நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 179 தாம் தான் இன்னன விளியா - தாமென்பதும் தா னென்பதும் இவை போல்வன விளியுருபு ஏலா என்றவாறு. உ-ம் : நுமன், துமள், நுமர், எவன், எவள், எவர், எது, எவை, யாவன், யாவள், யாவர், யாது, யாவை, அவன், அவள், அவர், அது, அவை, இவன், இவள், இவர், இது, இவை, உவன், உவள், உவர், உது, உவை, தாம், தான் என்பன விளி ஏலா என்க. “இன்னன" என்றதனால் மற்றையான், மற்றையாள், மற்றை யார், மற்றையது, மற்றையன எனவும் எண்ணிறையளவுப் பெயர் முதலவும் விளி ஏலா எனக்கொள்க. (57) இரண்டாமுருபுக்கு ஓர் மரபு 314. முதலை யையுறிற் சினையைக் கண்ணுறும் அதுமுதற் காகிற் சினைக்கை யாகும். சூ-ம், இஃதோர் வேற்றுமை உருபு பெறும் வகைமை கூறுகின்றது. (இ-ள்) முதலை ஐயுறின் - சினை தொடர்ந்த முதற் பொருட்கு இரண்டாம் வேற்றுமை ஐயுருபு பொருந்தில், சினையைக் கண்ணுறும் முதல் தொடர்ந்த சினைப் பொருட்கு ஏழாம் வேற்றுமைக் கண் ணுருபு வரும்; அது முதற்காகில் - ஆறாம் வேற்றுமை அதுவென்னும் உருபு முதற் பொருட்கு வரில், சினைக்கு ஐயாகும் - சினைப் பொருட். கண் இரண்டாம் வேற்றுமை ஐயுருபு வரும் என்றவாறு. உ-ம் : யானையைக் கோட்டின்கட் குறைத்தான், யானையது கோட்டைக் குறைத்தான் என வரும். முதலை ஐயுற என்னாது "ஐயறின்" என்றதனால் யானையைக் கோட்டைக் குறைத்தான், பசுவைப் பாலைக் கறந்தான் என வரும். (58) 315. முதலிவை சினையிவை யெனவே றுளவில்லை உரைப்போர் குறிப்பின வற்றே பிண்டமும். சூ-ம், இது ஓர் சொல்லுதல் வகைமை கூறுகின்றது. (இ-ள்) முதலிவை சினையிவை யென - இதுவே முதற் பொருள் இது சினைப் பொருளென்று சொல்ல, வேறுளவில்லை - வேறாக அறி யக் கிடப்பன இல்லை; உரைப்போர் குறிப்பின - சொல்லுவான் குறிப் பினாலே முதற் பொருளே சினைப் பொருளாம்; சினைப் பொருளே முதற் பொருளாம்; அற்றே பிண்டமும் - பிண்டப் பொருளும் அவ்வா றேயாம் என்றவாறு.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 179 தாம் தான் இன்னன விளியா - தாமென்பதும் தா னென்பதும் இவை போல்வன விளியுருபு ஏலா என்றவாறு . - ம் : நுமன் துமள் நுமர் எவன் எவள் எவர் எது எவை யாவன் யாவள் யாவர் யாது யாவை அவன் அவள் அவர் அது அவை இவன் இவள் இவர் இது இவை உவன் உவள் உவர் உது உவை தாம் தான் என்பன விளி ஏலா என்க . இன்னன என்றதனால் மற்றையான் மற்றையாள் மற்றை யார் மற்றையது மற்றையன எனவும் எண்ணிறையளவுப் பெயர் முதலவும் விளி ஏலா எனக்கொள்க . ( 57 ) இரண்டாமுருபுக்கு ஓர் மரபு 314. முதலை யையுறிற் சினையைக் கண்ணுறும் அதுமுதற் காகிற் சினைக்கை யாகும் . சூ - ம் இஃதோர் வேற்றுமை உருபு பெறும் வகைமை கூறுகின்றது . ( - ள் ) முதலை ஐயுறின் - சினை தொடர்ந்த முதற் பொருட்கு இரண்டாம் வேற்றுமை ஐயுருபு பொருந்தில் சினையைக் கண்ணுறும் முதல் தொடர்ந்த சினைப் பொருட்கு ஏழாம் வேற்றுமைக் கண் ணுருபு வரும் ; அது முதற்காகில் - ஆறாம் வேற்றுமை அதுவென்னும் உருபு முதற் பொருட்கு வரில் சினைக்கு ஐயாகும் - சினைப் பொருட் . கண் இரண்டாம் வேற்றுமை ஐயுருபு வரும் என்றவாறு . - ம் : யானையைக் கோட்டின்கட் குறைத்தான் யானையது கோட்டைக் குறைத்தான் என வரும் . முதலை ஐயுற என்னாது ஐயறின் என்றதனால் யானையைக் கோட்டைக் குறைத்தான் பசுவைப் பாலைக் கறந்தான் என வரும் . ( 58 ) 315. முதலிவை சினையிவை யெனவே றுளவில்லை உரைப்போர் குறிப்பின வற்றே பிண்டமும் . சூ - ம் இது ஓர் சொல்லுதல் வகைமை கூறுகின்றது . ( - ள் ) முதலிவை சினையிவை யென - இதுவே முதற் பொருள் இது சினைப் பொருளென்று சொல்ல வேறுளவில்லை - வேறாக அறி யக் கிடப்பன இல்லை ; உரைப்போர் குறிப்பின - சொல்லுவான் குறிப் பினாலே முதற் பொருளே சினைப் பொருளாம் ; சினைப் பொருளே முதற் பொருளாம் ; அற்றே பிண்டமும் - பிண்டப் பொருளும் அவ்வா றேயாம் என்றவாறு .