நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

122 எழுத்ததிகாரம் - மெய்யீற்றுப் புணரியல் பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் இரு வழி யும் தொழிற்பெயர்க்கண் உகரம் பெற்றன. இவற்றை எடுத்துச்சரித்துப் பெயரை வருவித்து ஏவல் வினையாக்கி உகரம் பெற்றவாறு காண்க. உரிஞ கொற்றா, உரினு சாத்தா, உரிது தேவா, பூதா, ஞெள்ளா, நாகா, மாடா, வளவா என வரும். பிறவுமன்ன உண், தின் கொற்றா, சாத்தா, தேவா, பூதா என இவை ஏவற்கண் உக ரம் பெறாவென்க. “நனி” என்றதினாற் சிறுபான்மை இவை எட்டொற்று மல்லாத பிற ஒற்றினும் உகரம் பெறுமென்க. மணலை வாரு, சருகை வாரு, நீ தாழு, நீ வாழு என ரகர ழகரம் ஏவற்கண் உகரம் பெற்றன. (4) 207. நவ்விறு தொழிற்பெயர்க் கவ்வுமாம் வேற்றுமை. சூ-ம், நகரவீற்றுத் தொழிற்பெயர் விகாரம் கூறியது. (இ-ள்) நவ்விறு தொழிற்பெயர்க்கு - நிலைமொழி நகரவீற்றுத் தொழிற் பெயர்க்கு, அவ்வுமாம் - உகரமேயன்றி அகரமும் வந்து பொருந்தும், வேற்றுமை - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் என்றவாறு. உ-ம்: பொருநக் கடுமை, சிறுமை, தீமை, பெருமை என வரும். (5) ணகர னகரவீறு 208. ணனவல் லினம்வரட் டறவும் பிறவரின் இயல்பு மாகும் வேற்றுமைக் கல்வழிக் கனைத்துமெய் வரினு மியல்பா கும்மே. சூ-ம், ணகார னகார ஈறு புணருமாறு கூறியது. (இ-ள்) ணன - நிலைமொழி ஈறாய் நின்ற ணகர னகாரங்கள், வல்லி னம்வர - வருமொழி முதலாய் நின்ற வல்லினம் வந்தால், டறவும் - முறையே ண டகரமும் ன றகரமுமாம், பிறவரின் - ஒழிந்த மெல்லின மும் இடையினமும் வருமொழி முதலாக வந்தால், இயல்புமாகும் - நிலைமொழி ஈற்றில் ணகார னகாரங்கள் திரியாமல் இயல்பாய் முடியும், வேற்றுமைக்கு - இவ்விரு விதியும் வேற்றுமைப் புணர்ச் சிக்கண்ணாம், அல்வழிக்கு - அல்வழி பொருட் புணர்ச்சிக்கண் அவ் வீற்று ணகார னகாரங்கள், அனைத்து மெய் வரினும் - வருமொழி முதலாக மூவினமும் வந்தாலும், இயல்பாகும்மே - இயல்பாய் முடி யும் என்றவாறு.
122 எழுத்ததிகாரம் - மெய்யீற்றுப் புணரியல் பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் இரு வழி யும் தொழிற்பெயர்க்கண் உகரம் பெற்றன . இவற்றை எடுத்துச்சரித்துப் பெயரை வருவித்து ஏவல் வினையாக்கி உகரம் பெற்றவாறு காண்க . உரிஞ கொற்றா உரினு சாத்தா உரிது தேவா பூதா ஞெள்ளா நாகா மாடா வளவா என வரும் . பிறவுமன்ன உண் தின் கொற்றா சாத்தா தேவா பூதா என இவை ஏவற்கண் உக ரம் பெறாவென்க . நனி என்றதினாற் சிறுபான்மை இவை எட்டொற்று மல்லாத பிற ஒற்றினும் உகரம் பெறுமென்க . மணலை வாரு சருகை வாரு நீ தாழு நீ வாழு என ரகர ழகரம் ஏவற்கண் உகரம் பெற்றன . ( 4 ) 207. நவ்விறு தொழிற்பெயர்க் கவ்வுமாம் வேற்றுமை . சூ - ம் நகரவீற்றுத் தொழிற்பெயர் விகாரம் கூறியது . ( - ள் ) நவ்விறு தொழிற்பெயர்க்கு - நிலைமொழி நகரவீற்றுத் தொழிற் பெயர்க்கு அவ்வுமாம் - உகரமேயன்றி அகரமும் வந்து பொருந்தும் வேற்றுமை - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் என்றவாறு . - ம் : பொருநக் கடுமை சிறுமை தீமை பெருமை என வரும் . ( 5 ) ணகர னகரவீறு 208. ணனவல் லினம்வரட் டறவும் பிறவரின் இயல்பு மாகும் வேற்றுமைக் கல்வழிக் கனைத்துமெய் வரினு மியல்பா கும்மே . சூ - ம் ணகார னகார ஈறு புணருமாறு கூறியது . ( - ள் ) ணன - நிலைமொழி ஈறாய் நின்ற ணகர னகாரங்கள் வல்லி னம்வர - வருமொழி முதலாய் நின்ற வல்லினம் வந்தால் டறவும் - முறையே டகரமும் றகரமுமாம் பிறவரின் - ஒழிந்த மெல்லின மும் இடையினமும் வருமொழி முதலாக வந்தால் இயல்புமாகும் - நிலைமொழி ஈற்றில் ணகார னகாரங்கள் திரியாமல் இயல்பாய் முடியும் வேற்றுமைக்கு - இவ்விரு விதியும் வேற்றுமைப் புணர்ச் சிக்கண்ணாம் அல்வழிக்கு - அல்வழி பொருட் புணர்ச்சிக்கண் அவ் வீற்று ணகார னகாரங்கள் அனைத்து மெய் வரினும் - வருமொழி முதலாக மூவினமும் வந்தாலும் இயல்பாகும்மே - இயல்பாய் முடி யும் என்றவாறு .