நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

98 உயிரீற்றுப் புணரியல் என எனவும் வருவித்து உயிரே யகரமே ரகரமே என்று இவ்வீற்று உயர்திணைப் பெயர் முன் வந்த க ச த பக்கள் இரு வழியும் இயல்பாயினவாறு காண்க. “ஆவி யர முன் வன்மை மிகா" எனவே பிற ஈறுகள் முன்வரின் பிற விகாரங்களாமெனக் கொள்க. அவை கொற்றன்றீயன், அவன்றண்ணியன் வரும். இனி ஆடூஉக் குறியன், மகடூஉக் குறியள் கை, செவி, தலை, புறம் எனவும் எட்டிப் பூ, எட்டிப்புரவு, காவிதிப்பூ, காவிதிப்புரவு, நம்பிப்பூ, நம்பிப் பேறு எனவும் உயர்தினைப் பெயர் முன் சில மிக்கன. மக்கட் குணம், சுட்டு, தலை, பிளம் எனச் சில திரிந்தன. கபிலபரணர், பல சான்றார் எனச் சில ஈறு கெட்டு இயல்பாயின. ஆசீவகப் பள்ளி, கணக்காயப்பள்ளி என ஈறு கெட்டு வருமொழி மிக்கன. வாயு தேவகோட்டம், பிரம கோட்டம், பிரமக்கோட்டம் எனச் சில ஈறு கெட்டு வருமொழி உறழ்ந்தன. பார்ப்பனக்கன்னி, பார்ப்பனச்சேரி, தோட்டம், பிள்ளை, மரபு, வாழ்க்கை எனச் சில ஈற்றயல் குறுகி அகரம் மிக்கன. பிறவும் இவ்வாறு வருவனவெல்லாம் கண்டு கொள்க. (9) 160. ஈற்றியா வினாவிளிப் பெயர்முன் வலியியல்பே. சூ-ம், வினா விளிப் பெயர்கள் புணருமாறு கூறியது. (இ-ள்) ஈற்றியா வினா - ஈற்று வினா முன்னும் யா வினா முன்னும், விளிப் பெயர் முன் - விளிப் பெயர்கள் முன்னும், வலி - வருமொழி முதல் வல்லினம் வந்தால், இயல்பே - இயல்புப் புணர்ச்சியாம் என்ற வாறு. உ-ம்: உண்கா, உண்கோ, வந்தானோ, வந்தானா, வந்தாயோ, வந்தாயா என நிறுத்தி, கொற்றா, சாத்தா, தேவா, பூதா என வருவித்து ஈற்று வினா முன் வல்லினம் வர இயல்பாயினவாறு காண்க. யா என நிறுத்தி, குறிய, சிறிய, தீய, பெரிய என வருவித்து யா வினா முன் இயல்பாயினவாறு காண்க. நாகா, நம்பீ, தோழீ, செவிலி எனவும் சாத்தா, கொற்றா, சாத்தி, கொற்றி எனவும் நாயே, நரியே, நீரே, நிலனே எனவும் நிறுத்தி, கொள், செல், து, போ என வருவித்து முப்பெயர் விளிகள் முன்னும் வல்லினம் வந்து இயல்பாயினவாறு காண்க. (10) 161. ஆவி யரழ விறுதிமுன் னிலைவினை ஏவன்முன் வல்லின மியல்பொடு விகற்பே. சூ-ம், முன்னிலை வினைமுற்றும் முன்னிலை ஏவல் வினையும் புணரு மாறு கூறியது. (இ-ள்) ஆவி யரழ இறுதி - உயிரும் ய ர ழ என்னும் இம் மூன்று மெய்யும் ஈறாக வரும், முன்னிலை வினை ஏவல் முன் - முன்னிலை வினைமுற்றே முன்னிலை ஏவல் வினையே என்று இவற்றின் முன்,
98 உயிரீற்றுப் புணரியல் என எனவும் வருவித்து உயிரே யகரமே ரகரமே என்று இவ்வீற்று உயர்திணைப் பெயர் முன் வந்த பக்கள் இரு வழியும் இயல்பாயினவாறு காண்க . ஆவி யர முன் வன்மை மிகா எனவே பிற ஈறுகள் முன்வரின் பிற விகாரங்களாமெனக் கொள்க . அவை கொற்றன்றீயன் அவன்றண்ணியன் வரும் . இனி ஆடூஉக் குறியன் மகடூஉக் குறியள் கை செவி தலை புறம் எனவும் எட்டிப் பூ எட்டிப்புரவு காவிதிப்பூ காவிதிப்புரவு நம்பிப்பூ நம்பிப் பேறு எனவும் உயர்தினைப் பெயர் முன் சில மிக்கன . மக்கட் குணம் சுட்டு தலை பிளம் எனச் சில திரிந்தன . கபிலபரணர் பல சான்றார் எனச் சில ஈறு கெட்டு இயல்பாயின . ஆசீவகப் பள்ளி கணக்காயப்பள்ளி என ஈறு கெட்டு வருமொழி மிக்கன . வாயு தேவகோட்டம் பிரம கோட்டம் பிரமக்கோட்டம் எனச் சில ஈறு கெட்டு வருமொழி உறழ்ந்தன . பார்ப்பனக்கன்னி பார்ப்பனச்சேரி தோட்டம் பிள்ளை மரபு வாழ்க்கை எனச் சில ஈற்றயல் குறுகி அகரம் மிக்கன . பிறவும் இவ்வாறு வருவனவெல்லாம் கண்டு கொள்க . ( 9 ) 160. ஈற்றியா வினாவிளிப் பெயர்முன் வலியியல்பே . சூ - ம் வினா விளிப் பெயர்கள் புணருமாறு கூறியது . ( - ள் ) ஈற்றியா வினா - ஈற்று வினா முன்னும் யா வினா முன்னும் விளிப் பெயர் முன் - விளிப் பெயர்கள் முன்னும் வலி - வருமொழி முதல் வல்லினம் வந்தால் இயல்பே - இயல்புப் புணர்ச்சியாம் என்ற வாறு . - ம் : உண்கா உண்கோ வந்தானோ வந்தானா வந்தாயோ வந்தாயா என நிறுத்தி கொற்றா சாத்தா தேவா பூதா என வருவித்து ஈற்று வினா முன் வல்லினம் வர இயல்பாயினவாறு காண்க . யா என நிறுத்தி குறிய சிறிய தீய பெரிய என வருவித்து யா வினா முன் இயல்பாயினவாறு காண்க . நாகா நம்பீ தோழீ செவிலி எனவும் சாத்தா கொற்றா சாத்தி கொற்றி எனவும் நாயே நரியே நீரே நிலனே எனவும் நிறுத்தி கொள் செல் து போ என வருவித்து முப்பெயர் விளிகள் முன்னும் வல்லினம் வந்து இயல்பாயினவாறு காண்க . ( 10 ) 161. ஆவி யரழ விறுதிமுன் னிலைவினை ஏவன்முன் வல்லின மியல்பொடு விகற்பே . சூ - ம் முன்னிலை வினைமுற்றும் முன்னிலை ஏவல் வினையும் புணரு மாறு கூறியது . ( - ள் ) ஆவி யரழ இறுதி - உயிரும் என்னும் இம் மூன்று மெய்யும் ஈறாக வரும் முன்னிலை வினை ஏவல் முன் - முன்னிலை வினைமுற்றே முன்னிலை ஏவல் வினையே என்று இவற்றின் முன்