நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நான்காவது மெய்யீற்றுப் புணரியல் மெய்யீற்றின் முன் உயிர் 203. உடன்மே லுயிர்வந் தொன்றுவது லியல்பே. சூ-ம், மெய்யீற்றின் முன் உயிர்முதல் வந்து புணருமாறு கூறியது. (இ-ள்) உடன்மேல் - நிலைமொழி ஈற்றினின்ற ஒற்றின் மேல், உயிர் வந் தொன்றுவது - வருமொழி முதல் நின்ற உயிர் வந்து ஒன்றுதல், இயல்பே - இயல்புப் புணர்ச்சியாம் என்றவாறு. உ-ம்: உரிஞ், நாண், வெரிந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், புகழ், நாள் என நிறுத்தி அழகிது, ஆன்றது, இயன்றது, ஈண்டிற்று, உயர்ந்தது, ஊறிற்று, எழுந்தது, ஏறிற்று, ஐது, ஒழிந்தது, ஓங்கிற்று என முறையே ஒட்டிக்கொள்க. ஔவொடு வரும் வழியும் ஆராய்ந்து கொள்க. அழகு, ஆட்டம், இயைபு, ஈகை, உரம், ஊக்கம், எழுச்சி, ஏற் றம், ஐயம், ஒழிபு, ஓட்டம், ஔவியம் என வேற்றுமைப் புணர்ச்சிக்கும் ஒட்டுக. உடன்மேல் உயிர் வந்தொன்றுவது உலகத்தின் முறைமை என்றுமாம். (1) 204. தனிக்குறின் முன்னொற் றுயிர்வரி னிரட்டும் சூ-ம், தனிக் குற்றெழுத்தடுத்த ஒற்றின்மேல் உயிர் வந்து புணரு மாறு கூறியது. (இ-ள்) தனிக்குறின் முன்னொற்று - நிலைமொழி ஒரு குற்றெழுத் தின் பின்னின்று அவ்வொற்றின்மேல், உயிர்வரின் - வருமொழி முதல் நின்ற உயிர் வந்தால், இரட்டும் - அவ்வொற்று இரட்டித்து நிற்கும் என்றவாறு. உ-ம்: மண்ணழகிது, பொன்னழகிது, கம்மழகிது, மெய்யழ கிது, கல்லழகிது, தெவ்வழகிது, புள்ளழகிது என வரும்.
நான்காவது மெய்யீற்றுப் புணரியல் மெய்யீற்றின் முன் உயிர் 203. உடன்மே லுயிர்வந் தொன்றுவது லியல்பே . சூ - ம் மெய்யீற்றின் முன் உயிர்முதல் வந்து புணருமாறு கூறியது . ( - ள் ) உடன்மேல் - நிலைமொழி ஈற்றினின்ற ஒற்றின் மேல் உயிர் வந் தொன்றுவது - வருமொழி முதல் நின்ற உயிர் வந்து ஒன்றுதல் இயல்பே - இயல்புப் புணர்ச்சியாம் என்றவாறு . - ம் : உரிஞ் நாண் வெரிந் மரம் பொன் வேய் வேர் வேல் தெவ் புகழ் நாள் என நிறுத்தி அழகிது ஆன்றது இயன்றது ஈண்டிற்று உயர்ந்தது ஊறிற்று எழுந்தது ஏறிற்று ஐது ஒழிந்தது ஓங்கிற்று என முறையே ஒட்டிக்கொள்க . ஔவொடு வரும் வழியும் ஆராய்ந்து கொள்க . அழகு ஆட்டம் இயைபு ஈகை உரம் ஊக்கம் எழுச்சி ஏற் றம் ஐயம் ஒழிபு ஓட்டம் ஔவியம் என வேற்றுமைப் புணர்ச்சிக்கும் ஒட்டுக . உடன்மேல் உயிர் வந்தொன்றுவது உலகத்தின் முறைமை என்றுமாம் . ( 1 ) 204. தனிக்குறின் முன்னொற் றுயிர்வரி னிரட்டும் சூ - ம் தனிக் குற்றெழுத்தடுத்த ஒற்றின்மேல் உயிர் வந்து புணரு மாறு கூறியது . ( - ள் ) தனிக்குறின் முன்னொற்று - நிலைமொழி ஒரு குற்றெழுத் தின் பின்னின்று அவ்வொற்றின்மேல் உயிர்வரின் - வருமொழி முதல் நின்ற உயிர் வந்தால் இரட்டும் - அவ்வொற்று இரட்டித்து நிற்கும் என்றவாறு . - ம் : மண்ணழகிது பொன்னழகிது கம்மழகிது மெய்யழ கிது கல்லழகிது தெவ்வழகிது புள்ளழகிது என வரும் .