நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

158) சொல்லதிகாரம் - பெயரியல் நாய்கள் நரிகள் என உயர்திணைப் பன்மைப் படர்க்கைக் 'கள்' விகுதி அஃறிணைப் படர்க்கைப் பெயர்மேல் வந்து பால் ஒன்றும் வேறுபடுத்தும் விகுதியாமென்க. (21) ஒன்றன்பாற் பெயர் 278. வினாச்சுட் டுடனும் வேறு மாம்பொருள் ஆதி யுறுதுச் சுட்டனை யாய்தம் ஒன்றனெண் ணின்னை வொன்றன் பெயரே. சூ-ம், நிறுத்த முறையானே அஃறிணையொருமைப் படர்க்கைப் பெயராமாறு கூறுகின்றது. (இ-ள்) வினாச்சுட்டுடனும் - மூன்று முதல்வினாவையும் மூன்று சட்டையும் அடுத்து வந்த துவ்வீறும், உ-ம்: எது, ஏது, யாது, அது, இது, உது; வேறுமாம் பொருளாதி - வினாவையும் சுட்டையும் அடுத் தும் அடாதும் வரும் பொருளாதியாறினையும், உறுது - பொருந்தி வந்த துவ்வீற்று மொழிகளும், சுட்டணை யாய்தம் - மூன்று சுட்டை யும் அடைந்த ஆய்தம் அடுத்த மொழிகளும், ஒன்றனெண்ணின்னன - ஒன்றென்னும் எண்ணும் இவை போல்வன பிறவும், ஒன்றன் பெயரே - அஃறிணை ஒருமைப்பாற் பெயர்களாம் என்றவாறு. உ-ம்: எப்பொருளது, எவ்விடத்தது, எந்நாளது, எக்கோட்டது, எந்நிறத்தது, எந்நடையது என வரும். இவ்வாறே ஏனை வினாச் சுட்டுக்கள் அடுத்துப் பொருளாதியாறினையும் ஒட்டுக. ஏகார வினா இடமுதல் ஐந்தினும் யா வினாக் காலமுதல் நான்கினும் வருதல் அரியதெனக் கொள்க. குழையது, நிலத்தது, நாளது, வாலது, குறியது, ஆடலது எனப் பொருளாதியாறும் வினாச் சுட்டுடன் அடாமல் தனியே துவ்வீறாக வந்தது. அஃது, இஃது, உஃது எனச் சுட்டணை ஆய்தப்பெயர் வந்தவாறு ஒன்று என எண் வந்தவாறு. "இன்னன” என்றதினாற் பிறிது, மற்றையது எனவும் கொள்க. (22) பலவின்பாற் பெயர் 279. முன்ன ரவ்வொடு வருவை யவ்வும் சுட்டிறு வவ்வுங் கள்ளிறு மொழியும் ஒன்றல வெண்ணு முள்ள வில்ல பல்ல சில்ல வுளவில பலசில இன்னன பலவின் பெயரா கும்மே. சூ-ம், அஃறிணைப் பன்மைப் படர்க்கைப் பெயர் கூறியது.
158 ) சொல்லதிகாரம் - பெயரியல் நாய்கள் நரிகள் என உயர்திணைப் பன்மைப் படர்க்கைக் ' கள் ' விகுதி அஃறிணைப் படர்க்கைப் பெயர்மேல் வந்து பால் ஒன்றும் வேறுபடுத்தும் விகுதியாமென்க . ( 21 ) ஒன்றன்பாற் பெயர் 278. வினாச்சுட் டுடனும் வேறு மாம்பொருள் ஆதி யுறுதுச் சுட்டனை யாய்தம் ஒன்றனெண் ணின்னை வொன்றன் பெயரே . சூ - ம் நிறுத்த முறையானே அஃறிணையொருமைப் படர்க்கைப் பெயராமாறு கூறுகின்றது . ( - ள் ) வினாச்சுட்டுடனும் - மூன்று முதல்வினாவையும் மூன்று சட்டையும் அடுத்து வந்த துவ்வீறும் - ம் : எது ஏது யாது அது இது உது ; வேறுமாம் பொருளாதி - வினாவையும் சுட்டையும் அடுத் தும் அடாதும் வரும் பொருளாதியாறினையும் உறுது - பொருந்தி வந்த துவ்வீற்று மொழிகளும் சுட்டணை யாய்தம் - மூன்று சுட்டை யும் அடைந்த ஆய்தம் அடுத்த மொழிகளும் ஒன்றனெண்ணின்னன - ஒன்றென்னும் எண்ணும் இவை போல்வன பிறவும் ஒன்றன் பெயரே - அஃறிணை ஒருமைப்பாற் பெயர்களாம் என்றவாறு . - ம் : எப்பொருளது எவ்விடத்தது எந்நாளது எக்கோட்டது எந்நிறத்தது எந்நடையது என வரும் . இவ்வாறே ஏனை வினாச் சுட்டுக்கள் அடுத்துப் பொருளாதியாறினையும் ஒட்டுக . ஏகார வினா இடமுதல் ஐந்தினும் யா வினாக் காலமுதல் நான்கினும் வருதல் அரியதெனக் கொள்க . குழையது நிலத்தது நாளது வாலது குறியது ஆடலது எனப் பொருளாதியாறும் வினாச் சுட்டுடன் அடாமல் தனியே துவ்வீறாக வந்தது . அஃது இஃது உஃது எனச் சுட்டணை ஆய்தப்பெயர் வந்தவாறு ஒன்று என எண் வந்தவாறு . இன்னன என்றதினாற் பிறிது மற்றையது எனவும் கொள்க . ( 22 ) பலவின்பாற் பெயர் 279. முன்ன ரவ்வொடு வருவை யவ்வும் சுட்டிறு வவ்வுங் கள்ளிறு மொழியும் ஒன்றல வெண்ணு முள்ள வில்ல பல்ல சில்ல வுளவில பலசில இன்னன பலவின் பெயரா கும்மே . சூ - ம் அஃறிணைப் பன்மைப் படர்க்கைப் பெயர் கூறியது .