நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 247 நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார் கொடுத்துத்தான் றுய்ப்பினு மீண்டுங்கா லீண்டு மிடுக்குற்றுப் பற்றினு நில்லாது செல்வம் விடுக்கும் வினையுலந்தக் கால் (நாலடி.93) அரிதவித் தாசின் றுணர்நதவன் பாதம் விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத் துரிதனிற் கண்டுணர்ந்தா ரோக்கமே போலப் பெரியத னாவி பெரிது (பழமொழி - கடவுள்) என வரும். இை வை அடியாக எடுத்துக் கூட்டிப் பொருள் கோடலிற் கொண்டு கூட்டுப் பொருள்கோளில் அடங்கா என்க. மாறாக் காதலர் மலைமறந் தனரே யாறாக் கட்பனி வரலா னாவே யேறா மென்றோள் வளை நெகிழும்மே கூறாய் தோழியான் வாழு மாறே இதனை வேண்டியதோர் அடியை முதல் இடை ஈறாக உச்சரித்து அடிமறியாதல் காண்க. இஃது ஏனை யாப்புகளினும் வருமாதலால் அடிமறி மண்டில ஆசிரியத்துள் அடங்கா என்க. அஃதேல் யாப்புக்குரிய பொருள்கோள்களை ஈண்டுச் சொல்ல வேண்டியது என்னையோவெனின், ஒரு மொழி, தொடர்மொழி, பொது மொழி என்று சொற்கூறு செய்து அவை ஆமாறு சொன்னாரென்க. அவற்றுள் தொடர்மொழி அடிமறிமாற்று ஒழிந்த ஏழு பொருள் கோளும்படத் தொடர்வனவாம். அவை பாவஞ் செய்தான் நரகம் புகும் புண்ணியஞ் செய்தான் சுவர்க்கம் புகும் என இவை யாற்றுநீர்ப் பொருள்கோள்படத் தொடர்ந்த தொடர்மொழி. தந்தையைக் கண்டு தலையினா னிலமுறத் தொழுது வணங் கினான். இது பூட்டுவிற் பொருள்கோள்படத் தொடர்ந்த தொடர் மொழி. நன்மக்களுள்ளும் விலங்கினுள்ளும் நரகத்துள்ளுஞ் சென்று துன்பம் எய்துவர். இது தாப்பிசைப் பொருள்கோள்படத்தொடர்ந்த தொடர்மொழி.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 247 நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார் கொடுத்துத்தான் றுய்ப்பினு மீண்டுங்கா லீண்டு மிடுக்குற்றுப் பற்றினு நில்லாது செல்வம் விடுக்கும் வினையுலந்தக் கால் ( நாலடி .93 ) அரிதவித் தாசின் றுணர்நதவன் பாதம் விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத் துரிதனிற் கண்டுணர்ந்தா ரோக்கமே போலப் பெரியத னாவி பெரிது ( பழமொழி - கடவுள் ) என வரும் . இை வை அடியாக எடுத்துக் கூட்டிப் பொருள் கோடலிற் கொண்டு கூட்டுப் பொருள்கோளில் அடங்கா என்க . மாறாக் காதலர் மலைமறந் தனரே யாறாக் கட்பனி வரலா னாவே யேறா மென்றோள் வளை நெகிழும்மே கூறாய் தோழியான் வாழு மாறே இதனை வேண்டியதோர் அடியை முதல் இடை ஈறாக உச்சரித்து அடிமறியாதல் காண்க . இஃது ஏனை யாப்புகளினும் வருமாதலால் அடிமறி மண்டில ஆசிரியத்துள் அடங்கா என்க . அஃதேல் யாப்புக்குரிய பொருள்கோள்களை ஈண்டுச் சொல்ல வேண்டியது என்னையோவெனின் ஒரு மொழி தொடர்மொழி பொது மொழி என்று சொற்கூறு செய்து அவை ஆமாறு சொன்னாரென்க . அவற்றுள் தொடர்மொழி அடிமறிமாற்று ஒழிந்த ஏழு பொருள் கோளும்படத் தொடர்வனவாம் . அவை பாவஞ் செய்தான் நரகம் புகும் புண்ணியஞ் செய்தான் சுவர்க்கம் புகும் என இவை யாற்றுநீர்ப் பொருள்கோள்படத் தொடர்ந்த தொடர்மொழி . தந்தையைக் கண்டு தலையினா னிலமுறத் தொழுது வணங் கினான் . இது பூட்டுவிற் பொருள்கோள்படத் தொடர்ந்த தொடர் மொழி . நன்மக்களுள்ளும் விலங்கினுள்ளும் நரகத்துள்ளுஞ் சென்று துன்பம் எய்துவர் . இது தாப்பிசைப் பொருள்கோள்படத்தொடர்ந்த தொடர்மொழி .