நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 199 செல்லாது - இவையிற் சிலவே செல்லாமல், ஆகும் - ஒழிந்த உயர்திணை ஆணொ ருமையினும் பெண்ணொருமையினும் அஃ றிணையொருமையினும் அஃறிணைப் பன்மையினும் ஆகும், செய்யு மென் முற்றே - செய்யுமென்னும் நிகழ்கால வினைமுற்று என்றவாறு. உ-ம்: அவன் உண்ணும், அவள் உண்ணும், அது உண்ணும், அவை உண்ணும். (29) பாற்பொது வினா வினைக்குறிப்பு 348. யாரென் வினாவினைக் குறிப்புயர் முப்பால். சூ-ம், உயர்திணை முப்பாற்கும் பொதுவான வினாவினைக் குறிப்பு வருமாறு கூறுகின்றது. (இ-ள்) யாரென் வினாவினைக் குறிப்பு - வினாப் பொருண்மைக் கண் வரும் யாரென்னும் வினைக்குறிப்புச் சொல், உயர் முப்பால், உயர் திணை மூன்று பாற்கும் பொதுவாம் என்றவாறு. உ-ம்: யார் அவன், யார் அவள், யார் அவர் என வரும். சிறு பான்மை தன்மை முன்னிலையிடத்தும் அஃறிணையிடத்தும் வரும். நீ யார், நீர் யார். இவ்வகைக்கு யான் யார், நாங்கள் யார், இக்கிளி யார் என வரும். யார் என்னும் வினா யாவர் என்றும் வரும். இக்காலத்து ஆர் என்றும் ஆரை என்றும் வரும். (30) 349. எவனென் வினாவினைக் குறிப்பிழி யிருபால். சூ-ம், அஃறிணை இரு பாற்கும் வினைக் குறிப்பு வருமாறு கூறு கின்றது. (இ-ள்) எவனென் வினாவினைக் குறிப்பு - வினாப் பொருண்மைக் கண் வரும் எவனென்னும் வினைக்குறிப்புச் சொல், இழி இருபால் - அஃறிணை இரு பாற்கும் பொதுவாம் என்றவாறு. உ-ம்: எவன் அது, எவன் அவை என வரும். என்னை என்றும் என்ன என்றும் என் என்றும் வரப் பெறும். அது என்னை, அவை என்னை; அது என்ன, அவை என்ன; அது என், இக்காலத்து என என்றும் பெறும். அது என, அவை என. (31)
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 199 செல்லாது - இவையிற் சிலவே செல்லாமல் ஆகும் - ஒழிந்த உயர்திணை ஆணொ ருமையினும் பெண்ணொருமையினும் அஃ றிணையொருமையினும் அஃறிணைப் பன்மையினும் ஆகும் செய்யு மென் முற்றே - செய்யுமென்னும் நிகழ்கால வினைமுற்று என்றவாறு . - ம் : அவன் உண்ணும் அவள் உண்ணும் அது உண்ணும் அவை உண்ணும் . ( 29 ) பாற்பொது வினா வினைக்குறிப்பு 348. யாரென் வினாவினைக் குறிப்புயர் முப்பால் . சூ - ம் உயர்திணை முப்பாற்கும் பொதுவான வினாவினைக் குறிப்பு வருமாறு கூறுகின்றது . ( - ள் ) யாரென் வினாவினைக் குறிப்பு - வினாப் பொருண்மைக் கண் வரும் யாரென்னும் வினைக்குறிப்புச் சொல் உயர் முப்பால் உயர் திணை மூன்று பாற்கும் பொதுவாம் என்றவாறு . - ம் : யார் அவன் யார் அவள் யார் அவர் என வரும் . சிறு பான்மை தன்மை முன்னிலையிடத்தும் அஃறிணையிடத்தும் வரும் . நீ யார் நீர் யார் . இவ்வகைக்கு யான் யார் நாங்கள் யார் இக்கிளி யார் என வரும் . யார் என்னும் வினா யாவர் என்றும் வரும் . இக்காலத்து ஆர் என்றும் ஆரை என்றும் வரும் . ( 30 ) 349. எவனென் வினாவினைக் குறிப்பிழி யிருபால் . சூ - ம் அஃறிணை இரு பாற்கும் வினைக் குறிப்பு வருமாறு கூறு கின்றது . ( - ள் ) எவனென் வினாவினைக் குறிப்பு - வினாப் பொருண்மைக் கண் வரும் எவனென்னும் வினைக்குறிப்புச் சொல் இழி இருபால் - அஃறிணை இரு பாற்கும் பொதுவாம் என்றவாறு . - ம் : எவன் அது எவன் அவை என வரும் . என்னை என்றும் என்ன என்றும் என் என்றும் வரப் பெறும் . அது என்னை அவை என்னை ; அது என்ன அவை என்ன ; அது என் இக்காலத்து என என்றும் பெறும் . அது என அவை என . ( 31 )