நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 211 றாமை நிற்பது, வேற்றுமைத் தொகையே - வேற்றுமைத் தொகை நிலைத் தொடர்மொழிகளாம் என்றவாறு. 2.--ம்: நிலம் கடந்தான், மரம் தறித்தான் எனவும்; பொற்குடம், மட்குடம் எனவும்; கருப்புவேலி, வயிற்றுச்சோறு எனவும்; வரை வீழருவி, கருவூர்க்கிழக்கு எனவும்; சாத்தன்கை, புலவர் - பாட்டு எனவும்; குன்றக்கூகை, பனங்கிளி எனவும் இடையே உருபுகள் தொக்கவாறு காண்க. இடையிலே தொகும் எனின் என்னை? கடந்தானிலம்; இருந் தான் குன்றத்து என ஈற்றினும் உருபு தொகுமாலோ எனின் அவை ஒரு பெயர் போலவும் ஒரு வினை போலவும் ஆகாமையின் விகாரத் தாற் றொகுக்கப்பட்டன என்க. "ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின் மெய்யுருபு தொகாஅ விறுதியான” (தொல். சொல். 101) (12) வினைத் தொகை 363. காலங் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை. சூ-ம், வினைத் தொகைநிலைத் தொடர்மொழியாமாறு கூறுகின்றது. (இ-ள்) காலங் கரந்த பெயரெச்சம் - முக்காலமும் தோன்றாது தன் னெச்சமான பெயர் கொண்டு நிற்கும் பெயரெச்சம், வினைத்தொகை - வினைத் தொகைநிலைத் தொடர் மொழியாம் என்றவாறு. உ-ம்: பொருகளிறு, பொருவேல், பொருகளம், பொருபடை, பொருபொழுது, பொருபோர் என வரும். இவை விரிவுழி பொருதகளம், பொராநின்)களம், பொருங் களம் என விரியும். . இவ்வகையே அரிவாள், கொல்யானை, இறைகூடை, பற்றி ரும்பு, பிடிவாள், தாழ்குழல் எனவும் வரும்; காண்க. (13) பண்புத் தொகை 364. பண்பை விளக்கு மொழிதொக் கனவும் ஒருபொருட் கிருபெயர் வந்தவுங் குணத்தொகை. சூ-ம், முறையே பண்புத் தொகைநிலைத் தொடர்மொழி ஆமாறு கூறுகின்றது.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 211 றாமை நிற்பது வேற்றுமைத் தொகையே - வேற்றுமைத் தொகை நிலைத் தொடர்மொழிகளாம் என்றவாறு . 2 .-- ம் : நிலம் கடந்தான் மரம் தறித்தான் எனவும் ; பொற்குடம் மட்குடம் எனவும் ; கருப்புவேலி வயிற்றுச்சோறு எனவும் ; வரை வீழருவி கருவூர்க்கிழக்கு எனவும் ; சாத்தன்கை புலவர் - பாட்டு எனவும் ; குன்றக்கூகை பனங்கிளி எனவும் இடையே உருபுகள் தொக்கவாறு காண்க . இடையிலே தொகும் எனின் என்னை ? கடந்தானிலம் ; இருந் தான் குன்றத்து என ஈற்றினும் உருபு தொகுமாலோ எனின் அவை ஒரு பெயர் போலவும் ஒரு வினை போலவும் ஆகாமையின் விகாரத் தாற் றொகுக்கப்பட்டன என்க . ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின் மெய்யுருபு தொகாஅ விறுதியான ( தொல் . சொல் . 101 ) ( 12 ) வினைத் தொகை 363. காலங் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை . சூ - ம் வினைத் தொகைநிலைத் தொடர்மொழியாமாறு கூறுகின்றது . ( - ள் ) காலங் கரந்த பெயரெச்சம் - முக்காலமும் தோன்றாது தன் னெச்சமான பெயர் கொண்டு நிற்கும் பெயரெச்சம் வினைத்தொகை - வினைத் தொகைநிலைத் தொடர் மொழியாம் என்றவாறு . - ம் : பொருகளிறு பொருவேல் பொருகளம் பொருபடை பொருபொழுது பொருபோர் என வரும் . இவை விரிவுழி பொருதகளம் பொராநின் ) களம் பொருங் களம் என விரியும் . . இவ்வகையே அரிவாள் கொல்யானை இறைகூடை பற்றி ரும்பு பிடிவாள் தாழ்குழல் எனவும் வரும் ; காண்க . ( 13 ) பண்புத் தொகை 364. பண்பை விளக்கு மொழிதொக் கனவும் ஒருபொருட் கிருபெயர் வந்தவுங் குணத்தொகை . சூ - ம் முறையே பண்புத் தொகைநிலைத் தொடர்மொழி ஆமாறு கூறுகின்றது .