நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

165 நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை (இ-ள்) ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய் - தம்மை ஏற்பனவான எவ்வகைப் பெயர்களுக்கும் ஈற்றிலே நின்று, பொருள் வேற்றுமை செய்வன - அப் பெயர்ப் பொருள்களை வேற்றுமை செய்வன, எட்டே வேற்றுமை - வேற்றுமை எட்டாம் என்றவாறு. அரும்பதவுரை: வேற்றுமை செய்தலான் வேற்றுமை. வேற் றுமை செய்வன யாவை அவை வேற்றுமை. “எட்டே” என்பது தேற்றேகாரம். விளியைப் பெயரது விகாரமெனப் பெயருள் அடக்கி ஏழென்பாருமுளர். பெயர் விகாரமே ஆயினும் படர்க் கையை முன்னிலையாக வேறுபடுத்தல் உடைமையின் எட்டே என்பார் மதம் கோடற்கு வந்ததென்க. வேற்றுமை செய்தலாவது: முதலது சாத்தன் என்றது. அப் பெயர்தான் தன் பொருண்மையிற் பிரிவின்றி எடுத்தலோசையான் ஏனையவற்றின் வேறுபடுத்தது. இவ்வகையாதல் தத்தம் இலக் கணச் சூத்திரத்துட் காண்க. இரண்டாவது சாத்தனையென அப் பெயர்ப் பொருண்மையைக் காரியமாக்கிற்று. மூன்றாவது சாத்தனா லென அப்பெயர்ப் பொருண்மையைக் கருத்தாவாக்கிற்று. நான்கா வது சாத்தற்கென ஏற்றுக்கொள்வதாயிற்று. ஐந்தாவது சாத்தனின் என நீக்குவதாயிற்று. ஆறாவது சாத்தானது என கிழமைய தாக்கிற்று. ஏழாவது சாத்தன்கண்ணென இடமாக்கிற்று. எட்டாவது சாத்தாவென முன்னிலையாக்கிற்று. (34) வேற்றுமையின் பெயரும் முறையும் 291. பெயரே ஐ ஆல் கு இன் அதுகண் விளியென் றாகு மவற்றின் பெயர்முறை. சூ-ம், மேல் எட்டென்ற வேற்றுமைகள் தம் பெயரும் முறையும் கூறு கின்றது. (இ-ள்) பெயரே ஐ ஆல் கு இன் அது கண் விளி - பெயருபும் ஐயுருபும் ஆலுருபும் குவ்வுருபும் இன்னுருபும் அதுவுருபும் கண்ணுருபும் விளி யுருபும், என்றாகும் அவற்றின் பெயர் - இவ்வகையாற் சொல்லப்படும் அவற்றினது பெயர்கள், முறை - இவை நின்ற முறையாம் என்றவாறு. (35) 292. ஆற னுருபு மேற்குமவ் வுருபே. சூ-ம், உருபின்மேலும் உருபு பெறுமெனக் கூறுகின்றது. (இ-ள்) ஆறனுருபும் - மேற் பெயர்கள் வேற்றுமை ஏற்கும் என்றார். அப்பெயர்களன்றி ஆறனுருபும், ஏற்கும் அவ்வுருபே - அவ்வுருபுகளை ஏற்று நிற்கும் என்றவாறு.
165 நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை ( - ள் ) ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய் - தம்மை ஏற்பனவான எவ்வகைப் பெயர்களுக்கும் ஈற்றிலே நின்று பொருள் வேற்றுமை செய்வன - அப் பெயர்ப் பொருள்களை வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை - வேற்றுமை எட்டாம் என்றவாறு . அரும்பதவுரை : வேற்றுமை செய்தலான் வேற்றுமை . வேற் றுமை செய்வன யாவை அவை வேற்றுமை . எட்டே என்பது தேற்றேகாரம் . விளியைப் பெயரது விகாரமெனப் பெயருள் அடக்கி ஏழென்பாருமுளர் . பெயர் விகாரமே ஆயினும் படர்க் கையை முன்னிலையாக வேறுபடுத்தல் உடைமையின் எட்டே என்பார் மதம் கோடற்கு வந்ததென்க . வேற்றுமை செய்தலாவது : முதலது சாத்தன் என்றது . அப் பெயர்தான் தன் பொருண்மையிற் பிரிவின்றி எடுத்தலோசையான் ஏனையவற்றின் வேறுபடுத்தது . இவ்வகையாதல் தத்தம் இலக் கணச் சூத்திரத்துட் காண்க . இரண்டாவது சாத்தனையென அப் பெயர்ப் பொருண்மையைக் காரியமாக்கிற்று . மூன்றாவது சாத்தனா லென அப்பெயர்ப் பொருண்மையைக் கருத்தாவாக்கிற்று . நான்கா வது சாத்தற்கென ஏற்றுக்கொள்வதாயிற்று . ஐந்தாவது சாத்தனின் என நீக்குவதாயிற்று . ஆறாவது சாத்தானது என கிழமைய தாக்கிற்று . ஏழாவது சாத்தன்கண்ணென இடமாக்கிற்று . எட்டாவது சாத்தாவென முன்னிலையாக்கிற்று . ( 34 ) வேற்றுமையின் பெயரும் முறையும் 291. பெயரே ஆல் கு இன் அதுகண் விளியென் றாகு மவற்றின் பெயர்முறை . சூ - ம் மேல் எட்டென்ற வேற்றுமைகள் தம் பெயரும் முறையும் கூறு கின்றது . ( - ள் ) பெயரே ஆல் கு இன் அது கண் விளி - பெயருபும் ஐயுருபும் ஆலுருபும் குவ்வுருபும் இன்னுருபும் அதுவுருபும் கண்ணுருபும் விளி யுருபும் என்றாகும் அவற்றின் பெயர் - இவ்வகையாற் சொல்லப்படும் அவற்றினது பெயர்கள் முறை - இவை நின்ற முறையாம் என்றவாறு . ( 35 ) 292. ஆற னுருபு மேற்குமவ் வுருபே . சூ - ம் உருபின்மேலும் உருபு பெறுமெனக் கூறுகின்றது . ( - ள் ) ஆறனுருபும் - மேற் பெயர்கள் வேற்றுமை ஏற்கும் என்றார் . அப்பெயர்களன்றி ஆறனுருபும் ஏற்கும் அவ்வுருபே - அவ்வுருபுகளை ஏற்று நிற்கும் என்றவாறு .