நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 213 உவமவுருபுகள் 366. போலப் புரைய வொப்ப வுறழ மானக் கடுப்ப வியைய வேய்ப்ப நேர நிகர வன்ன வின்ன என்பவும் பிறவு முவமத் துருபே. சூ-ம், மேல் உவம உருபென்றார்; அவை இவையெனக் கூறு கின்றது. (இ-ள்) போல - “வேந்தன் மனம்போல வந்த மகன்” (பு-வெ.26), புரைய - “உயிர்புரை யூகியோ டெண்ணி”, ஒப்ப - “என்னொப்ப வுளரரி யர் உலகில்”, உறழ - “கனவுறழ் நிலவுக்கான்று”, மான - “புள்ளி மான செடியர்”, கடுப்ப - “அறல்கடுக்குங் கூந்தல்”, இயைய - “காரியையுங் காவலன் கை", ஏய்ப்ப - “செம்பவள மேய்ப்பத் திகழு மதரம்", நேர - “பொன்னேர்மேனிப் புரவலனே”, நிகர - “கார்நிகர் வண்கை", அன்ன - “அரிமா விடித்தன்ன வோசை", இன்ன - “வெஞ் சிலையின்ன விறலுமிழ்தோள்" என்பவும் பிறவும் - இச்சொன்ன பன்னி ரண்டும் இவை போல்வன பிறவும், உவமத் துருபே - உவமவுருபு களாம் என்றவாறு. (16) உம்மைத் தொகை 367. எண்ண லெடுத்தன் முகத்த னீட்டல் எனுநான் களவையி லும்மில தத்தொகையே. சூ-ம், முறையே உம்மைத் தொகைநிலைத் தொடர்மொழி ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) எண்ணல் - எண்ணி அளக்கப்படும் அளவின்கண்ணும், எடுத் தல் - எடுத்து அளக்கப்படும் அளவின் கண்ணும், முகத்தல் - முகந்து அளக்கப்படும் அளவின்கண்ணும், நீட்டல் - நீட்டி அளக்கப்படும் அள வின் கண்ணும், எனுநான்களவையில் - என்று சொல்லப்பட்ட நால் வகை அளவின்கண்ணும், உம்மில தத்தொகையே - வரும் உம்மை தொக்கு நிற்பது உம்மைத் தொகைநிலைத் தொடர்மொழியாம் என்ற வாறு. உ-ம்: உவப்பதினான்கு, கபிலபரணர், கல்லாட மாமூலர், சேர சோழ பாண்டியர், பதினொன்று, பதினைவர், ஆயிரத்தொரு நூற்றம்பத்தொன்றரையரைக்கால் எனவும்; கழஞ்சேகால், கழஞ் சரையே யரைமாவரைக்காணி முந்திரிகை எனவும்; நாழியா
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 213 உவமவுருபுகள் 366. போலப் புரைய வொப்ப வுறழ மானக் கடுப்ப வியைய வேய்ப்ப நேர நிகர வன்ன வின்ன என்பவும் பிறவு முவமத் துருபே . சூ - ம் மேல் உவம உருபென்றார் ; அவை இவையெனக் கூறு கின்றது . ( - ள் ) போல - வேந்தன் மனம்போல வந்த மகன் ( பு - வெ .26 ) புரைய - உயிர்புரை யூகியோ டெண்ணி ஒப்ப - என்னொப்ப வுளரரி யர் உலகில் உறழ - கனவுறழ் நிலவுக்கான்று மான - புள்ளி மான செடியர் கடுப்ப - அறல்கடுக்குங் கூந்தல் இயைய - காரியையுங் காவலன் கை ஏய்ப்ப - செம்பவள மேய்ப்பத் திகழு மதரம் நேர - பொன்னேர்மேனிப் புரவலனே நிகர - கார்நிகர் வண்கை அன்ன - அரிமா விடித்தன்ன வோசை இன்ன - வெஞ் சிலையின்ன விறலுமிழ்தோள் என்பவும் பிறவும் - இச்சொன்ன பன்னி ரண்டும் இவை போல்வன பிறவும் உவமத் துருபே - உவமவுருபு களாம் என்றவாறு . ( 16 ) உம்மைத் தொகை 367. எண்ண லெடுத்தன் முகத்த னீட்டல் எனுநான் களவையி லும்மில தத்தொகையே . சூ - ம் முறையே உம்மைத் தொகைநிலைத் தொடர்மொழி ஆமாறு கூறுகின்றது . ( - ள் ) எண்ணல் - எண்ணி அளக்கப்படும் அளவின்கண்ணும் எடுத் தல் - எடுத்து அளக்கப்படும் அளவின் கண்ணும் முகத்தல் - முகந்து அளக்கப்படும் அளவின்கண்ணும் நீட்டல் - நீட்டி அளக்கப்படும் அள வின் கண்ணும் எனுநான்களவையில் - என்று சொல்லப்பட்ட நால் வகை அளவின்கண்ணும் உம்மில தத்தொகையே - வரும் உம்மை தொக்கு நிற்பது உம்மைத் தொகைநிலைத் தொடர்மொழியாம் என்ற வாறு . - ம் : உவப்பதினான்கு கபிலபரணர் கல்லாட மாமூலர் சேர சோழ பாண்டியர் பதினொன்று பதினைவர் ஆயிரத்தொரு நூற்றம்பத்தொன்றரையரைக்கால் எனவும் ; கழஞ்சேகால் கழஞ் சரையே யரைமாவரைக்காணி முந்திரிகை எனவும் ; நாழியா