நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

186 சொல்லதிகாரம் - வினையியல் பலர்பால் படர்க்கை வினைமுற்று 326. அர் ஆர் பவ்வூ ரகரமா ரீற்ற பல்லோர் படர்கைமார் வினையொடு முடிமே. சூ-ம், உயர்திணைப் பலர்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றும் கூறுகின்றது. (இ-ள்) அர் ஆர் பவ்வூர் அகரமார் ஈற்ற - அர் ஆர் என்னும் விகுதியும் பகரவொற்றை ஊர்ந்த அகரமாகிய பவ்வென்னும் பகுதியும் மாரென் னும் விகுதியும் இந்நான்கு விகுதியையும் ஈறாகவுடைய மொழிகள், பல்லோர் படர்க்கை - உயர்திணைப் பலர்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம்; மார்வினையொடு முடிமே - மார் விகுதி சேர்ந்த தெரிநிலை வினைமுற்றுப் பெயர் கொண்டு முடிவ தன்றி வினை கொண்டு முடிவதுமாம் என்றவாறு. உ-ம்: வந்தனர், வந்தார்; வருகின்றனர், வருகின்றார்; வருவர், வருவார் அவர் எனத் தெரிநிலை வினைமுற்று வந்தன. குறிப்பு வினைமுற்றுக்கு மேற்காட்டின னகர ளகரவீற்றை ரகரமாகத் திரித்து அவரென்னும் பெயர் வருவித்துக் கொள்க. ஒப்ப, உரைப்ப, சொல்லுப, புல்லுப அவர் எனவும் கொண்மார், உண் மார் அவர் வந்தார் எனவும் பவ்வூர் அகரவீறும் மாரீறும் வந்தன. ஒப்ப, உரைப்ப முதலானவை ஒப்பவை உரைப்பவையெனப் பெயர்ப்படின் அஃறிணைப் பன்மை பெயராமென்க, (8) ஒன்றன்பால் வினைமுற்று 327. துறுடுக் குற்றிய லுகர வீற்ற ஒன்றன் படர்க்கைடுக் குறிப்பி னாகும். சூ-ம், அஃறிணையொருமைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றும் கூறியது. (இ-ள்) து று டுக் குற்றிய லுகர வீற்ற - து, டு, று என்னும் இம் மூன்று குற்றியலுகரவீற்று மொழிகளும், ஒன்றன் படர்க்கை - அஃ றிணை யொருமைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம்; டுக் குறிப்பினாகும் - அவற்றுளே டுவ்வீற்று விகுதி குறிப்பு வினைக்கண் வரும் என்றவாறு. உ-ம்: வந்தது, வாராநின்றது, வருவது; கூறிற்று, போயிற்று, ஆயிற்று அது எனவும் தெரிநிலை முற்று வந்தன. பெயர்த்து, ஊர்த்து, கார்த்து, மயிர்த்து, நடைத்து அது எனவும் பாற்று
186 சொல்லதிகாரம் - வினையியல் பலர்பால் படர்க்கை வினைமுற்று 326. அர் ஆர் பவ்வூ ரகரமா ரீற்ற பல்லோர் படர்கைமார் வினையொடு முடிமே . சூ - ம் உயர்திணைப் பலர்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றும் கூறுகின்றது . ( - ள் ) அர் ஆர் பவ்வூர் அகரமார் ஈற்ற - அர் ஆர் என்னும் விகுதியும் பகரவொற்றை ஊர்ந்த அகரமாகிய பவ்வென்னும் பகுதியும் மாரென் னும் விகுதியும் இந்நான்கு விகுதியையும் ஈறாகவுடைய மொழிகள் பல்லோர் படர்க்கை - உயர்திணைப் பலர்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம் ; மார்வினையொடு முடிமே - மார் விகுதி சேர்ந்த தெரிநிலை வினைமுற்றுப் பெயர் கொண்டு முடிவ தன்றி வினை கொண்டு முடிவதுமாம் என்றவாறு . - ம் : வந்தனர் வந்தார் ; வருகின்றனர் வருகின்றார் ; வருவர் வருவார் அவர் எனத் தெரிநிலை வினைமுற்று வந்தன . குறிப்பு வினைமுற்றுக்கு மேற்காட்டின னகர ளகரவீற்றை ரகரமாகத் திரித்து அவரென்னும் பெயர் வருவித்துக் கொள்க . ஒப்ப உரைப்ப சொல்லுப புல்லுப அவர் எனவும் கொண்மார் உண் மார் அவர் வந்தார் எனவும் பவ்வூர் அகரவீறும் மாரீறும் வந்தன . ஒப்ப உரைப்ப முதலானவை ஒப்பவை உரைப்பவையெனப் பெயர்ப்படின் அஃறிணைப் பன்மை பெயராமென்க ( 8 ) ஒன்றன்பால் வினைமுற்று 327. துறுடுக் குற்றிய லுகர வீற்ற ஒன்றன் படர்க்கைடுக் குறிப்பி னாகும் . சூ - ம் அஃறிணையொருமைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றும் கூறியது . ( - ள் ) து று டுக் குற்றிய லுகர வீற்ற - து டு று என்னும் இம் மூன்று குற்றியலுகரவீற்று மொழிகளும் ஒன்றன் படர்க்கை - அஃ றிணை யொருமைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம் ; டுக் குறிப்பினாகும் - அவற்றுளே டுவ்வீற்று விகுதி குறிப்பு வினைக்கண் வரும் என்றவாறு . - ம் : வந்தது வாராநின்றது வருவது ; கூறிற்று போயிற்று ஆயிற்று அது எனவும் தெரிநிலை முற்று வந்தன . பெயர்த்து ஊர்த்து கார்த்து மயிர்த்து நடைத்து அது எனவும் பாற்று