நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

204 சொல்லதிகாரம் - பொதுவியல் உருபும் வினையும் அடுக்கி முடிதல் 354. உருபுபல வடுக்கினும் வினைவே றடுக்கினும் ஒருதம் மெச்ச மீறுற முடியும். சூ-ம், இதுவும் எண் வகை வேற்றுமை உருபுகட்கும் வினைச் சொற்குமுரியதோர் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) உருபுபல வடுக்கினும் ... வினைச்சொற்கள் மூன்றும் தம் முள் விரவாது வேறு வேறடுக்கி வந்தாலும், ஒருதம் மெச்சம் - தத்த மெச்சமாகிய பெயர் வினைகளினொன்று, ஈறுற முடியும் - இறுதி மிலே வர அதனோடு அனைத்தும் முடிவனவாம் என்றவாறு. உ-ம்: கட்கினியாள் காதலாள் ஊராள் பெண், காலார் கழலார் வேலார் சேர்ந்தார், வேலால் வாளால் தேரால் குதிரையால் வென் றார் என இவை உருபொன்றே அடுக்கி இறுதி பெயரொடும் வினையொடும் முடிந்தன. யானையது கோட்டை வாளாற் குறைத்தான், கொற்றியர் நல்லூரிற் சாத்தரது மகற்குப் பிள்ளையைக் கொடுத்தார், கொற்றி நல்லூரிற் பூதருடைய மகற்குச் சாத்தி முறை மருமகள் என உருபு பல அடுக்கி இறுதி ஒரு வினை பெயர் கொண்டு முடிந்தன. உண்டான் தின்றான் ஓடினான் பாடினான்; வருதி பொருதி வருந் துதி பொருந்துதி புலம்புதி நீ; இளையள் மெல்லியள் சிறியள் மடந்தை; அரிய செய்ய தண்ணிய புதிய பெருங்கான் யாறு என வினை வினைக்குறிப்பு முற்று விரவாது அடுக்கி ஒருமைப் பெயர் கொண்டன. வந்த உயர்ந்த துறந்த பெரியோர்; “சிறிய பெரிய நிகர் மலர்க் கோதை” (“சீறடிப் பேரகலெ”னத் தொடங்கும் பாடல்) எனத் தெரிநிலைப் பெயரெச்சமும் குறிப்புவினைப் பெயரெச்சமும் அடுக்கி ஒரு பெயர் கொண்டன. பிறந்து தவழ்ந்து நடந்து வளர்ந்து தளர்ந்து பெரியோர் ஆயினார்; அவனன்றி இவனன்றி வாரான். (4) 355. உருபு முற்றீ ரெச்சங் கொள்ளும் பெயர்வினை யிடைப்பிற வரலுமா மேற்பன. சூ-ம், எண் வகை வேற்றுமைப் புணர்ச்சித் தொடர் மொழிக்கும் வினை புணரும் புணர்ச்சித் தொடர் மொழிக்கும் ஆவதோர் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) உருபு - எண் வகை வேற்றுமை உருபுகளும், முற்று - தெரி நிலை வினைமுற்றுக்களும் குறிப்பு வினைமுற்றுக்களும், ஈரெச்சம் -
204 சொல்லதிகாரம் - பொதுவியல் உருபும் வினையும் அடுக்கி முடிதல் 354. உருபுபல வடுக்கினும் வினைவே றடுக்கினும் ஒருதம் மெச்ச மீறுற முடியும் . சூ - ம் இதுவும் எண் வகை வேற்றுமை உருபுகட்கும் வினைச் சொற்குமுரியதோர் இயல்பு கூறுகின்றது . ( - ள் ) உருபுபல வடுக்கினும் ... வினைச்சொற்கள் மூன்றும் தம் முள் விரவாது வேறு வேறடுக்கி வந்தாலும் ஒருதம் மெச்சம் - தத்த மெச்சமாகிய பெயர் வினைகளினொன்று ஈறுற முடியும் - இறுதி மிலே வர அதனோடு அனைத்தும் முடிவனவாம் என்றவாறு . - ம் : கட்கினியாள் காதலாள் ஊராள் பெண் காலார் கழலார் வேலார் சேர்ந்தார் வேலால் வாளால் தேரால் குதிரையால் வென் றார் என இவை உருபொன்றே அடுக்கி இறுதி பெயரொடும் வினையொடும் முடிந்தன . யானையது கோட்டை வாளாற் குறைத்தான் கொற்றியர் நல்லூரிற் சாத்தரது மகற்குப் பிள்ளையைக் கொடுத்தார் கொற்றி நல்லூரிற் பூதருடைய மகற்குச் சாத்தி முறை மருமகள் என உருபு பல அடுக்கி இறுதி ஒரு வினை பெயர் கொண்டு முடிந்தன . உண்டான் தின்றான் ஓடினான் பாடினான் ; வருதி பொருதி வருந் துதி பொருந்துதி புலம்புதி நீ ; இளையள் மெல்லியள் சிறியள் மடந்தை ; அரிய செய்ய தண்ணிய புதிய பெருங்கான் யாறு என வினை வினைக்குறிப்பு முற்று விரவாது அடுக்கி ஒருமைப் பெயர் கொண்டன . வந்த உயர்ந்த துறந்த பெரியோர் ; சிறிய பெரிய நிகர் மலர்க் கோதை ( சீறடிப் பேரகலெ னத் தொடங்கும் பாடல் ) எனத் தெரிநிலைப் பெயரெச்சமும் குறிப்புவினைப் பெயரெச்சமும் அடுக்கி ஒரு பெயர் கொண்டன . பிறந்து தவழ்ந்து நடந்து வளர்ந்து தளர்ந்து பெரியோர் ஆயினார் ; அவனன்றி இவனன்றி வாரான் . ( 4 ) 355. உருபு முற்றீ ரெச்சங் கொள்ளும் பெயர்வினை யிடைப்பிற வரலுமா மேற்பன . சூ - ம் எண் வகை வேற்றுமைப் புணர்ச்சித் தொடர் மொழிக்கும் வினை புணரும் புணர்ச்சித் தொடர் மொழிக்கும் ஆவதோர் இயல்பு கூறுகின்றது . ( - ள் ) உருபு - எண் வகை வேற்றுமை உருபுகளும் முற்று - தெரி நிலை வினைமுற்றுக்களும் குறிப்பு வினைமுற்றுக்களும் ஈரெச்சம் -