நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

256 சொல்லதிகாரம் - இடைச்சொல்லியல் எனவும்; சாத்தனென்றா கொற்றனென்றா தேவனென்றா மூவ ரும் வந்தார் எனவும்; சாத்தனெனா கொற்றனெனா இருவரும் வந்தார் எனவும் நான்கெண்ணும் முறையே தொகை பெற்றன. இனி நிலனும் நீரும் தீயும் நல்லவாம் எனவும்; சாத்தனென்று கொற்றனென்று தேவனென்று சொல்லப்பட்டவர் வந்தார்; நிலனென நீரெனத் தீயென வளியென ஆகாயமென அறிகுதும்; பொன்னொடும் தேரொடும் தானையிற் பொலிந்தேன் எனவும் முறையே நான்கும் தொகையின்றி வந்தன. நிலனும் நீரும் இரண்டும் வேண்டுமெனத் தொகை பெறலுமாம். (9) சில எண்ணிடைச் சொற்களுக்குச் சிறப்பு விதி 428. என்று மெனவு மொடுவு மொரோவழி நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும். சூ-ம், என்று என ஒடு என்னும் இம் மூன்று எண்ணிற்கும் ஆவதோர் இயல்பு கூறியது. (இ-ள்) என்று மெனவு மொடுவும் - என்றும், எனவும், ஒடு மூன்று இடைச்சொல்லும், ஒரோவழி நின்றும் - எண்ணின்கண் ஓரிடத்தே நின்றனவேனும், பிரிந்தெண் பொருடொறு நேரும் - அது பிரிந்து எண்ணும் பொருடொறுஞ் செல்லும் என்றவாறு. உ-ம்: வினைபகை யென்றிரண்டி னெச்சம் (குறள். 674) பகைபாவ மச்சம் பழியென நான்கு மிகவாவா மில்லிறப்பான் கண் (குறள்.146), பொருள் கருவி காலம் வினையிடனொ டைந்து மிருடீர எண்ணிச் செயல் (குறள்.675) என இரண்டிடத்தும் மூன்றிடத்தும் நான் கிடத்தும் என்றும், எனவும், ஒடுவும் எண்ணி வந்தன. பிறவுமன்ன. (10) சில எண்ணிடைச்சொற்கள் வினையொடு வருமாறு 429. வினையொடு வரினுமெண்ணினைய வேற்பள. சூ-ம், எண் வகை எண்கட்கும் ஆவதோர் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) வினையொடு வரினும் - எண் வகை எண்களும் வினையொடு கூடி வருமிடத்து, எண்ணினைய - மேற் சொன்னவாறே பெற்றும் பெறாதும் வருவனவாம், ஏற்பன - அவ்வினைகள் ஏற்பன என்றவாறு.
256 சொல்லதிகாரம் - இடைச்சொல்லியல் எனவும் ; சாத்தனென்றா கொற்றனென்றா தேவனென்றா மூவ ரும் வந்தார் எனவும் ; சாத்தனெனா கொற்றனெனா இருவரும் வந்தார் எனவும் நான்கெண்ணும் முறையே தொகை பெற்றன . இனி நிலனும் நீரும் தீயும் நல்லவாம் எனவும் ; சாத்தனென்று கொற்றனென்று தேவனென்று சொல்லப்பட்டவர் வந்தார் ; நிலனென நீரெனத் தீயென வளியென ஆகாயமென அறிகுதும் ; பொன்னொடும் தேரொடும் தானையிற் பொலிந்தேன் எனவும் முறையே நான்கும் தொகையின்றி வந்தன . நிலனும் நீரும் இரண்டும் வேண்டுமெனத் தொகை பெறலுமாம் . ( 9 ) சில எண்ணிடைச் சொற்களுக்குச் சிறப்பு விதி 428. என்று மெனவு மொடுவு மொரோவழி நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும் . சூ - ம் என்று என ஒடு என்னும் இம் மூன்று எண்ணிற்கும் ஆவதோர் இயல்பு கூறியது . ( - ள் ) என்று மெனவு மொடுவும் - என்றும் எனவும் ஒடு மூன்று இடைச்சொல்லும் ஒரோவழி நின்றும் - எண்ணின்கண் ஓரிடத்தே நின்றனவேனும் பிரிந்தெண் பொருடொறு நேரும் - அது பிரிந்து எண்ணும் பொருடொறுஞ் செல்லும் என்றவாறு . - ம் : வினைபகை யென்றிரண்டி னெச்சம் ( குறள் . 674 ) பகைபாவ மச்சம் பழியென நான்கு மிகவாவா மில்லிறப்பான் கண் ( குறள் .146 ) பொருள் கருவி காலம் வினையிடனொ டைந்து மிருடீர எண்ணிச் செயல் ( குறள் .675 ) என இரண்டிடத்தும் மூன்றிடத்தும் நான் கிடத்தும் என்றும் எனவும் ஒடுவும் எண்ணி வந்தன . பிறவுமன்ன . ( 10 ) சில எண்ணிடைச்சொற்கள் வினையொடு வருமாறு 429. வினையொடு வரினுமெண்ணினைய வேற்பள . சூ - ம் எண் வகை எண்கட்கும் ஆவதோர் இயல்பு கூறுகின்றது . ( - ள் ) வினையொடு வரினும் - எண் வகை எண்களும் வினையொடு கூடி வருமிடத்து எண்ணினைய - மேற் சொன்னவாறே பெற்றும் பெறாதும் வருவனவாம் ஏற்பன - அவ்வினைகள் ஏற்பன என்றவாறு .