நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

242 சொல்லதிகாரம் - பொதுவியல் ஓசையும் பொருளும் வழுவாது நிற்றலின் அடிமறிமொழிமாற்று ஆயிற்று. என்னை? அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே. (62) நிரனிறைப் பொருள்கோள் 413. பெயரும் வினையுமாஞ் சொல்லையும் பொருளையும் வேறு நிரனிறீஇ முறையினு மெதிரினும் நேரும் பொருள்கோ ணிரனிறை நெறியே. சூ-ம், நிரனிறைப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) பெயரும் வினையுமாஞ் சொல்லையும் - பெயர்ச்சொல் வினைச் சொல் என்னும் இவற்றையும், பொருளையும் - இவற்றிற் பொருளாய் வருவனவற்றையும், வேறு நிரனிறீஇ - வெவ்வேறே அடைவே தொகை யொப்ப வைத்து, முறையினு மெதிரினும் - வைத்த முறையே யாதல் எதிரேயாதல், நேரும் பொருள்கோள் - பொருளேற்குமாறு சொல்லைக் கூட்டிப் பொருள் கொள்ளுதல், நிரனிறை நெறியே - நிரனிறைப் பொருள் கோளின் முறையாம் என்றவாறு. அரும்பதவுரை: பெயர்ச்சொல்லும் பொருளும் வேறு நிறீஇ யது பெயர்நிரனிறை; வினைச்சொல்லும் பொருளும் வேறு நிறீஇயது வினைநிரனிறை. இவை நிறீஇய முறையே பொருள் கொள்வன, முறைப்பெயர் நிரனிறை, முறைவினை நிரனிறை என்னும் பெயராம். எதிர் தொடங்கிப் பொருள் கொள் வன எதிர்ப்பெயர் நிரனிறை எதிர்வினை நிரனிறை என்பனவாம். இவ்வாற்றான் நான்காம் நிரனிறைப் பொருள் ... கொள்க. கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி மதிபவள முத்த முகம்வாய் முறுவல் பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல் வடிவினளே வஞ்சி மகள், காமவிதி கண்முக மென்மருங்குல் செய்யவாய் தோமிறுகடினி சொல்லமிர்தந் - தேமலர்க் காந்தள் குரும்பை கனக மடவாள்கை யேந்திளங் கொங்கை யெழில், உ-ம்: முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு (குறள்.1113) என இவை பெயர் முறை நிரனிறை.
242 சொல்லதிகாரம் - பொதுவியல் ஓசையும் பொருளும் வழுவாது நிற்றலின் அடிமறிமொழிமாற்று ஆயிற்று . என்னை ? அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே . ( 62 ) நிரனிறைப் பொருள்கோள் 413. பெயரும் வினையுமாஞ் சொல்லையும் பொருளையும் வேறு நிரனிறீஇ முறையினு மெதிரினும் நேரும் பொருள்கோ ணிரனிறை நெறியே . சூ - ம் நிரனிறைப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது . ( - ள் ) பெயரும் வினையுமாஞ் சொல்லையும் - பெயர்ச்சொல் வினைச் சொல் என்னும் இவற்றையும் பொருளையும் - இவற்றிற் பொருளாய் வருவனவற்றையும் வேறு நிரனிறீஇ - வெவ்வேறே அடைவே தொகை யொப்ப வைத்து முறையினு மெதிரினும் - வைத்த முறையே யாதல் எதிரேயாதல் நேரும் பொருள்கோள் - பொருளேற்குமாறு சொல்லைக் கூட்டிப் பொருள் கொள்ளுதல் நிரனிறை நெறியே - நிரனிறைப் பொருள் கோளின் முறையாம் என்றவாறு . அரும்பதவுரை : பெயர்ச்சொல்லும் பொருளும் வேறு நிறீஇ யது பெயர்நிரனிறை ; வினைச்சொல்லும் பொருளும் வேறு நிறீஇயது வினைநிரனிறை . இவை நிறீஇய முறையே பொருள் கொள்வன முறைப்பெயர் நிரனிறை முறைவினை நிரனிறை என்னும் பெயராம் . எதிர் தொடங்கிப் பொருள் கொள் வன எதிர்ப்பெயர் நிரனிறை எதிர்வினை நிரனிறை என்பனவாம் . இவ்வாற்றான் நான்காம் நிரனிறைப் பொருள் ... கொள்க . கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி மதிபவள முத்த முகம்வாய் முறுவல் பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல் வடிவினளே வஞ்சி மகள் காமவிதி கண்முக மென்மருங்குல் செய்யவாய் தோமிறுகடினி சொல்லமிர்தந் - தேமலர்க் காந்தள் குரும்பை கனக மடவாள்கை யேந்திளங் கொங்கை யெழில் - ம் : முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு ( குறள் .1113 ) என இவை பெயர் முறை நிரனிறை .