நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 161 பெருங்கால்யானை என்பன வந்தார், வந்தன எனவும் வரும். (27) தன்மை முன்னிலை படர்க்கைப் பெயர்கள் 284. தன்மை யானான் யாநா முன்னிலை எல்லீர் நீயிர் தீவிர் நீர்நீ அல்லன படர்க்கை யெல்லா மெனல்பொது. சூ-ம், மேல் “தன்மை நான்கு முன்னிலை ஐந்தும்” என்றார்; அவை இவையெனவும் ஒழிந்த பெயர் இவ்விடத்தாமெனவும் கூறுகின்றது. அன்றி எல்லாப் பெயர்க்கும் இடம் அடைத்தலுமாம். (இ-ள்) தன்மை யான் நான் யாம் நாம் - தன்மையிடத்துக்குரிய பெயராவன யானென்றும் நானென்றும் யாமென்னும் நாமென்றும் வரும் நான்குமாம்; முன்னிலை எல்லீர் நீமிர் நீவிர் நீர் நீ - முன்னிலைமிடத்துக்குரிய பெயராவன எல்லீரென்றும் நீயிரென்றும் நீவிரென்றும் நீரென்றும் நீயென்றும் வரும் ஐந்துமாம்; அல்லன படர்க்கை - இவையொழிந்த பெயர்கள் எல்லாம் படர்க்கைமிடத் துக்குரிய பெயர்களாம்; எல்லாமெனல் பொது - அவற்றுள்ளும் எல்லாமென்னும் பெயர் மூவிடத்திற்கும் உரித்தாகிய பெயர் என்றவாறு. (28) 285. வினையின் பெயரே படர்க்கை வினையா லணையும் பெயரே யாண்டு மாகும். சூ-ம், தொழிற்பெயர்க்கும் தொழிலாலணையும் பெயர்க்கும் இடம் அடைத்தல் கூறுகின்றது. (இ-ள்) வினையின் பெயரே படர்க்கை - தொழில்தன்னைச் சொல்லும் பெயர் படர்க்கையிடத்துக்குரிய பெயராம்; வினையாலணையும் பெயரே முற்றுவினையாலணையும் பெயர்கள், யாண்டுமாகும் - தன்மை முன்னிலை படர்க்கை மூன்றிடத்துக்குமுரிய பெயராம் என்றவாறு. உ-ம்: உணல், வரவு, கூத்து, பாட்டு, உண்டல், ஓதல், நிற் றல், நடப்பு, நடக்கை என நிறுத்தி நன்று, தீது எனவொட்டிப் படர்க்கைப்பெயராயின காண்க. வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன, வந்தேன், வந்தேம், வந்தாய், வந்தீர்: இவ் வினை முற்றுகள் வினையாலணையும்பெயராய் வந்தானை, வந்தானால் என உருபேற்று நிற்றலின் வினையாலணையும் பெயர் மூவிடத்துக்கும் உரியவாயின.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 161 பெருங்கால்யானை என்பன வந்தார் வந்தன எனவும் வரும் . ( 27 ) தன்மை முன்னிலை படர்க்கைப் பெயர்கள் 284. தன்மை யானான் யாநா முன்னிலை எல்லீர் நீயிர் தீவிர் நீர்நீ அல்லன படர்க்கை யெல்லா மெனல்பொது . சூ - ம் மேல் தன்மை நான்கு முன்னிலை ஐந்தும் என்றார் ; அவை இவையெனவும் ஒழிந்த பெயர் இவ்விடத்தாமெனவும் கூறுகின்றது . அன்றி எல்லாப் பெயர்க்கும் இடம் அடைத்தலுமாம் . ( - ள் ) தன்மை யான் நான் யாம் நாம் - தன்மையிடத்துக்குரிய பெயராவன யானென்றும் நானென்றும் யாமென்னும் நாமென்றும் வரும் நான்குமாம் ; முன்னிலை எல்லீர் நீமிர் நீவிர் நீர் நீ - முன்னிலைமிடத்துக்குரிய பெயராவன எல்லீரென்றும் நீயிரென்றும் நீவிரென்றும் நீரென்றும் நீயென்றும் வரும் ஐந்துமாம் ; அல்லன படர்க்கை - இவையொழிந்த பெயர்கள் எல்லாம் படர்க்கைமிடத் துக்குரிய பெயர்களாம் ; எல்லாமெனல் பொது - அவற்றுள்ளும் எல்லாமென்னும் பெயர் மூவிடத்திற்கும் உரித்தாகிய பெயர் என்றவாறு . ( 28 ) 285. வினையின் பெயரே படர்க்கை வினையா லணையும் பெயரே யாண்டு மாகும் . சூ - ம் தொழிற்பெயர்க்கும் தொழிலாலணையும் பெயர்க்கும் இடம் அடைத்தல் கூறுகின்றது . ( - ள் ) வினையின் பெயரே படர்க்கை - தொழில்தன்னைச் சொல்லும் பெயர் படர்க்கையிடத்துக்குரிய பெயராம் ; வினையாலணையும் பெயரே முற்றுவினையாலணையும் பெயர்கள் யாண்டுமாகும் - தன்மை முன்னிலை படர்க்கை மூன்றிடத்துக்குமுரிய பெயராம் என்றவாறு . - ம் : உணல் வரவு கூத்து பாட்டு உண்டல் ஓதல் நிற் றல் நடப்பு நடக்கை என நிறுத்தி நன்று தீது எனவொட்டிப் படர்க்கைப்பெயராயின காண்க . வந்தான் வந்தாள் வந்தார் வந்தது வந்தன வந்தேன் வந்தேம் வந்தாய் வந்தீர் : இவ் வினை முற்றுகள் வினையாலணையும்பெயராய் வந்தானை வந்தானால் என உருபேற்று நிற்றலின் வினையாலணையும் பெயர் மூவிடத்துக்கும் உரியவாயின .