நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

பதிப்புரை தமிழிலக்கண வரலாற்றின் பெருமைக்குக் காரணம் காலப் பழமை ஒன்றுமட்டுமல்ல; அதன் தொடர்நிலைப் பாங்குமாகும். இரண்டாயிரம் ஆண்டுகளாக இலக்கணங்கள் போற்றிப் பயிலப்படு வதும் மொழியின் மாற்ற வளர்ச்சிகட்கேற்பப் புதுப்புது இலக்கணங் கள் மரபு முறையையொட்டி இயற்றப்படுவதும் இந்திய மொழி களில் தமிழ் ஒன்றற்கேயுரிய சிறப்புகளாகும். செறிவான நடையை யுடைய இலக்கணச் சூத்திரங்களை உரையின்றித் தெளிவாகப் புரிந்து கொள்வது சிறிது கடினமாதலின் இலக்கண நூல்களின் தோற்ற வளர்ச்சிகளோடு உரைகளின் தோற்ற வளர்ச்சிகளும் இணைந்து ஒன் றாகி விட்டன. எனவேதான் இலக்கண மரபைப் போலவே உ.ரை மரபும் தமிழில் வேரூன்றி வளர்ந்துள்ளது. இவற்றை வெவ்வேறாகப் பிரித்து ஆராய்வதுகூடச் சிறிது இடர்ப்பாட்டிற்குரியதாகும். இலக்கணங் களையும் அவற்றின் உரைகளையும் தொடர்ந்து ஆர்வத்தோடு கற்பதன் மூலமாகவும் கற்பிப்பதன் மூலமாகவும் அவற்றின் முழு வளர்ச்சிக்கு வித்தூன்றப்பட்டது. அச்சுப் பழக்கத்திற்குப் பிறகு அந்த ஆர்வம் நன்றாகப் பரவி வளர்ந்தது. இதன் விளைவாகப் பழைய ஓலைச்சுவடிகள் தேடப்பட்டன; கண்டுபிடிக்கப்பட்டன; தொகுக்கப் பட்டன; பதிப்பிக்கப்பட்டன. கல்வி நிலையங்கள் இலக்கணங் களைக் குறிப்பிட்ட சில உரைகளோடு பாடத்திட்டத்தில் சேர்த்ததால் அவற்றின் பதிப்புகள் திருந்தலாயின. இந்த முயற்சியில் தமிழறிஞர் களோடு அயல் நாட்டு அறிஞர்களும் ஈடுபட்டுச் செயலாற்றிய தொண்டு குறிப்பிடத்தக்கது. ஒப்பியற் கல்வி முறையும் மொழியிய லின் வளர்ச்சியும் இலக்கணக் கல்விக்குப் புதியதொரு எழுச்சியை ஏற்படுத்தின. இத்தகைய வளர்ச்சி நிகழ்ந்துங்கூட இன்றுவரை எந்தவொரு தமிழிலக்கணத்திற்கோ அல்லது இலக்கண உரைக்கோ திருத்தப் பதிப்பு வெளிவராமல் இருப்பது வருந்தற்குரிய செய்தியாகும். இதைவிட வியப்பளிக்கும் உண்மை ஒரு சில இலக்கணங்களும் இலக்கண உரைகளும் இன்னும் அச்சாகாமலே இருப்பதுதான். இந்த நிலைமைக்குக் காரணங்கள் பல. அவற்றுள் முக்கியமானவை யாக மூன்றைக் குறிப்பிடலாம்.
பதிப்புரை தமிழிலக்கண வரலாற்றின் பெருமைக்குக் காரணம் காலப் பழமை ஒன்றுமட்டுமல்ல ; அதன் தொடர்நிலைப் பாங்குமாகும் . இரண்டாயிரம் ஆண்டுகளாக இலக்கணங்கள் போற்றிப் பயிலப்படு வதும் மொழியின் மாற்ற வளர்ச்சிகட்கேற்பப் புதுப்புது இலக்கணங் கள் மரபு முறையையொட்டி இயற்றப்படுவதும் இந்திய மொழி களில் தமிழ் ஒன்றற்கேயுரிய சிறப்புகளாகும் . செறிவான நடையை யுடைய இலக்கணச் சூத்திரங்களை உரையின்றித் தெளிவாகப் புரிந்து கொள்வது சிறிது கடினமாதலின் இலக்கண நூல்களின் தோற்ற வளர்ச்சிகளோடு உரைகளின் தோற்ற வளர்ச்சிகளும் இணைந்து ஒன் றாகி விட்டன . எனவேதான் இலக்கண மரபைப் போலவே உ.ரை மரபும் தமிழில் வேரூன்றி வளர்ந்துள்ளது . இவற்றை வெவ்வேறாகப் பிரித்து ஆராய்வதுகூடச் சிறிது இடர்ப்பாட்டிற்குரியதாகும் . இலக்கணங் களையும் அவற்றின் உரைகளையும் தொடர்ந்து ஆர்வத்தோடு கற்பதன் மூலமாகவும் கற்பிப்பதன் மூலமாகவும் அவற்றின் முழு வளர்ச்சிக்கு வித்தூன்றப்பட்டது . அச்சுப் பழக்கத்திற்குப் பிறகு அந்த ஆர்வம் நன்றாகப் பரவி வளர்ந்தது . இதன் விளைவாகப் பழைய ஓலைச்சுவடிகள் தேடப்பட்டன ; கண்டுபிடிக்கப்பட்டன ; தொகுக்கப் பட்டன ; பதிப்பிக்கப்பட்டன . கல்வி நிலையங்கள் இலக்கணங் களைக் குறிப்பிட்ட சில உரைகளோடு பாடத்திட்டத்தில் சேர்த்ததால் அவற்றின் பதிப்புகள் திருந்தலாயின . இந்த முயற்சியில் தமிழறிஞர் களோடு அயல் நாட்டு அறிஞர்களும் ஈடுபட்டுச் செயலாற்றிய தொண்டு குறிப்பிடத்தக்கது . ஒப்பியற் கல்வி முறையும் மொழியிய லின் வளர்ச்சியும் இலக்கணக் கல்விக்குப் புதியதொரு எழுச்சியை ஏற்படுத்தின . இத்தகைய வளர்ச்சி நிகழ்ந்துங்கூட இன்றுவரை எந்தவொரு தமிழிலக்கணத்திற்கோ அல்லது இலக்கண உரைக்கோ திருத்தப் பதிப்பு வெளிவராமல் இருப்பது வருந்தற்குரிய செய்தியாகும் . இதைவிட வியப்பளிக்கும் உண்மை ஒரு சில இலக்கணங்களும் இலக்கண உரைகளும் இன்னும் அச்சாகாமலே இருப்பதுதான் . இந்த நிலைமைக்குக் காரணங்கள் பல . அவற்றுள் முக்கியமானவை யாக மூன்றைக் குறிப்பிடலாம் .