நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 111 182. நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுள் டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே. சூ-ம், எய்தியனதன்மேற் சிறப்பு விதி கூறியது. (இ-ள்) நெடிலோடுயிர்த்தொடர் - நெட்டெழுத்தீற்றினும் உயிர்த் தொடரீற்றினும், குற்றுகரங்களுள் - உகரப் பற்றுக்கோடாகி வரும் வல்லெழுத்து ஆறனுள், டறவொற்றிரட்டும் - டகார றகாரமான இரண் டொற்றுக்களும் இரட்டிக்கும், வேற்றுமை மிகவே - பெரும்பாலும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் என்றவாறு. உ-ம்: ஆட்டுக்கால், பாற்றுக்கால், முருட்டுக்கால், முயிற்றுக் கால், செவி, தலை, புறம், நிறம், மயிர், யாப்பு வலிமை, அடி, ஆய்வு என வேற்றுமைக்கண் நாற்கணத்தோடும் மிக்கன. “நாடுகிழ வோனே” (பொருந.248), “காடக மிறந்தோர்க்கே ஓடமென் மனனே காண்”, “கறைமிட றணியலு மணிந்தன்று” (புறம். கடவுள்) எனச் சிறுபான்மை வேற்றுமைக்கண் மிகா வாயின. காட்டரண், குருட்டுக்கோழி, முருட்டுப்புலையன், களிற்றியானை, வெளிற்றுப்பன்றி, எயிற்றேனம் எனச் சிறு பான்மை அல்வழிக்கண் மிக்கன. வெருக்குக்கண், வெருக்குக் கால், செவி, தலை, புறம் என உகரப் பற்றுக்கோடாகி பிற மெய்யும் மிக்கது. (32) 183. மென்றொடர் மொழியுட் சிலவேற் றுமையில் தம்மின வன்றொட ராகா மன்னே. சூ-ம், மெற்றொடர்க் குற்றுகரம் புணருமாறு கூறியது. (இ-ள்) மென்றொடர் மொழியுட் சில - மென்றொடர் மொழிக் குற்று கரங்களுட் சில மொழிகள், வேற்றுமையில் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணே, தம்மினம் - இடையே நின்ற மெல்லெழுத்துத் தமக்கினமான, வன்றொடராகா - வல்லெழுத்தாகத் திரிந்து வருவன வும் திரியாமல் நிற்பனவுமாம்; மன்னே - பெரும்பாலும் என்றவாறு. உ-ம்: குரக்குக்கால், கழைச்சுக்கோல், எட்குக்குட்டி, மருத்துப் பை, பாப்புக்கால், ஏற்புடம்பு எனத் திரிந்தன. நாற்கணத் தோடும் ஓட்டுக. ஞெண்டுக்கால், வண்டுக்கால், பந்துத் திரட்சி, கோங்கிலை, புன்கங்காய், அடம்பம்பூ, பொதும்பிற் பூவை, குறும்பிற்கொற்றன் எனத் திரியாமல் நின்றன. “மன்னே”யென்ற மிகையானே ஒன்றுதானே ஓரிடத்துத் திரிந்தும் திரியாதும் வருவனவும் உளவெனக் கொள்க. அவை குரக்கடி குரங் கடி, குரக்குக்கால் குரங்கின்கால், வேப்பங்காய் வேம்பின்காய்,
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 111 182. நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுள் டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே . சூ - ம் எய்தியனதன்மேற் சிறப்பு விதி கூறியது . ( - ள் ) நெடிலோடுயிர்த்தொடர் - நெட்டெழுத்தீற்றினும் உயிர்த் தொடரீற்றினும் குற்றுகரங்களுள் - உகரப் பற்றுக்கோடாகி வரும் வல்லெழுத்து ஆறனுள் டறவொற்றிரட்டும் - டகார றகாரமான இரண் டொற்றுக்களும் இரட்டிக்கும் வேற்றுமை மிகவே - பெரும்பாலும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் என்றவாறு . - ம் : ஆட்டுக்கால் பாற்றுக்கால் முருட்டுக்கால் முயிற்றுக் கால் செவி தலை புறம் நிறம் மயிர் யாப்பு வலிமை அடி ஆய்வு என வேற்றுமைக்கண் நாற்கணத்தோடும் மிக்கன . நாடுகிழ வோனே ( பொருந .248 ) காடக மிறந்தோர்க்கே ஓடமென் மனனே காண் கறைமிட றணியலு மணிந்தன்று ( புறம் . கடவுள் ) எனச் சிறுபான்மை வேற்றுமைக்கண் மிகா வாயின . காட்டரண் குருட்டுக்கோழி முருட்டுப்புலையன் களிற்றியானை வெளிற்றுப்பன்றி எயிற்றேனம் எனச் சிறு பான்மை அல்வழிக்கண் மிக்கன . வெருக்குக்கண் வெருக்குக் கால் செவி தலை புறம் என உகரப் பற்றுக்கோடாகி பிற மெய்யும் மிக்கது . ( 32 ) 183. மென்றொடர் மொழியுட் சிலவேற் றுமையில் தம்மின வன்றொட ராகா மன்னே . சூ - ம் மெற்றொடர்க் குற்றுகரம் புணருமாறு கூறியது . ( - ள் ) மென்றொடர் மொழியுட் சில - மென்றொடர் மொழிக் குற்று கரங்களுட் சில மொழிகள் வேற்றுமையில் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணே தம்மினம் - இடையே நின்ற மெல்லெழுத்துத் தமக்கினமான வன்றொடராகா - வல்லெழுத்தாகத் திரிந்து வருவன வும் திரியாமல் நிற்பனவுமாம் ; மன்னே - பெரும்பாலும் என்றவாறு . - ம் : குரக்குக்கால் கழைச்சுக்கோல் எட்குக்குட்டி மருத்துப் பை பாப்புக்கால் ஏற்புடம்பு எனத் திரிந்தன . நாற்கணத் தோடும் ஓட்டுக . ஞெண்டுக்கால் வண்டுக்கால் பந்துத் திரட்சி கோங்கிலை புன்கங்காய் அடம்பம்பூ பொதும்பிற் பூவை குறும்பிற்கொற்றன் எனத் திரியாமல் நின்றன . மன்னே யென்ற மிகையானே ஒன்றுதானே ஓரிடத்துத் திரிந்தும் திரியாதும் வருவனவும் உளவெனக் கொள்க . அவை குரக்கடி குரங் கடி குரக்குக்கால் குரங்கின்கால் வேப்பங்காய் வேம்பின்காய்