நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

194 சொல்லதிகாரம் - வினையியல் போன்ம். இவை உயிர் கெட்டன. “ஆம்போதவளோடு மாம்' எனவும் “போம்போ தவளோடும் போம்' உயிர்மெய் கெட்டன. என இவை மகரவொற்று நிற்றலான் முன் கூறிய பெயரெச்சம்; வினைத்தொகை அல்லவென்க. பிறவுமன்ன. (22) வினையெச்சம் 341. தொழிலுங் காலமுந் தோன்றிப் பால்வினை ஒழிய நிற்பது வினையெச் சம்மே. சூ-ம், தெரிநிலை வினையெச்சமும் குறிப்பு வினையெச்சமும் வருமாறு. (இ-ள்) தொழிலுங் காலமுந் தோன்றி - செயலையும் காலத்தையும் காட்டி, பால்வினை ஒழிய நிற்பது - பால் தோன்றாது வினையெஞ்ச நிற்பது, வினையெச்சம்மே - தெரிநிலை வினையெச்சமும் குறிப்பு வினையெச்சமுமாம் என்றவாறு. உ-ம்: ஓதி வந்தான், பாடி வந்தான், ஓதி நல்லன், பாடி நல்லன், ஓதிப்பெற்ற, பாடிப்பெற்ற, ஓதிப் பெரிய, பாடிப் பெரிய, ஓதி வந்து, பாடி வந்து, ஓதியன்றி, பாடியன்றி எனத் தெரிநிலை வினையெச்சம் வினைகளைக் கொண்டு முடிந்தன. அவனன்றி வந்தான், இவனின்றி வாரான், அவனன்றி நல்லன், இவனின்றி நல்லன், அவனன்றிப் பெற்ற, இவனின்றிப் பெற்ற, அவ னன்றி நல்ல, இவனின்றிச் சிறிய, அவனன்றி வந்து, இவ னின்றி வந்து எனக் குறிப்பு வினையெச்சம் வினைகளைக் கொண்டு முடிந்தவாறு காண்க. "காலமும் வினையுந் தோன்றிப் பாறோன்றாது வினைகொள் ளும்மது வினையெச் சம்மே.' (23) வினையெச்ச வாய்பாடு 342. செய்து செய்பு செய்யாச் செய்யூச் செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர் வான்பான் பாக்கின வினையெச் சம்பிற ஐந்தொன் றாறுமுக் காலமு முறைதரும். சூ-ம், வினையெச்சப் பகுதியும் வினையெச்சத்திற்கு வரும் வாய் பாடும் கூறுகின்றது. (இ-ள்) செய்து - வந்து, எண்ணி, பரீஇ, சினைஇ, ஆறி, ஆடி, அடுக்கி, அண்டி, பொருத்தி, கவ்வி, சொல்லி, உண்டு, இற்று, தின்று,
194 சொல்லதிகாரம் - வினையியல் போன்ம் . இவை உயிர் கெட்டன . ஆம்போதவளோடு மாம் ' எனவும் போம்போ தவளோடும் போம் ' உயிர்மெய் கெட்டன . என இவை மகரவொற்று நிற்றலான் முன் கூறிய பெயரெச்சம் ; வினைத்தொகை அல்லவென்க . பிறவுமன்ன . ( 22 ) வினையெச்சம் 341. தொழிலுங் காலமுந் தோன்றிப் பால்வினை ஒழிய நிற்பது வினையெச் சம்மே . சூ - ம் தெரிநிலை வினையெச்சமும் குறிப்பு வினையெச்சமும் வருமாறு . ( - ள் ) தொழிலுங் காலமுந் தோன்றி - செயலையும் காலத்தையும் காட்டி பால்வினை ஒழிய நிற்பது - பால் தோன்றாது வினையெஞ்ச நிற்பது வினையெச்சம்மே - தெரிநிலை வினையெச்சமும் குறிப்பு வினையெச்சமுமாம் என்றவாறு . - ம் : ஓதி வந்தான் பாடி வந்தான் ஓதி நல்லன் பாடி நல்லன் ஓதிப்பெற்ற பாடிப்பெற்ற ஓதிப் பெரிய பாடிப் பெரிய ஓதி வந்து பாடி வந்து ஓதியன்றி பாடியன்றி எனத் தெரிநிலை வினையெச்சம் வினைகளைக் கொண்டு முடிந்தன . அவனன்றி வந்தான் இவனின்றி வாரான் அவனன்றி நல்லன் இவனின்றி நல்லன் அவனன்றிப் பெற்ற இவனின்றிப் பெற்ற அவ னன்றி நல்ல இவனின்றிச் சிறிய அவனன்றி வந்து இவ னின்றி வந்து எனக் குறிப்பு வினையெச்சம் வினைகளைக் கொண்டு முடிந்தவாறு காண்க . காலமும் வினையுந் தோன்றிப் பாறோன்றாது வினைகொள் ளும்மது வினையெச் சம்மே . ' ( 23 ) வினையெச்ச வாய்பாடு 342. செய்து செய்பு செய்யாச் செய்யூச் செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர் வான்பான் பாக்கின வினையெச் சம்பிற ஐந்தொன் றாறுமுக் காலமு முறைதரும் . சூ - ம் வினையெச்சப் பகுதியும் வினையெச்சத்திற்கு வரும் வாய் பாடும் கூறுகின்றது . ( - ள் ) செய்து - வந்து எண்ணி பரீஇ சினைஇ ஆறி ஆடி அடுக்கி அண்டி பொருத்தி கவ்வி சொல்லி உண்டு இற்று தின்று