நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 2511 இவற்றுள் தொறு தோறு என்பது தான்புணர்ந்த மொழிப் பொருண்மையைப் பலவாக்கி ஆங்காங்கு என்பது பட வரும். உ-ம்: “குன்றுதொ றாடிய குமரற் போற்றுவாம்” “அறிதோ றறியாமை கண்டற்றாற் காமம்” (குறள்.110) என வரும். ஞெரோவென்பது வெருவுதற் பொருளின் வரும். “ஞெரோ வெனத், தலைக்கொள் வேட்டங் களிறட் டாஅங்கு” (பொருந.141) என வரும். அந்தோ அன்னோ என்பன இரக்கங் குறித்து வரும். “அந்தோ விசையைப் பட்டன" (சீவக.312), "அரக்காம்ப னாறும்வா யம்மருங் கிற் கன்னோ, பரற்கான மாற்றின கொல்லோ” (நாலடி.396), “ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ” (புறம்.235), “ஆவாழிய துயர்" “ஆஅ ஆசா ரார்” என வரும். இனி என்பது காலத்தின்மேலும் இடத் தின் மேலும் பின் என்பது பட வரும். சென்ற காலநிற்க இனி நல்லறஞ் செய்வோம், ஒன்னார் மதிலெடுத்த வாசிரினி விடுவானல்லன், பிரிந்த தலைமகன் இமைமில் வந்தான் இனி விடுவா ளல்ல ளென்றவ ரீந்தனரே எனக் காண்க. என் என்பது சொல்லுதலென்னும் தொழில் குறித்துப் பெயர் வினைகட்குரிய விகுதிகளுடனே வரும். என்றான், என்றாள், என்றார், என்றது, என்றன, என்றேன், என்றேம், என்றாய், என்றீர் என வரும். ஏன் என்பது ஒழிதற் பொருள் குறித்து வரும். ஏனோன், ஏனோர், ஏனையது, ஏனையவை, ஏனைய, ஏனுழி என வரும். ஏதில் என்பது அயலென்னும் பொருள் குறித்து வரும். ஏதிலான், ஏதிலாள், ஏதிலார், ஏதிலது, ஏதிலவை, ஏதிலார் குற்றம்போற் தங்குற்றங் காண்கிற்பிற் றீதுண்டோ மன்னு முயிர்க்கு (குறள்.190) என வரும். ந சிறப்புப் பொருளை உடையதாய்ப் பேர்முன் அடுத்து வரும். நக்கீரர், நச்செள்ளையார், நப்பிஞ்சை, நந்நாகனார், நக்கடகம் எனக் காண்க. கல் என்றது முதல் நான்கும் ஓசைப் பொருண்மேல் வரும். “கல் லென்ற புள்ளுங் கொள்ளென ஒலிசெய்யும்”, “நிலையருங் குட்டத் துத் துடுமெனப் பாய்ந்து” (புறம்.243) என வரும். துண் என்றது முதல் நான்கும் குறிப்புப் பொருண்மேல் வரும். துண்ணென நடந்தார், பொள்ளென வியர்த்தார், கம்மென அரும்பு விரிந்தன, கொம்மென வந்தார் என வரும். (2)
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 2511 இவற்றுள் தொறு தோறு என்பது தான்புணர்ந்த மொழிப் பொருண்மையைப் பலவாக்கி ஆங்காங்கு என்பது பட வரும் . - ம் : குன்றுதொ றாடிய குமரற் போற்றுவாம் அறிதோ றறியாமை கண்டற்றாற் காமம் ( குறள் .110 ) என வரும் . ஞெரோவென்பது வெருவுதற் பொருளின் வரும் . ஞெரோ வெனத் தலைக்கொள் வேட்டங் களிறட் டாஅங்கு ( பொருந .141 ) என வரும் . அந்தோ அன்னோ என்பன இரக்கங் குறித்து வரும் . அந்தோ விசையைப் பட்டன ( சீவக .312 ) அரக்காம்ப னாறும்வா யம்மருங் கிற் கன்னோ பரற்கான மாற்றின கொல்லோ ( நாலடி .396 ) ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ ( புறம் .235 ) ஆவாழிய துயர் ஆஅ ஆசா ரார் என வரும் . இனி என்பது காலத்தின்மேலும் இடத் தின் மேலும் பின் என்பது பட வரும் . சென்ற காலநிற்க இனி நல்லறஞ் செய்வோம் ஒன்னார் மதிலெடுத்த வாசிரினி விடுவானல்லன் பிரிந்த தலைமகன் இமைமில் வந்தான் இனி விடுவா ளல்ல ளென்றவ ரீந்தனரே எனக் காண்க . என் என்பது சொல்லுதலென்னும் தொழில் குறித்துப் பெயர் வினைகட்குரிய விகுதிகளுடனே வரும் . என்றான் என்றாள் என்றார் என்றது என்றன என்றேன் என்றேம் என்றாய் என்றீர் என வரும் . ஏன் என்பது ஒழிதற் பொருள் குறித்து வரும் . ஏனோன் ஏனோர் ஏனையது ஏனையவை ஏனைய ஏனுழி என வரும் . ஏதில் என்பது அயலென்னும் பொருள் குறித்து வரும் . ஏதிலான் ஏதிலாள் ஏதிலார் ஏதிலது ஏதிலவை ஏதிலார் குற்றம்போற் தங்குற்றங் காண்கிற்பிற் றீதுண்டோ மன்னு முயிர்க்கு ( குறள் .190 ) என வரும் . சிறப்புப் பொருளை உடையதாய்ப் பேர்முன் அடுத்து வரும் . நக்கீரர் நச்செள்ளையார் நப்பிஞ்சை நந்நாகனார் நக்கடகம் எனக் காண்க . கல் என்றது முதல் நான்கும் ஓசைப் பொருண்மேல் வரும் . கல் லென்ற புள்ளுங் கொள்ளென ஒலிசெய்யும் நிலையருங் குட்டத் துத் துடுமெனப் பாய்ந்து ( புறம் .243 ) என வரும் . துண் என்றது முதல் நான்கும் குறிப்புப் பொருண்மேல் வரும் . துண்ணென நடந்தார் பொள்ளென வியர்த்தார் கம்மென அரும்பு விரிந்தன கொம்மென வந்தார் என வரும் . ( 2 )