நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

236 சொல்லதிகாரம் - பொதுவியல் 404. காரண முதலா வாக்கம் பெற்றும் காரண மின்றி யாக்கம் பெற்றும் ஆக்க மின்றிக் காரண மடுத்தும் இருமையு மின்றியு மியலுஞ் செயும்பொருள். சூ-ம், செயற்கைப் பொருட்கு வரும் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) காரண முதலா வாக்கம் பெற்றும் - காரணச் சொல்லை முன் கொண்டு ஆக்கச் சொல்லொடு வருவனவும், காரணமின்றி யாக்கம் பெற்றும் - காரணச் சொல்லின்றி ஆக்கச் சொல்லோடு வருவனவும், ஆக்கமின்றிக் காரணமடுத்தும் - ஆக்கச் சொல்லின்றிக் காரணச் சொல்லொடு வருவனவும், இருமையு மின்றியும் - ஆக்கமும் காரண மும் இன்றி வருவனவும், இயலுஞ் செயும்பொருள் - இந்நான்மையும் பற்றி நடக்கும் செயற்கையுடைய பொருள்கள் என்றவாறு. உ-ம்: கடுவும் கைபிழி எண்ணெயும் பெற்றமையால் மயிர் நல்லவாயின எனவும், எருப்பெய்து இளங்களை கட்டி நீர்க் காலின் யாத்தமையாற் பைங்கூழ் நல்லவாயின எனவும், மயிர் நல்லவாயின, பைங்கூழ் நல்லவாயின எனவும், கடுவும் கைபிழி எண்ணெயும் பெற்றமையால் மயிர் நல்ல, எருப்பெய்து இளங் களை கட்டி நீர்க் காலின் யாத்தமையால் பைங்கூழ் நல்ல எனவும், மயிர் நல்ல, பைங்கூழ் நல்ல எனவும் முறையே நான் மையும் வந்தன. (54) விடை மரபு 405, தம்பா லில்ல தில்லெனி னினனா யுள்ளது கூறியு மாற்றியு முள்ளது கட்டியு முரைப்பர் சொற்சுருங்கு தற்கே. சூ-ம், வினா நிகழுமிடத்து விடை கூறுவதற்கு ஓர் இயல்பு கூறி யது. (இ-ள்) தம்பா லில்லது - ஒருவன் ஒன்றை வினாவினால் அது தன் பக்கத்தில் இல்லதை, இல்லெனின் - தான் இல்லையென்று சொல் லத் தொடங்கினான், இனனாயுள்ளது கூறியும் - அவன் வினாயதற்கு இனமாய்த் தன் பக்கம் உள்ளதைச் சொல்லியும், மாற்றியும் - ஒருவன் வினாயதற்கு இனமாய் உள்ளது சொல்லி மறுத்தும், உள்ளது சுட்டியு முரைப்பர் - அவன் வினாயது தன்னிடத்து உளதாயின் அதனை இத் துனை உண்டென்று சுட்டியும் சொல்லுவர் தொல்லோர் சொற் சுருங் குதற்கே - உரை பல்காமற்கு என்றவாறு.
236 சொல்லதிகாரம் - பொதுவியல் 404. காரண முதலா வாக்கம் பெற்றும் காரண மின்றி யாக்கம் பெற்றும் ஆக்க மின்றிக் காரண மடுத்தும் இருமையு மின்றியு மியலுஞ் செயும்பொருள் . சூ - ம் செயற்கைப் பொருட்கு வரும் இயல்பு கூறுகின்றது . ( - ள் ) காரண முதலா வாக்கம் பெற்றும் - காரணச் சொல்லை முன் கொண்டு ஆக்கச் சொல்லொடு வருவனவும் காரணமின்றி யாக்கம் பெற்றும் - காரணச் சொல்லின்றி ஆக்கச் சொல்லோடு வருவனவும் ஆக்கமின்றிக் காரணமடுத்தும் - ஆக்கச் சொல்லின்றிக் காரணச் சொல்லொடு வருவனவும் இருமையு மின்றியும் - ஆக்கமும் காரண மும் இன்றி வருவனவும் இயலுஞ் செயும்பொருள் - இந்நான்மையும் பற்றி நடக்கும் செயற்கையுடைய பொருள்கள் என்றவாறு . - ம் : கடுவும் கைபிழி எண்ணெயும் பெற்றமையால் மயிர் நல்லவாயின எனவும் எருப்பெய்து இளங்களை கட்டி நீர்க் காலின் யாத்தமையாற் பைங்கூழ் நல்லவாயின எனவும் மயிர் நல்லவாயின பைங்கூழ் நல்லவாயின எனவும் கடுவும் கைபிழி எண்ணெயும் பெற்றமையால் மயிர் நல்ல எருப்பெய்து இளங் களை கட்டி நீர்க் காலின் யாத்தமையால் பைங்கூழ் நல்ல எனவும் மயிர் நல்ல பைங்கூழ் நல்ல எனவும் முறையே நான் மையும் வந்தன . ( 54 ) விடை மரபு 405 தம்பா லில்ல தில்லெனி னினனா யுள்ளது கூறியு மாற்றியு முள்ளது கட்டியு முரைப்பர் சொற்சுருங்கு தற்கே . சூ - ம் வினா நிகழுமிடத்து விடை கூறுவதற்கு ஓர் இயல்பு கூறி யது . ( - ள் ) தம்பா லில்லது - ஒருவன் ஒன்றை வினாவினால் அது தன் பக்கத்தில் இல்லதை இல்லெனின் - தான் இல்லையென்று சொல் லத் தொடங்கினான் இனனாயுள்ளது கூறியும் - அவன் வினாயதற்கு இனமாய்த் தன் பக்கம் உள்ளதைச் சொல்லியும் மாற்றியும் - ஒருவன் வினாயதற்கு இனமாய் உள்ளது சொல்லி மறுத்தும் உள்ளது சுட்டியு முரைப்பர் - அவன் வினாயது தன்னிடத்து உளதாயின் அதனை இத் துனை உண்டென்று சுட்டியும் சொல்லுவர் தொல்லோர் சொற் சுருங் குதற்கே - உரை பல்காமற்கு என்றவாறு .