நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

112 எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல் 2 பாப்புத்தோல் பாம்பின்தோல் என வேற்றுமைக்கண் திரிந்தும் திரி யாமலும் வந்தன. (33) 184. ஐயீற் றுடைக்குற் றுகரமு முளவே. சூ-ம், குற்றியலுகரவீற்று ஐகாரவீறாமெனக் கூறியது. (இ-ள்) ஐயீற்றுடைக் - ஐகாரத்தைத் தம்மீற்றிலே பெற வரும், குற் றுகரமு முளவே - குற்றியலுகரங்களும் உள என்றவாறு. உ-ம்: ஓராட்டை நெல், ஈராட்டைப் பொன், ஐயாட்டைக் கடமை, அன்றைக் கூத்தன், பண்டைச் சான்றோர் என வரும். (34) 185. திசையொடு திசையும் பிறவுஞ் சேரின் நிலையிற் றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும் றகரம் னலவாத் திரிதலு மாம்பிற. சூ-ம், நாற்றிசையிலுள்ள குற்றுகரம் புணருமாறு கூறியது. (இ-ள்) திசையொடு திசையும் - குற்றியலுகரவீற்றின் நாற்பெருந் திசைகளும் தம்மோடு தாம் மாறிப் புணருமிடத்தும், பிறவும் சேரின் - பிறவற்றோடும் புணருமிடத்தும், நிலையீற்றுயிர்மெய் - நிலைமொழி மீற்று உயிர்மெய் கெடுதலும், கவ்வொற்று நீங்கலும் - அதன் மேனின்ற கவ்வொற்று நீங்குதலும், றகரம் னலவாத் திரிதலும் - அதன் மேனின்ற றகாரம் னகாரம் லகாரமாகத் திரிதலும், ஆம் பிற - இத்தன்மை விதியும் பிற விதியும் பெறும் என்றவாறு. உ-ம்: வடகிழக்கு, வடமேற்கு, வடவேங்கடம், வடபால், வட கடல், வடமலை, தென்கிழக்கு, தென்மேற்கு, தென்குமரி, தென்கடல், தென்பால், தென்றலை, மேற்கடல், மேல்பால், குணகடல், குணபால், குடகடல், குடபால். “பிற”வென்ற விதப்பானே கிழவென்பதனைக் கீழென நிறுவிக் கீழ் பால், கீழ்சார், கீழ்கரை என வரும். (35) 186. தெங்குநீண் டீற்றுயிர் மெய்கெடுங் காய்வரின். சூ-ம், தெங்கென்னும் சொல் காயென்னும் சொல்லொடு புணருமாறு கூறியது. (இ-ள்) தெங்கு நீண்டு - தெங்கென்னும் நிலைமொழியின் முதல் நீண்டு, ஈற்றுயிர்மெய் கெடும் - அச்சொல்லின் ஈற்றுயிர்மெய்யும் கெடும், காய் வரின் - வருமொழி காயென்னும் சொல் வந்தால் என்ற வாறு. உ-ம்: தேங்காய் என வரும். (36)
112 எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல் 2 பாப்புத்தோல் பாம்பின்தோல் என வேற்றுமைக்கண் திரிந்தும் திரி யாமலும் வந்தன . ( 33 ) 184. ஐயீற் றுடைக்குற் றுகரமு முளவே . சூ - ம் குற்றியலுகரவீற்று ஐகாரவீறாமெனக் கூறியது . ( - ள் ) ஐயீற்றுடைக் - ஐகாரத்தைத் தம்மீற்றிலே பெற வரும் குற் றுகரமு முளவே - குற்றியலுகரங்களும் உள என்றவாறு . - ம் : ஓராட்டை நெல் ஈராட்டைப் பொன் ஐயாட்டைக் கடமை அன்றைக் கூத்தன் பண்டைச் சான்றோர் என வரும் . ( 34 ) 185. திசையொடு திசையும் பிறவுஞ் சேரின் நிலையிற் றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும் றகரம் னலவாத் திரிதலு மாம்பிற . சூ - ம் நாற்றிசையிலுள்ள குற்றுகரம் புணருமாறு கூறியது . ( - ள் ) திசையொடு திசையும் - குற்றியலுகரவீற்றின் நாற்பெருந் திசைகளும் தம்மோடு தாம் மாறிப் புணருமிடத்தும் பிறவும் சேரின் - பிறவற்றோடும் புணருமிடத்தும் நிலையீற்றுயிர்மெய் - நிலைமொழி மீற்று உயிர்மெய் கெடுதலும் கவ்வொற்று நீங்கலும் - அதன் மேனின்ற கவ்வொற்று நீங்குதலும் றகரம் னலவாத் திரிதலும் - அதன் மேனின்ற றகாரம் னகாரம் லகாரமாகத் திரிதலும் ஆம் பிற - இத்தன்மை விதியும் பிற விதியும் பெறும் என்றவாறு . - ம் : வடகிழக்கு வடமேற்கு வடவேங்கடம் வடபால் வட கடல் வடமலை தென்கிழக்கு தென்மேற்கு தென்குமரி தென்கடல் தென்பால் தென்றலை மேற்கடல் மேல்பால் குணகடல் குணபால் குடகடல் குடபால் . பிற வென்ற விதப்பானே கிழவென்பதனைக் கீழென நிறுவிக் கீழ் பால் கீழ்சார் கீழ்கரை என வரும் . ( 35 ) 186. தெங்குநீண் டீற்றுயிர் மெய்கெடுங் காய்வரின் . சூ - ம் தெங்கென்னும் சொல் காயென்னும் சொல்லொடு புணருமாறு கூறியது . ( - ள் ) தெங்கு நீண்டு - தெங்கென்னும் நிலைமொழியின் முதல் நீண்டு ஈற்றுயிர்மெய் கெடும் - அச்சொல்லின் ஈற்றுயிர்மெய்யும் கெடும் காய் வரின் - வருமொழி காயென்னும் சொல் வந்தால் என்ற வாறு . - ம் : தேங்காய் என வரும் . ( 36 )