நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

218 சொல்லதிகாரம் - பொதுவியல் இரண்டு தொடர்ச்சிப் பொருள் மயங்கிப் பல தொகைநிலைத் தாடர்மொழி வருமாறு. வாளை மீன் கெண்டைத் தலைப்படல் வாளை மீனைக் கெண்டை தலைப்படல், வாளை மீன் கெண்டையைத் தலைப்படல் என வரும். மூன்று தொடர்ச்சிப் பொருள் மயங்கிய பல தொகைநிலைத் தொடர்மொழி வருமாறு. புலிகொல் யானை புலியைக் கொன்ற யானை, புலியாற் கொல்லப்பட்ட யானை, புலியினிற் கொல்லப்பட்ட யானை என வரும். நான்கு தொடர்ச்சிப் பொருள் மயங்கிய பல தொகை நிலைத் தொடர்மொழி வருமாறு. “குரங்கெறிவிளங்காய்” குரங்கால் எறியப் பட்ட விளங்காய், குரங்கின் எறியப்பட்ட விளங்காய், குரங்கிற்கு எறிந்த விளங்காய், குரங்கை எறிந்த விளங்காய் என வரும். இவ் வாறு பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. (22) தொகாநிலைத் தொடர்மொழி 373. முற்றீ ரெச்ச மெழுவாய் விளிப்பொருள் ஆறுரு பிடையுரி யடுக்கிவை தொகாநிலை. சூ-ம், தொகாநிலைத் தொடர்மொழி இவையெனக் கூறுநின்றது. (இ-ள்) முற்று - தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றும் பெயரொடும் வினையொடும் புணரும் புணர்ச்சியும், ஈரெச்சம் - தெரி நிலைவினைப் பெயரெச்சமும் குறிப்புவினைப் பெயரெச்சமும் தெரி நிலை வினையெச்சமும் குறிப்பு வினையெச்சமும் பெயரொடும் வினையொடும் புணரும் புணர்ச்சியும், எழுவாய் - எழுவாய் வேற்றுமை தன் பயனிலையொடு புணரும் - புணர்ச்சியும், விளிப்பொருள் - விளி வேற்றுமை தம் பொருளோடு புணரும் புணர்ச்சியும், ஆறுருபு - இரண் டாம் வேற்றுமை ஐயுருபு முதல் ஆறுருபும் தத்தம் பெயரொடும் புணரும் புணர்ச்சியும், இடையுரி - இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரொடும் வினையொடும் புணரும் புணர்ச்சியும், அடுக்கு - விரை வாதியின் வரும் இரண்டு முதலான அடுக்குப் புணரும் புணர்ச்சியும், இவை தொகாநிலை - இப்பதினேழு புணர்ச்சியும் தொகாநிலைத் தொடர் மொழியாம் என்றவாறு. உ-ம்: உண்டான் சாத்தன், குழையன் கொற்றன், உண்ட சாத்தன், பெரிய சாத்தன், உழுது வந்தான், அவனன்றி உண்ணான், சாத்தன் உண்டான், சாத்தாவா, சாத்தனைச் சேர், சாத்தனால் வந்தான், சாத்தற்குப் பூசை, சாத்தனின் நீங்கினான், சாத்தனது
218 சொல்லதிகாரம் - பொதுவியல் இரண்டு தொடர்ச்சிப் பொருள் மயங்கிப் பல தொகைநிலைத் தாடர்மொழி வருமாறு . வாளை மீன் கெண்டைத் தலைப்படல் வாளை மீனைக் கெண்டை தலைப்படல் வாளை மீன் கெண்டையைத் தலைப்படல் என வரும் . மூன்று தொடர்ச்சிப் பொருள் மயங்கிய பல தொகைநிலைத் தொடர்மொழி வருமாறு . புலிகொல் யானை புலியைக் கொன்ற யானை புலியாற் கொல்லப்பட்ட யானை புலியினிற் கொல்லப்பட்ட யானை என வரும் . நான்கு தொடர்ச்சிப் பொருள் மயங்கிய பல தொகை நிலைத் தொடர்மொழி வருமாறு . குரங்கெறிவிளங்காய் குரங்கால் எறியப் பட்ட விளங்காய் குரங்கின் எறியப்பட்ட விளங்காய் குரங்கிற்கு எறிந்த விளங்காய் குரங்கை எறிந்த விளங்காய் என வரும் . இவ் வாறு பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க . ( 22 ) தொகாநிலைத் தொடர்மொழி 373. முற்றீ ரெச்ச மெழுவாய் விளிப்பொருள் ஆறுரு பிடையுரி யடுக்கிவை தொகாநிலை . சூ - ம் தொகாநிலைத் தொடர்மொழி இவையெனக் கூறுநின்றது . ( - ள் ) முற்று - தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றும் பெயரொடும் வினையொடும் புணரும் புணர்ச்சியும் ஈரெச்சம் - தெரி நிலைவினைப் பெயரெச்சமும் குறிப்புவினைப் பெயரெச்சமும் தெரி நிலை வினையெச்சமும் குறிப்பு வினையெச்சமும் பெயரொடும் வினையொடும் புணரும் புணர்ச்சியும் எழுவாய் - எழுவாய் வேற்றுமை தன் பயனிலையொடு புணரும் - புணர்ச்சியும் விளிப்பொருள் - விளி வேற்றுமை தம் பொருளோடு புணரும் புணர்ச்சியும் ஆறுருபு - இரண் டாம் வேற்றுமை ஐயுருபு முதல் ஆறுருபும் தத்தம் பெயரொடும் புணரும் புணர்ச்சியும் இடையுரி - இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரொடும் வினையொடும் புணரும் புணர்ச்சியும் அடுக்கு - விரை வாதியின் வரும் இரண்டு முதலான அடுக்குப் புணரும் புணர்ச்சியும் இவை தொகாநிலை - இப்பதினேழு புணர்ச்சியும் தொகாநிலைத் தொடர் மொழியாம் என்றவாறு . - ம் : உண்டான் சாத்தன் குழையன் கொற்றன் உண்ட சாத்தன் பெரிய சாத்தன் உழுது வந்தான் அவனன்றி உண்ணான் சாத்தன் உண்டான் சாத்தாவா சாத்தனைச் சேர் சாத்தனால் வந்தான் சாத்தற்குப் பூசை சாத்தனின் நீங்கினான் சாத்தனது