினம் - சுட்டியதனை ஒழிய இதற்கு இனமான பிறிதொன்றனைக் காட்டும் என்றவாறு . - ம் : பல பொத்தகங் கிடப்புழி ஏவலாளனைப் பொத்தகம் கொண்டுவா என்றால் அவன் ஒரு பொத்தகம் கொடுவந்த விடத்தில் தான் கருதியது அன்றெனில் மற்றையது கொணர வேண்டும் என்றால் கொணர்ந்ததன் இனமதனைச் சுட்டிற்று ஆகலான் அதனையொழித்து அதற்கினமான பொத்தகம் கொணர வேண்டும் என்பதாம் . ( 15 ) கொல்லென்னும் இடைச்சொல் 434. கொல்லே யைய மசைநிலைக் கூற்றே . சூ - ம் கொல்லென்னும் இடைச்சொல் வருமிடம் கூறுகின்றது . ( - ள் ) கொல்லே - கொல்லென்று சொல்லப்படும் இடைச் சொல் ஐயம் - ஒரு பொருளை ஐயப்பாடு செய்யும் பொருண்மைக் கண்ணும் அசைநிலை - அசைநிலைப் பொருண்மைக்கண்ணும் கூற்றே - ஆன இவ்விரு கூற்றின்கண்ணதாம் என்றவாறு . - ம் : குற்றிகொல்லோ ? மகன்கொல்லோ ? என்பது ஐயத்தின் கண் வந்தது . பிரிவெண்ணிக்கொல்லோ என்பது அசைநிலை . ( 16 ) ஒடு தெய்ய என்னும் இடைச்சொற்கள் 435. ஒடுவுந் தெய்யவு மிசைநிறை மொழியே . சூ - ம் ஒடு தெய்ய என்னும் இரண்டு இடைச்சொல்லும் வருமிடம் கூறுகின்றது . ( - ள் ) ஒடுவுந் தெய்யவும் - ஒடுவென்னும் இடைச் சொல்லும் தெய்யவென்னும் இடைச்சொல்லும் இசைநிறை மொழியே - இசை நிறைத்தற்கண் வரும் சொற்களாம் என்றவாறு . * - ம் : முதைப்புனங் கொன்ற வார்கலி யுழவர் விதைக்குறு வட்டி போதொடு போதுள ( குறு .155 )