நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 195 அற்று; செய்பு - இடுபு, உண்பு , தெரிபு, வணங்குபு, சொல்லுபு; செய்யா - உண்ணா, வணங்கா, கல்லா, காணா, திளையா, வாரா, எண்ணா, ஆறா, ஆடா, அடா; செய்யூ - காணூஉ, படையூஉ, உண் னூஉ, வணங்கூஉ; செய்தெனச் - பசித்தென, வீழ்ந்தென, உண் டென, பட்டென, இற்றென, தின்றென; செய - கொள்ள, மோப்ப, நோக்க, உண்ண, காண, பாட, வணங்க, படிக்க; செயின் - வேண்டின், காணின், வரின், வரில், வணங்கின், வணங்கில், படில், படின்; செய் யிய - வாழிய, வணங்கிய, உண்ணிய, திண்ணிய, பூணிய; செய்மியர் - அணியியர், பணியியர், காணியர், வாழியர், வணங்கியர், பேணியர், உண்ணியர், திண்ணியர்; வான் - செல்வான், ஓதுவான், உறங்குவான்; பான் - கற்பான், உண்பான், தின்பான், பூண்பான், பாக்கின - தருபாக்கு, உண்பாக்கு, உரைப்பாக்கு; வினையெச் சம்பிற - இப்பன்னிரண்டும் வினையெச்சமாம்; ஐந்து - இவற்றின் முதலைந்தும் இறந்த காலமும் செய்து, செய்ய, செய்யா, செய்யூ, செய்தென; ஒன்று - இடையில் ஒன்று நிகழ்காலமும், ஆறு - ஒழிந்த ஆறும் எதிர்காலமும் செயின், செய்யிய, செய்யியர், வான், பான், பாக்கு, முக்காலமு முறைதரும் - இவ்வகை முக்காலமும் முறையே காட்டுவனவாம் என்றவாறு. (24) வினையெச்சங்கட்கு முடிபு 343. அவற்றுள், முதலி னான்கு மீற்றின் மூன்றும் வினை முதல் கொள்ளும் பிறவுமேற் கும்பிற சூ-ம், தெரிநிலை வினையெச்சத்திற்கு ஆவதோர் இயல்பு கூறியது. (இ-ள்) அவற்றுள் - மேற்சொன்ன பன்னிரண்டு வாய்பாட்டு வினை யெச்சத்தினுள்ளும், முதலினான்கும் - செய்து, செய்பு, செய்யா, செய்யு என நான்கு வாய்பாட்டு வினையெச்சமும், ஈற்றின் மூன்றும் - வான், பான், பாக்கு என்னும் மூன்று வாய்பாட்டு வினையெச்சமும், வினை முதல் கொள்ளும் - வினைமுதலாகிய தன்வினை கொண்டு முடியும்; பிறவுமேற்கும் பிற - ஒழிந்த ஐந்தும் வினைமுதலாகிய தன் வினையும் பிறிதின் வினையையும் கொண்டு முடியும் என்றவாறு. உ-ம்: "வாளொடு கனையிருள் வந்து தோன்றினன்" (சீவக. 320), “எண்ணித் துணிக கருமம்" (குறள்.467), நிலந்தலைக் கொண்ட" (புறம். 2), "ஐயம் இட்டு உண்' (ஆத்தி. 9) எனச் செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சம் தன்வினை கொண்டன. “இணக்கம் அறிந்து இணங்கு" (ஆத்தி. 19), "புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த"
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 195 அற்று ; செய்பு - இடுபு உண்பு தெரிபு வணங்குபு சொல்லுபு ; செய்யா - உண்ணா வணங்கா கல்லா காணா திளையா வாரா எண்ணா ஆறா ஆடா அடா ; செய்யூ - காணூஉ படையூஉ உண் னூஉ வணங்கூஉ ; செய்தெனச் - பசித்தென வீழ்ந்தென உண் டென பட்டென இற்றென தின்றென ; செய - கொள்ள மோப்ப நோக்க உண்ண காண பாட வணங்க படிக்க ; செயின் - வேண்டின் காணின் வரின் வரில் வணங்கின் வணங்கில் படில் படின் ; செய் யிய - வாழிய வணங்கிய உண்ணிய திண்ணிய பூணிய ; செய்மியர் - அணியியர் பணியியர் காணியர் வாழியர் வணங்கியர் பேணியர் உண்ணியர் திண்ணியர் ; வான் - செல்வான் ஓதுவான் உறங்குவான் ; பான் - கற்பான் உண்பான் தின்பான் பூண்பான் பாக்கின - தருபாக்கு உண்பாக்கு உரைப்பாக்கு ; வினையெச் சம்பிற - இப்பன்னிரண்டும் வினையெச்சமாம் ; ஐந்து - இவற்றின் முதலைந்தும் இறந்த காலமும் செய்து செய்ய செய்யா செய்யூ செய்தென ; ஒன்று - இடையில் ஒன்று நிகழ்காலமும் ஆறு - ஒழிந்த ஆறும் எதிர்காலமும் செயின் செய்யிய செய்யியர் வான் பான் பாக்கு முக்காலமு முறைதரும் - இவ்வகை முக்காலமும் முறையே காட்டுவனவாம் என்றவாறு . ( 24 ) வினையெச்சங்கட்கு முடிபு 343. அவற்றுள் முதலி னான்கு மீற்றின் மூன்றும் வினை முதல் கொள்ளும் பிறவுமேற் கும்பிற சூ - ம் தெரிநிலை வினையெச்சத்திற்கு ஆவதோர் இயல்பு கூறியது . ( - ள் ) அவற்றுள் - மேற்சொன்ன பன்னிரண்டு வாய்பாட்டு வினை யெச்சத்தினுள்ளும் முதலினான்கும் - செய்து செய்பு செய்யா செய்யு என நான்கு வாய்பாட்டு வினையெச்சமும் ஈற்றின் மூன்றும் - வான் பான் பாக்கு என்னும் மூன்று வாய்பாட்டு வினையெச்சமும் வினை முதல் கொள்ளும் - வினைமுதலாகிய தன்வினை கொண்டு முடியும் ; பிறவுமேற்கும் பிற - ஒழிந்த ஐந்தும் வினைமுதலாகிய தன் வினையும் பிறிதின் வினையையும் கொண்டு முடியும் என்றவாறு . - ம் : வாளொடு கனையிருள் வந்து தோன்றினன் ( சீவக . 320 ) எண்ணித் துணிக கருமம் ( குறள் .467 ) நிலந்தலைக் கொண்ட ( புறம் . 2 ) ஐயம் இட்டு உண் ' ( ஆத்தி . 9 ) எனச் செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சம் தன்வினை கொண்டன . இணக்கம் அறிந்து இணங்கு ( ஆத்தி . 19 ) புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த