நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

214 சொல்லதிகாரம் - பொதுவியல் ழாக்கு, ஆயிரத்து முந்நூற்று முப்பது முக்கலனே முக்குறுணி முந்நாழியுழக் காழாக்கு முச்செவிடு எனவும், சாணரை எனவும் வரும். இவை விரிவுழி உவாவும் பதினான்கும், கபிலரும் பர ணரும், கல்லாடரும் மாமூலரும் என விரியும். பிறவுமன்ன. (17) அன்மொழித் தொகை 368. ஐந்தொகை மொழிமேற் பிறதொக லன்மொழி. சூ-ம், முறையே அன்மொழித் தொகைநிலைத் தொடர்மொழி ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) ஐந்தொகை மொழிமேல் - வேற்றுமைத்தொகை முதலான ஐவகைத் தொகைத் தொடர்மொழிகளின்மேல், பிற தொகல் - அவற் றின் பொருள்களைக் கருதிய வேற்றுமைப் பொருள்களும் தொகுவது, அன்மொழி - அன்மொழித் தொகைநிலைத் தொடர்மொழியாம் என்ற வாறு. உ-ம்: பூங்குழல், பொற்றொடி, கவியிலக்கணம், பொற்றாலி, கிள்ளிகுடி, கீழ்வயிற்றுக்கழலை எனவும் தாழ்குழல், கருங் குழல், துடியிடை, தகல்ஞாழல் எனவும் காண்க. இவை விரிவுழி பூவையுடைய குழலினையுடையாள், பொன்னினாய தொடியினையுடையாள் எனவும் கொள்க. (18) தொகைச் சொற்களின் பொருண்மை 369. முன்மொழி பின்மொழி பன்மொழி புறமொழி எனுநான் கிடத்துஞ் சிறக்குந் தொகைப்பொருள். சூ-ம், தொகைச்சொற் பொருண்மைக்கு இடம் கூறுகின்றது. (இ-ள்) முன்மொழி - தொகைச் சொற் பொருள் முதனிற்கும் மொழி மிடத்துத்தான், பின்மொழி - பின்மொழியிடத்துத்தான், பன்மொழி - அனைத்து மொழியிடத்துத்தான், புறமொழி - அனைத்து மொழிக்கும் புறத்துத்தான், எனுநான்கிடத்தும் - என்று சொல்லப்படும் இந்நான் கிடத்தில் ஓரிடத்தில், சிறக்குந் தொகைப்பொருள் - சிறந்து நிற்கும் தொகைச்சொற் பொருள் என்றவாறு. உ-ம்: கால்வாய், அடைகடல் என்பன வாயையுடைய கால் கட லினது அடை என முதன்மொழிப் பொருள் சிறந்தன. வேங் கைப்பூ, கருங்குதிரை எனப் பின்மொழிப் பொருள் சிறந்தன. தந்தைதாய், இராப்பகல், இவை இரு மொழியுஞ் சிறந்தன.
214 சொல்லதிகாரம் - பொதுவியல் ழாக்கு ஆயிரத்து முந்நூற்று முப்பது முக்கலனே முக்குறுணி முந்நாழியுழக் காழாக்கு முச்செவிடு எனவும் சாணரை எனவும் வரும் . இவை விரிவுழி உவாவும் பதினான்கும் கபிலரும் பர ணரும் கல்லாடரும் மாமூலரும் என விரியும் . பிறவுமன்ன . ( 17 ) அன்மொழித் தொகை 368. ஐந்தொகை மொழிமேற் பிறதொக லன்மொழி . சூ - ம் முறையே அன்மொழித் தொகைநிலைத் தொடர்மொழி ஆமாறு கூறுகின்றது . ( - ள் ) ஐந்தொகை மொழிமேல் - வேற்றுமைத்தொகை முதலான ஐவகைத் தொகைத் தொடர்மொழிகளின்மேல் பிற தொகல் - அவற் றின் பொருள்களைக் கருதிய வேற்றுமைப் பொருள்களும் தொகுவது அன்மொழி - அன்மொழித் தொகைநிலைத் தொடர்மொழியாம் என்ற வாறு . - ம் : பூங்குழல் பொற்றொடி கவியிலக்கணம் பொற்றாலி கிள்ளிகுடி கீழ்வயிற்றுக்கழலை எனவும் தாழ்குழல் கருங் குழல் துடியிடை தகல்ஞாழல் எனவும் காண்க . இவை விரிவுழி பூவையுடைய குழலினையுடையாள் பொன்னினாய தொடியினையுடையாள் எனவும் கொள்க . ( 18 ) தொகைச் சொற்களின் பொருண்மை 369. முன்மொழி பின்மொழி பன்மொழி புறமொழி எனுநான் கிடத்துஞ் சிறக்குந் தொகைப்பொருள் . சூ - ம் தொகைச்சொற் பொருண்மைக்கு இடம் கூறுகின்றது . ( - ள் ) முன்மொழி - தொகைச் சொற் பொருள் முதனிற்கும் மொழி மிடத்துத்தான் பின்மொழி - பின்மொழியிடத்துத்தான் பன்மொழி - அனைத்து மொழியிடத்துத்தான் புறமொழி - அனைத்து மொழிக்கும் புறத்துத்தான் எனுநான்கிடத்தும் - என்று சொல்லப்படும் இந்நான் கிடத்தில் ஓரிடத்தில் சிறக்குந் தொகைப்பொருள் - சிறந்து நிற்கும் தொகைச்சொற் பொருள் என்றவாறு . - ம் : கால்வாய் அடைகடல் என்பன வாயையுடைய கால் கட லினது அடை என முதன்மொழிப் பொருள் சிறந்தன . வேங் கைப்பூ கருங்குதிரை எனப் பின்மொழிப் பொருள் சிறந்தன . தந்தைதாய் இராப்பகல் இவை இரு மொழியுஞ் சிறந்தன .