நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

196 சொல்லதிகாரம் - வினையியல் (புறம்.33), "கூடிப் பிரியேன்....", "தெரிபு குத்தின ஏறு" (கலி.103), "சேரிடம் அறிந்து சேர்" (ஆத்தி.51) எனச் செய்பு என்னும் வினையெச்சம் தன்வினை கொண்டது. “பரீஇ யுயிர்செருக்கும்” (நாலடி.220), "கல்லாக் கழிப்பர் தலையா யார்" (நாலடி.366), “காணாக் கழிப்ப ரறிவோர்”, “ஐவரொடு கிளைஇ” (புறம்.2), “நிலங்கிளையா வந்த கேழல்” எனச் செய்யா என்னும் வினையெச்சம் தன்விளை கொண்டது. “படு மகன் கிடக்கை காணூஉ, ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே” (புறம்.278), "நிலம் புடையூஉ வெழுதரு வலம்படு குஞ்சரம்” (”இலங்குதொடி” எனத் தொடங்கும் பதிற்.) எனச் செய்யூ என்னும் வினையெச்சம் தன்வினை கொண்டது. ஆகவே முதலினான்கும் வினைமுதலும் இறந்த காலமும் தழுவின. "கொல்வாம் கொடித்தானை கொண்டெழுந்தான்” (பு.வெ.99), புரவலன் புரிவான் றொடுத்த கரும மனைத்துஞ் சொன்னான், ஓது வான் போனான், உறங்குவான் வந்தான் எனவும் கல்வி கற்பான் வந்தான், உண்பான் வந்தான் எனவும் “புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்” (கார்நாற்பது.11), உண்பாக்கு வந்தான் எனவும் ஈற்றின் மூன்றும் வந்தன; வினையும் எதிர்காலமும் ஏற்றன. "பசித்தென... யானைக் கோடுநொடுத் துண்ணும் " (குறு. 100), யானை வீழ்ந்தென அலறா நிற்கும், வெட்டெனப் போவார், “வீழ்ந்தென குளிர்கொண்டு, பேஎ நாறுந் தாணீர்ப் பனிச்சனை" ("பையுண் மாலை”யெனத் தொடங்கும் பாடல்) என வரும் செய் தென என்னுமீறு தன்றொழிலும் பிறிதின்றொழிலும் இறந்த காலமும் ஏற்றது. பசித்தெனப் புனமேயா வென்றோ புலிமாரி பெய்தென மலர்ந் தன முல்லைமேல் என்பனவும் அவை. மோப்ப வெடுத்தான், “மோப்பக் குழையுமனிச்சம்” (குறள்.90), விண்டு பெய்ய விரிந்தன முல்லைமேல் வண்டு பாட வந்தாடின மஞ்ஞையைக் கண்டு வாழ மணிக்கழ லார்குழுக் கொண்டு போக வெங்கொய்யுளி யேறினார். எனவும் செயவென்னீறு தன்வினையும் பிறவினையும் நிகழ்காலமும் ஏற்றது. “கொளக் குறைபடா கூழுடை வியனகர்" (புறம்.70), "பீடு பெற நில்" (ஆத்தி.80) புகழ் பெற வாழ், "வீடு பெற நில்" (ஆத்தி.102), “பிழைபடச் சொல்லேல்” (ஆத்தி.79) என்பனவும் அவை.
196 சொல்லதிகாரம் - வினையியல் ( புறம் .33 ) கூடிப் பிரியேன் .... தெரிபு குத்தின ஏறு ( கலி .103 ) சேரிடம் அறிந்து சேர் ( ஆத்தி .51 ) எனச் செய்பு என்னும் வினையெச்சம் தன்வினை கொண்டது . பரீஇ யுயிர்செருக்கும் ( நாலடி .220 ) கல்லாக் கழிப்பர் தலையா யார் ( நாலடி .366 ) காணாக் கழிப்ப ரறிவோர் ஐவரொடு கிளைஇ ( புறம் .2 ) நிலங்கிளையா வந்த கேழல் எனச் செய்யா என்னும் வினையெச்சம் தன்விளை கொண்டது . படு மகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே ( புறம் .278 ) நிலம் புடையூஉ வெழுதரு வலம்படு குஞ்சரம் ( இலங்குதொடி எனத் தொடங்கும் பதிற் . ) எனச் செய்யூ என்னும் வினையெச்சம் தன்வினை கொண்டது . ஆகவே முதலினான்கும் வினைமுதலும் இறந்த காலமும் தழுவின . கொல்வாம் கொடித்தானை கொண்டெழுந்தான் ( பு.வெ .99 ) புரவலன் புரிவான் றொடுத்த கரும மனைத்துஞ் சொன்னான் ஓது வான் போனான் உறங்குவான் வந்தான் எனவும் கல்வி கற்பான் வந்தான் உண்பான் வந்தான் எனவும் புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார் ( கார்நாற்பது .11 ) உண்பாக்கு வந்தான் எனவும் ஈற்றின் மூன்றும் வந்தன ; வினையும் எதிர்காலமும் ஏற்றன . பசித்தென ... யானைக் கோடுநொடுத் துண்ணும் ( குறு . 100 ) யானை வீழ்ந்தென அலறா நிற்கும் வெட்டெனப் போவார் வீழ்ந்தென குளிர்கொண்டு பேஎ நாறுந் தாணீர்ப் பனிச்சனை ( பையுண் மாலை யெனத் தொடங்கும் பாடல் ) என வரும் செய் தென என்னுமீறு தன்றொழிலும் பிறிதின்றொழிலும் இறந்த காலமும் ஏற்றது . பசித்தெனப் புனமேயா வென்றோ புலிமாரி பெய்தென மலர்ந் தன முல்லைமேல் என்பனவும் அவை . மோப்ப வெடுத்தான் மோப்பக் குழையுமனிச்சம் ( குறள் .90 ) விண்டு பெய்ய விரிந்தன முல்லைமேல் வண்டு பாட வந்தாடின மஞ்ஞையைக் கண்டு வாழ மணிக்கழ லார்குழுக் கொண்டு போக வெங்கொய்யுளி யேறினார் . எனவும் செயவென்னீறு தன்வினையும் பிறவினையும் நிகழ்காலமும் ஏற்றது . கொளக் குறைபடா கூழுடை வியனகர் ( புறம் .70 ) பீடு பெற நில் ( ஆத்தி .80 ) புகழ் பெற வாழ் வீடு பெற நில் ( ஆத்தி .102 ) பிழைபடச் சொல்லேல் ( ஆத்தி .79 ) என்பனவும் அவை .