நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

226 சொல்லதிகாரம் - பொதுவியல் கொள்ளுதல் வினா. மணியுளவோ? வயிரமுளவோ? எனவும் கோடற்கு வினவப்படும். கொடுத்தற்கு வரும் வினா: சாத்த னுக்கு ஆடை இல்லையோ? என்பது கொடுத்தற்கு விளாவப் படும். ஏவற்கண் வரும் வினா: சாத்தா உண்டாயோ? என்பது ஏவற்கு வினாவப்படும். இவற்றின் வழு மேலே வந்ததென்க. (34) விடை 385. சுட்டு மறைநே ரேவல் வினாதல் உற்ற துரைத்த லுறுவது கூறல் இனமொழி யெனுமெண் ணிறைபு ளிறுதி நிலவிய வைந்துமப் பொருண்மையி னேர்ப. சூ-ம், செப்பு வழுவமைப்புக் கூறுகின்றது. (இ-ள்) சுட்டு - இச் சூத்திரப்பொருள் யாதென இது என்னும் சுட்டு விடையும், மறை - உண்ணாயோ என்றால் உண்ணேன் என மறை விடை யும், நேர் - உண்ணாயோ என்றால் உண்பேன் என நேர் விடையும், ஏவல் - உண்ணாயோ என்றால் உண் என ஏவல் விடையும், வினாதல் - உண் ணாயோ என்றால் உண்ணேனோ என எதிர் வினா விடையும், உற்ற துரைத்தல் - உண்ணப்போ என்றால் வயிறு குத்திற்று என உற்றது உரைக்கும் விடையும், உறுவது கூறல் - உண்ணாயோ என்றால் வயிறு குத்தும் என உறுவது கூறும் விடையும், இனமொழி - உண்ணாயோ என்றால் பலகாரம் தின்பேன் என இன விடையும், எனுமெண்ணிறை யுள் - என்று சொல்லப்படும் இவ்வெட்டு வகைச் சொல்லினுள்ளே முதல் மூன்றும் செவ்விதான விடையாம்; இறுதி நிலவிய வைந்தும் - ஈற்றினின்ற ஏவல் முதல் அவ்வைந்து விடையும் விடைப் பொருண் மையாய் வருதலின், அப் பொருண்மையி னேர்ப - அவற்றையும் செவ் விதாகிய விடையென்று கொள்ளுவர் புலவர் என்ற வாறு. இவற்றின் வழு மேலே வந்ததென்க. “நிலவிய” என்ற மிகையானே வினா அன்றியும் உத்தரமும் வரு வனவும் உள. வழிச் செல்வான் ஒருவன் கங்கை ஆடிப் போந்தேன் ஒரு பிடி சோறு தருமின் என வரும். (35) வினா விடைகளில் முதல் சினை வழுவாமை 386. வினாவினுஞ் செப்பினும் விரவா சினைமுதல். சூ-ம், வினா விடை இவ்விரண்டும் வழுவற்கு என்பது கூறுகின்றது.
226 சொல்லதிகாரம் - பொதுவியல் கொள்ளுதல் வினா . மணியுளவோ ? வயிரமுளவோ ? எனவும் கோடற்கு வினவப்படும் . கொடுத்தற்கு வரும் வினா : சாத்த னுக்கு ஆடை இல்லையோ ? என்பது கொடுத்தற்கு விளாவப் படும் . ஏவற்கண் வரும் வினா : சாத்தா உண்டாயோ ? என்பது ஏவற்கு வினாவப்படும் . இவற்றின் வழு மேலே வந்ததென்க . ( 34 ) விடை 385. சுட்டு மறைநே ரேவல் வினாதல் உற்ற துரைத்த லுறுவது கூறல் இனமொழி யெனுமெண் ணிறைபு ளிறுதி நிலவிய வைந்துமப் பொருண்மையி னேர்ப . சூ - ம் செப்பு வழுவமைப்புக் கூறுகின்றது . ( - ள் ) சுட்டு - இச் சூத்திரப்பொருள் யாதென இது என்னும் சுட்டு விடையும் மறை - உண்ணாயோ என்றால் உண்ணேன் என மறை விடை யும் நேர் - உண்ணாயோ என்றால் உண்பேன் என நேர் விடையும் ஏவல் - உண்ணாயோ என்றால் உண் என ஏவல் விடையும் வினாதல் - உண் ணாயோ என்றால் உண்ணேனோ என எதிர் வினா விடையும் உற்ற துரைத்தல் - உண்ணப்போ என்றால் வயிறு குத்திற்று என உற்றது உரைக்கும் விடையும் உறுவது கூறல் - உண்ணாயோ என்றால் வயிறு குத்தும் என உறுவது கூறும் விடையும் இனமொழி - உண்ணாயோ என்றால் பலகாரம் தின்பேன் என இன விடையும் எனுமெண்ணிறை யுள் - என்று சொல்லப்படும் இவ்வெட்டு வகைச் சொல்லினுள்ளே முதல் மூன்றும் செவ்விதான விடையாம் ; இறுதி நிலவிய வைந்தும் - ஈற்றினின்ற ஏவல் முதல் அவ்வைந்து விடையும் விடைப் பொருண் மையாய் வருதலின் அப் பொருண்மையி னேர்ப - அவற்றையும் செவ் விதாகிய விடையென்று கொள்ளுவர் புலவர் என்ற வாறு . இவற்றின் வழு மேலே வந்ததென்க . நிலவிய என்ற மிகையானே வினா அன்றியும் உத்தரமும் வரு வனவும் உள . வழிச் செல்வான் ஒருவன் கங்கை ஆடிப் போந்தேன் ஒரு பிடி சோறு தருமின் என வரும் . ( 35 ) வினா விடைகளில் முதல் சினை வழுவாமை 386. வினாவினுஞ் செப்பினும் விரவா சினைமுதல் . சூ - ம் வினா விடை இவ்விரண்டும் வழுவற்கு என்பது கூறுகின்றது .