நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 16 பேணி வைத்திருந்ததோடு வெளியிட அனுமதி வழங்கி உதவினர் பிரிட்டீஷ் நூலகத்தார்; இதனை வெளியிட வேண்டுமென வற்புறுத் தியதோடு வெளியிடும் உரிமையை விரைந்து வாங்கித் தந்தவர் திருமதி. கௌர் (Mrs. Albertine GAUR) ஆவர்; ஏடு தேடும் பணிக்குப் பொருளுதவி செய்ததோடு நூலை வெளியிடும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர் தெற்காசிய நிறுவனத்தினர்; மறைந்து கிடந்த சுவடியொன்றைக் கண்டுபிடித்த விவரத்தைக் கேட்டவுடன் பெரு மகிழ்ச்சியுற்று உடனே வெளியிட்டுவிட வேண்டுமென ஊக்க மூட்டியதோடு ஒரு முன்னுரையினையும் வழங்கியவர் பேராசிரியர் பெர்கர் (Professor Hermann BERGER): டாக்டர் பர்னலைப் பற்றிய குறிப்புகளைக் கேட்டவுடன் தொகுத்துத் தந்தவர் திருமதி மீராபாய் டாஸன் (Mrs M. DAWSON, Indiail office Library. London) என்பவராவர்; பதிப்புரையைப் படித்து அதற்கு ஒரு ஆங்கிலச் சுருக் கத்தைத் தயாரித்தவர் திரு. எவலின் மயர் (Miss Eveline MEYER) என்ற தமிழ் மாணவியாவார்; இந்தப் பதிப்புப் பணியை ஏற்றுச் செய் யும் அறிவையும் ஆற்றலையும் எனக்கு வழங்கியவர் என் பேராசிரியர் வி.ஐ. சுப்ரமணியம் (Professor V.I. SUBRAMANIAM) ஆவார்; எழுத்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் போதெல்லாம் என்னை விட்டு விலகி இருந்தவளும் அயர்ச்சி நேரும் போதெல்லாம் ஊக்கமளித்த வளும் என் மனைவி. இவர்கள் அனைவர்க்கும் என் நெஞ்சு நிறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இயன்ற வரையில் தெளிவாக எழுத முயன்றுள்ளேன். எனினும் கையெழுத்து ஒரே அளவில் எல்லாப் பக்கங்களிலும் அமையவில்லை; அமையவும் முடியாது. அழகைக் காட்டிலும் பிழையின்மைக்கு முத லிடம் கொடுத்திருக்கிறேன். எங்காவது ஓரிரு இடங்களில் கை யெழுத்துத் தெளிவின்மை அழகின்மை காரணமாகப் படிக்கும் போது யாருக்கேனும் உறுத்தலுணர்வு ஏற்பட்டால் இதைவிடத் தெளிவாக வும் அழகாகவும் எழுதும் திறமையை இறைவன் இப் பிறவியில் எனக்கு அளிக்கவில்லையென்ற அமைதியை அவருக்குத் தெரிவித் துக் கொள்கிறேன். இங்ஙனம் அ. தாமோதரன் தெற்காசிய நிறுவனம் ஹைடல்பெர்க் பல்கலைக்கழகம் ஹைடல்பெர்க், மே.ஜெர்மனி,
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 16 பேணி வைத்திருந்ததோடு வெளியிட அனுமதி வழங்கி உதவினர் பிரிட்டீஷ் நூலகத்தார் ; இதனை வெளியிட வேண்டுமென வற்புறுத் தியதோடு வெளியிடும் உரிமையை விரைந்து வாங்கித் தந்தவர் திருமதி . கௌர் ( Mrs. Albertine GAUR ) ஆவர் ; ஏடு தேடும் பணிக்குப் பொருளுதவி செய்ததோடு நூலை வெளியிடும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர் தெற்காசிய நிறுவனத்தினர் ; மறைந்து கிடந்த சுவடியொன்றைக் கண்டுபிடித்த விவரத்தைக் கேட்டவுடன் பெரு மகிழ்ச்சியுற்று உடனே வெளியிட்டுவிட வேண்டுமென ஊக்க மூட்டியதோடு ஒரு முன்னுரையினையும் வழங்கியவர் பேராசிரியர் பெர்கர் ( Professor Hermann BERGER ) : டாக்டர் பர்னலைப் பற்றிய குறிப்புகளைக் கேட்டவுடன் தொகுத்துத் தந்தவர் திருமதி மீராபாய் டாஸன் ( Mrs M. DAWSON Indiail office Library . London ) என்பவராவர் ; பதிப்புரையைப் படித்து அதற்கு ஒரு ஆங்கிலச் சுருக் கத்தைத் தயாரித்தவர் திரு . எவலின் மயர் ( Miss Eveline MEYER ) என்ற தமிழ் மாணவியாவார் ; இந்தப் பதிப்புப் பணியை ஏற்றுச் செய் யும் அறிவையும் ஆற்றலையும் எனக்கு வழங்கியவர் என் பேராசிரியர் வி.ஐ. சுப்ரமணியம் ( Professor V.I. SUBRAMANIAM ) ஆவார் ; எழுத்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் போதெல்லாம் என்னை விட்டு விலகி இருந்தவளும் அயர்ச்சி நேரும் போதெல்லாம் ஊக்கமளித்த வளும் என் மனைவி . இவர்கள் அனைவர்க்கும் என் நெஞ்சு நிறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் . இயன்ற வரையில் தெளிவாக எழுத முயன்றுள்ளேன் . எனினும் கையெழுத்து ஒரே அளவில் எல்லாப் பக்கங்களிலும் அமையவில்லை ; அமையவும் முடியாது . அழகைக் காட்டிலும் பிழையின்மைக்கு முத லிடம் கொடுத்திருக்கிறேன் . எங்காவது ஓரிரு இடங்களில் கை யெழுத்துத் தெளிவின்மை அழகின்மை காரணமாகப் படிக்கும் போது யாருக்கேனும் உறுத்தலுணர்வு ஏற்பட்டால் இதைவிடத் தெளிவாக வும் அழகாகவும் எழுதும் திறமையை இறைவன் இப் பிறவியில் எனக்கு அளிக்கவில்லையென்ற அமைதியை அவருக்குத் தெரிவித் துக் கொள்கிறேன் . இங்ஙனம் . தாமோதரன் தெற்காசிய நிறுவனம் ஹைடல்பெர்க் பல்கலைக்கழகம் ஹைடல்பெர்க் மே.ஜெர்மனி