நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 157 பெண்பாற் பெயர் 276. கிளைமுத லாகக் கிளந்த பொருள்களுள் ளவ்வொற் றிகரக் கேற்ற வீற்றவும் தோழி செவிலி மகடூஉ நங்கை தையலோ டின்னன பெண்பாற் பெயரே. சூ-ம், பெண்பாற்குரிய பெயர் இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) கிளைமுதலாகக் கிளந்த பொருள்களுள் - மேற் கிளை முதலா கச் சொல்லப்பட்ட பகுதிக்குள், ளவ்வொற்றிகரக் கேற்ற வீற்றவும் - எகரவொற்றுக்கும் இகரத்துக்கும் ஏற்ற ஈற்றான் வருவனவும், தோழி செவிலி மகடூஉ நங்கை தையலோடு - தோழி, செவிலி, மகடூஉ , நங்கை, தையலென்றவற்றுடனே, இன்னன பெண்பாற் பெயரே - இவை போல்வன பிறவும் பெண்பாற்குரிய பெயர்களாம் என்றவாறு. (20) பலர்பாற் பெயர் 277. கிளந்த கிளைமுத லுற்றரவ் வீற்றவும் கள்ளெ னீற்றி னேற்பவும் பிறவும் பல்லோர் பெயரின் பகுதி யாகும். சூ-ம், பலர்பாற்குரிய பெயராமாறு கூறுகின்றது. (இ-ள்), கிளந்த கிளைமுதல் - மேற்கூறிய கிளைமுதலாகிய பொருள் அனைத்தையும், உற்ற ரவ்வீற்றவும் - பொருந்தி வந்த ரகரவொற்றை ஈறாகவுடைய மொழிகளும், கள்ளெனீற்றினேற்பவும் - அப்பொருளிற் கள்ளென்னும் இறுதி ஈறாகவுடைய மொழிகளுள் ஈண்டைக்குப் பொருந்துவனவும், பிறவும் - இவை போல்வன பிறவும், பல்லோர் பெயரின் பகுதியாகும் - பலர்பாற்குரிய பெயர்களாம் என்றவாறு. உ-ம்: ஆண்பாற்குரிய பெயர்க்கு மேற்காட்டிய உதாரணங்களை ரவ்வீறாகத் திரித்துக் கண்டுகொள்க. கள்ளீற்றுக்கும் ஏற்பன கொள்க. அவர்கள், அரசர்கள், உண்டவர்கள், உறங்கினவர்கள் என்பன ஒருசார் ரகரவொற்றும் கள்ளென் விகுதியும் கூடி வந்தாலும் முன்னின்ற ரகார ஒற்றே பால் விளக்கும்; ஏனையது வாய்பாடு நிரம்பல் மாத்திரையாய் வந்ததெனக் கொள்க.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 157 பெண்பாற் பெயர் 276. கிளைமுத லாகக் கிளந்த பொருள்களுள் ளவ்வொற் றிகரக் கேற்ற வீற்றவும் தோழி செவிலி மகடூஉ நங்கை தையலோ டின்னன பெண்பாற் பெயரே . சூ - ம் பெண்பாற்குரிய பெயர் இவையெனக் கூறுகின்றது . ( - ள் ) கிளைமுதலாகக் கிளந்த பொருள்களுள் - மேற் கிளை முதலா கச் சொல்லப்பட்ட பகுதிக்குள் ளவ்வொற்றிகரக் கேற்ற வீற்றவும் - எகரவொற்றுக்கும் இகரத்துக்கும் ஏற்ற ஈற்றான் வருவனவும் தோழி செவிலி மகடூஉ நங்கை தையலோடு - தோழி செவிலி மகடூஉ நங்கை தையலென்றவற்றுடனே இன்னன பெண்பாற் பெயரே - இவை போல்வன பிறவும் பெண்பாற்குரிய பெயர்களாம் என்றவாறு . ( 20 ) பலர்பாற் பெயர் 277. கிளந்த கிளைமுத லுற்றரவ் வீற்றவும் கள்ளெ னீற்றி னேற்பவும் பிறவும் பல்லோர் பெயரின் பகுதி யாகும் . சூ - ம் பலர்பாற்குரிய பெயராமாறு கூறுகின்றது . ( - ள் ) கிளந்த கிளைமுதல் - மேற்கூறிய கிளைமுதலாகிய பொருள் அனைத்தையும் உற்ற ரவ்வீற்றவும் - பொருந்தி வந்த ரகரவொற்றை ஈறாகவுடைய மொழிகளும் கள்ளெனீற்றினேற்பவும் - அப்பொருளிற் கள்ளென்னும் இறுதி ஈறாகவுடைய மொழிகளுள் ஈண்டைக்குப் பொருந்துவனவும் பிறவும் - இவை போல்வன பிறவும் பல்லோர் பெயரின் பகுதியாகும் - பலர்பாற்குரிய பெயர்களாம் என்றவாறு . - ம் : ஆண்பாற்குரிய பெயர்க்கு மேற்காட்டிய உதாரணங்களை ரவ்வீறாகத் திரித்துக் கண்டுகொள்க . கள்ளீற்றுக்கும் ஏற்பன கொள்க . அவர்கள் அரசர்கள் உண்டவர்கள் உறங்கினவர்கள் என்பன ஒருசார் ரகரவொற்றும் கள்ளென் விகுதியும் கூடி வந்தாலும் முன்னின்ற ரகார ஒற்றே பால் விளக்கும் ; ஏனையது வாய்பாடு நிரம்பல் மாத்திரையாய் வந்ததெனக் கொள்க .