நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

156 சொல்லதிகாரம் - பெயரியல் வரும் மூன்று சுட்டையும், வினா - பொருளாதி ஆறையும் அடுத்து வரும் முதல் வினாவையும், பிற மற்றொடு - பிற என்பதனையும் மற்றை என்பதனையும், உற்ற னவ்வீறு - பொருந்தி வரும் னகரத்தை ஈறாகவுடைய பெயர்களும், நம்பி ஆடூஉ விடலை கோ - நம்பி என்ப தும் ஆடூஉ என்பதும் விடலை என்பதும் கோ என்பதும், வேள் குருசில் தோன்றல் - வேள் என்பதும் குருசில் என்பதும் தோன்றல் என்பதும், இன்னன - இவை போல்வன பிறவுமான பெயர்களும், ஆண் பெயர் ஆகுமென்ப - ஆண்பாற்குரிய பெயர்களாமென்று சொல்வர் என்ற வாறு. “தநது, எகர முதலா மகர மிடையிட்டு, னளரவா மீற்றன சுற்றப் பெயரே." உ-ம்: தமன், நமன், நுமன், எமன் எனவும் ஒருவன், சங்கத்தன், பொன்னன், குழையன் எனவும் பொருள் தொடர்ந்தன. மலை யன், மறவன், இடையன், ஊரன், பரதவன் எனவும் கலிங்கன், மதுரையான், வானான், அகத்தான், புறத்தான், பிற நிலத்தான், பிலத்தான் எனவும் இடம் தொடர்ந்தன. ஓராட்டையான், ஈராட் டையான், கூதிரான், வேனிலான், சித்திரையான், வைகாசியான், அசுபதியான் மூலத்தான், அற்றையான், இற்றையான் எனக் காலம் தொடர்ந்தன. திணிதோளான், சுரிகுழலன், அகன்மார்பன், செங்கண்ணன், அலைகாதன், நால்வாயன் எனவும் பெரியன், சிறியன் எனவும் அறிவன், புலவன் எனவும் பொன்னொப்பான், மணியொப்பான் எனவும் கூனன், குறளன் எனவும் கரியன், செய்யான், மானிடவன், தேவன், நரகன் எனவும் அந்தணன், அரசன், வணிகன், வெள்ளான் எனவும் சேரன், சோழன், பாண்டி யன் எனவும் ஆசிரியன், படைத்தலைவன், சேனாபதியான் என வும் இவை பண்பு தொடர்ந்தன. அவன், அப்பொருளான், அவ் விடத்தான், அந்நாளன், அக்குழலன், அக்கரியன், அக்கூத்தன் எனவும் அகரச் சுட்டுடன் பொருளாதி தொடர்ந்தன. ஏனைச் சுட்டு வினாக்களினும் இவ்வாறே ஒட்டுக. பிறன், மற்றை யான், பிறபொருளான், பிறவிடத்தான் எனவும் ஒழிந்த நான் கிடத்தும் ஒட்டிக்கொள்க. சுட்டு முதலானவை எப்பொருளினும் அடுத்து வருதலின் வேறோதினார் என்க. நம்பி, ஆடூஉ, விடலை, கோ, வேள், குரிசில், தோன்றல் என இவை இடுகுறிப் பெயர். இறுதிக்கண் “இன்னன” என்றதனால் வில்லி, வாளி, கொற் றந்தை, சாத்தந்தை, வடுகந்தை எனவும் கொள்க. வலியன், நரையன், கருடன் என இவை னகரவீறாய் உயர் திணையாக ஓதலின் உயர்திணைப் பால் ஆகாதென்க. (19)
156 சொல்லதிகாரம் - பெயரியல் வரும் மூன்று சுட்டையும் வினா - பொருளாதி ஆறையும் அடுத்து வரும் முதல் வினாவையும் பிற மற்றொடு - பிற என்பதனையும் மற்றை என்பதனையும் உற்ற னவ்வீறு - பொருந்தி வரும் னகரத்தை ஈறாகவுடைய பெயர்களும் நம்பி ஆடூஉ விடலை கோ - நம்பி என்ப தும் ஆடூஉ என்பதும் விடலை என்பதும் கோ என்பதும் வேள் குருசில் தோன்றல் - வேள் என்பதும் குருசில் என்பதும் தோன்றல் என்பதும் இன்னன - இவை போல்வன பிறவுமான பெயர்களும் ஆண் பெயர் ஆகுமென்ப - ஆண்பாற்குரிய பெயர்களாமென்று சொல்வர் என்ற வாறு . தநது எகர முதலா மகர மிடையிட்டு னளரவா மீற்றன சுற்றப் பெயரே . - ம் : தமன் நமன் நுமன் எமன் எனவும் ஒருவன் சங்கத்தன் பொன்னன் குழையன் எனவும் பொருள் தொடர்ந்தன . மலை யன் மறவன் இடையன் ஊரன் பரதவன் எனவும் கலிங்கன் மதுரையான் வானான் அகத்தான் புறத்தான் பிற நிலத்தான் பிலத்தான் எனவும் இடம் தொடர்ந்தன . ஓராட்டையான் ஈராட் டையான் கூதிரான் வேனிலான் சித்திரையான் வைகாசியான் அசுபதியான் மூலத்தான் அற்றையான் இற்றையான் எனக் காலம் தொடர்ந்தன . திணிதோளான் சுரிகுழலன் அகன்மார்பன் செங்கண்ணன் அலைகாதன் நால்வாயன் எனவும் பெரியன் சிறியன் எனவும் அறிவன் புலவன் எனவும் பொன்னொப்பான் மணியொப்பான் எனவும் கூனன் குறளன் எனவும் கரியன் செய்யான் மானிடவன் தேவன் நரகன் எனவும் அந்தணன் அரசன் வணிகன் வெள்ளான் எனவும் சேரன் சோழன் பாண்டி யன் எனவும் ஆசிரியன் படைத்தலைவன் சேனாபதியான் என வும் இவை பண்பு தொடர்ந்தன . அவன் அப்பொருளான் அவ் விடத்தான் அந்நாளன் அக்குழலன் அக்கரியன் அக்கூத்தன் எனவும் அகரச் சுட்டுடன் பொருளாதி தொடர்ந்தன . ஏனைச் சுட்டு வினாக்களினும் இவ்வாறே ஒட்டுக . பிறன் மற்றை யான் பிறபொருளான் பிறவிடத்தான் எனவும் ஒழிந்த நான் கிடத்தும் ஒட்டிக்கொள்க . சுட்டு முதலானவை எப்பொருளினும் அடுத்து வருதலின் வேறோதினார் என்க . நம்பி ஆடூஉ விடலை கோ வேள் குரிசில் தோன்றல் என இவை இடுகுறிப் பெயர் . இறுதிக்கண் இன்னன என்றதனால் வில்லி வாளி கொற் றந்தை சாத்தந்தை வடுகந்தை எனவும் கொள்க . வலியன் நரையன் கருடன் என இவை னகரவீறாய் உயர் திணையாக ஓதலின் உயர்திணைப் பால் ஆகாதென்க . ( 19 )