நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

24 பாயிரம் (இதன் பொருள்) மலர்தலை உலகின் பரந்த இடத்தை யுடைய பூமியின் கண்ணே, மல்கிருள் அகல - நிறைந்த இருள் நீங்க, இலகொளி பரப்பி - விளங்காநின்ற ஒளியை விரித்து, யாவையும் விளக்கும் - நிலநீர் முதலிய எல்லாப் பொருளையும் காட்டும், பரிதி யின் - ஆதித்தியனைப் போல, ஒரு தானாகி - உலகுக்கெல்லாம் தானொரு முதலேயாகி, முதலீறு ஒப்பளவு - தோற்றமும் நாசமும் உவமையும் பிரமாணமும், ஆசை முனிவிகந்து உயர்ந்த - விருப்பும் வெறுப்புமின்றி ஞான குணங்களான் மிக்க, அற்புத மூர்த்தி - ஆச்சரி யத்தையுடைய இறைவனானவன், தன்னலர்தரு தன்மையின் - தன் னுடைய விரிந்த தன்மையாகிய கருணையினாலே, மனவிருள் இரிய - பூவுலகத்தினுள்ள உயிர்களுடைய மனங்களினுண்டான அறியாமை யான இருள் நீங்க, மாண்பொருள் முழுவதும் - மாட்சிமைப்பட்ட அற முதற் பொருளனைத்தையும், முனிவற அருளிய - பதினெண் நிலத்துள் ளார் எல்லாரும் விரும்ப அருளிச்செய்த, மூவறு மொழியுளும் - பதி னெண் நிலத்து வழங்கும் பதினெட்டுப் படையினுள்ளும், குணகடல் குமரி குடகம் வேங்கடம் - கீழ்கடல் தென்குமரி மேல்கடல் வடவேங் கடம், எனுநான்கு எல்லையின் - இச்சொன்ன நான்கு கரைக்குமுட் பட்டு வழங்காநின்ற; இருந்தமிழ்க் கடலின் - பெரிய தமிழெனும் கடலினுள், அரும்பொருள் ஐந்தையும் - எழுத்துச் சொல் பொருள் யாப்பு அலங்காரம் என்னும் அரிய பொருள் ஐந்தையும், யாவரும் உணரத் - கற்றவர் கல்லாதவர் யாவரும் உணரும்படி, தொகை வகை விரியிற் றருகென - தொகையும் வகையும் விரிவும்படி இம்மும்மை யானும் விளங்கச் சொல்லுகவென, துன்னார் இகலற நூறி - சத்துருக் களுடைய மாறுபாடெல்லாம் மாயும்படி கெடுத்து, இருநில முழு வதும் தனதெனக்கோலித் - பெரிய பூமியனைத்தினையும் தனதென்று ஏற்றிக் கொண்டு, தன்மத வாரணம் - தனக்கேயுரிய மத யானைகளை, திசைதொறு நிறுவிய - எட்டுத் திக்கிலும் எல்லைக்களிறாக நிறுத் திய, திறலுறு தொல்சீர் - வலியொடு பொருந்தி உலகுளதான அன்று தொடங்கி இடையறாது வாரா நின்ற புகழினையும், கருங்கழல் கூடாதாரைக் கொன்று கட்டிய வீரக்கழலினையும், வெண்குடை - பற்றலர் பகரும் பழி மாசறுத்து மற்றுலகளிக்கும் மணிமுத்தக் குடை மினையும், கார் நிகர் வண்கை - வினைப்பயன் கருதாது மேதினி யோர்க்கு மழைபோலுதவும் மாமலர்க் கையினையும், திருந்திய செங்கோல் - குற்றமற்று உலகிற் கொடுங்கலி துரந்து செப்பம் வளர்க்கும் செய்ய கோலினையும் உடையனான, சீயகங்கன் - தங்க லாகுமாம் வெங்கயம் நுங்கும் சிங்கமாகும் கங்கனென்பான், அருங்
24 பாயிரம் ( இதன் பொருள் ) மலர்தலை உலகின் பரந்த இடத்தை யுடைய பூமியின் கண்ணே மல்கிருள் அகல - நிறைந்த இருள் நீங்க இலகொளி பரப்பி - விளங்காநின்ற ஒளியை விரித்து யாவையும் விளக்கும் - நிலநீர் முதலிய எல்லாப் பொருளையும் காட்டும் பரிதி யின் - ஆதித்தியனைப் போல ஒரு தானாகி - உலகுக்கெல்லாம் தானொரு முதலேயாகி முதலீறு ஒப்பளவு - தோற்றமும் நாசமும் உவமையும் பிரமாணமும் ஆசை முனிவிகந்து உயர்ந்த - விருப்பும் வெறுப்புமின்றி ஞான குணங்களான் மிக்க அற்புத மூர்த்தி - ஆச்சரி யத்தையுடைய இறைவனானவன் தன்னலர்தரு தன்மையின் - தன் னுடைய விரிந்த தன்மையாகிய கருணையினாலே மனவிருள் இரிய - பூவுலகத்தினுள்ள உயிர்களுடைய மனங்களினுண்டான அறியாமை யான இருள் நீங்க மாண்பொருள் முழுவதும் - மாட்சிமைப்பட்ட அற முதற் பொருளனைத்தையும் முனிவற அருளிய - பதினெண் நிலத்துள் ளார் எல்லாரும் விரும்ப அருளிச்செய்த மூவறு மொழியுளும் - பதி னெண் நிலத்து வழங்கும் பதினெட்டுப் படையினுள்ளும் குணகடல் குமரி குடகம் வேங்கடம் - கீழ்கடல் தென்குமரி மேல்கடல் வடவேங் கடம் எனுநான்கு எல்லையின் - இச்சொன்ன நான்கு கரைக்குமுட் பட்டு வழங்காநின்ற ; இருந்தமிழ்க் கடலின் - பெரிய தமிழெனும் கடலினுள் அரும்பொருள் ஐந்தையும் - எழுத்துச் சொல் பொருள் யாப்பு அலங்காரம் என்னும் அரிய பொருள் ஐந்தையும் யாவரும் உணரத் - கற்றவர் கல்லாதவர் யாவரும் உணரும்படி தொகை வகை விரியிற் றருகென - தொகையும் வகையும் விரிவும்படி இம்மும்மை யானும் விளங்கச் சொல்லுகவென துன்னார் இகலற நூறி - சத்துருக் களுடைய மாறுபாடெல்லாம் மாயும்படி கெடுத்து இருநில முழு வதும் தனதெனக்கோலித் - பெரிய பூமியனைத்தினையும் தனதென்று ஏற்றிக் கொண்டு தன்மத வாரணம் - தனக்கேயுரிய மத யானைகளை திசைதொறு நிறுவிய - எட்டுத் திக்கிலும் எல்லைக்களிறாக நிறுத் திய திறலுறு தொல்சீர் - வலியொடு பொருந்தி உலகுளதான அன்று தொடங்கி இடையறாது வாரா நின்ற புகழினையும் கருங்கழல் கூடாதாரைக் கொன்று கட்டிய வீரக்கழலினையும் வெண்குடை - பற்றலர் பகரும் பழி மாசறுத்து மற்றுலகளிக்கும் மணிமுத்தக் குடை மினையும் கார் நிகர் வண்கை - வினைப்பயன் கருதாது மேதினி யோர்க்கு மழைபோலுதவும் மாமலர்க் கையினையும் திருந்திய செங்கோல் - குற்றமற்று உலகிற் கொடுங்கலி துரந்து செப்பம் வளர்க்கும் செய்ய கோலினையும் உடையனான சீயகங்கன் - தங்க லாகுமாம் வெங்கயம் நுங்கும் சிங்கமாகும் கங்கனென்பான் அருங்