நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 85 உம்மூர் கடதற விகுதி விரவுத்திணைத் தன்மைப்பன்மை; ஐ ஆய் இ விகுதி விரவுத்திணை முன்னிலையொருமை; மின் இர் ஈர் விகுதி விரவுத்தினை முன்னிலைப் பன்மை; ஈயர் கய உம் விகுதி இருதிணை ஐம்பால் மூன்றிடத்துக்கும் பொது. (13) 141. இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பலிற் பகுதி விகுதி பகுத்திடை நின்றதை வினைப்பெய ரல்பெயர்க் கிடைநிலை யெனலே. சூ-ம், பெயர்ப் பகுபதங்கட்கு இடைநிலை ஆமாறு கூறியது. (இ-ள்) இலக்கியங் கண்டு - முற்காலத்து இலக்கியங் கண்டு, அதற்கு இலக்கணம் இயம்பலிற் - அவ்விலக்கியத்துக்கே இலக் கணம் காட்டலில், பகுதி விகுதி பகுத்து - முடிக்கலுறும் பகுபதத்தின் பகுதியும் விகுதியும் பிரித்து, இடை நின்றதை - இடையிலே நிற்பது யாது அதனை, வினைப் பெயரால் பெயர்க்கு - வினையாலணையும் பெயரல்லாத பெயர்ப்பகுதி பதத்திற்கு, இடைநிலை எனலே - இடை நிலையென்று கொள்ளவேண்டும் என்றவாறு. உ-ம்: நடந்தான் வானவன், மீனவன், எல்லவன், வில்லவன், பகலவன், கதிரவன், கரியவன் என அவ்வென்னும் இடைநிலை பெற்றன. சேரமான், கட்டிமான் என மகர இடைநிலை பெற்றன. வலைச்சி, புலைச்சி எனச் சகர இடைநிலை பெற்றன. புலத்தி, வண்ணாத்தி எனத் தகர இடைநிலை பெற்றன. வெள் ளாட்டி, மலையாட்டி என டகர இடைநிலை பெற்றன. கணக் கிச்சி, தச்சிச்சி என இச்சென்னும் இடைநிலை பெற்றன. பிறவும் இவ்வாறு அறிந்து முடிக்க. (14) 142. தடறவொற் றின்னே யைம்பான் மூவிடத் திறந்த காலந் தருந்தொழி லிடைநிலை சூ-ம், வினைப் பகுபதத்திற்கு இடைநிலை ஆமாறு கூறியது. (இ-ள்) தடறவொற்றின்னே - தகார டகார றகார மெய்களும் இன் னும், ஐம்பான் - ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒருமைப்பால், பன்மைப்பாலென ஐம்பாலினும், மூவிடத்து - தன்மை, முன்னிலை, படர்க்கை மூன்றிடத்தும், இறந்த காலந் தரும் - இறந்த காலங் காட் டும், தொழில் இடைநிலை - வினைப் பகுபத இடைநிலையாம் என்ற வாறு. உ-ம்: நடந்தான், நடந்தாள், நடந்தார், நடந்தது, நடந்தன, நடந் தேன், நடந்தேம், நடந்தாய், நடந்தீர் எனவும்; விட்டான், விட் டாள், விட்டார், விட்டது, விட்டன, விட்டேன், விட்டேம், விட் டாய், விட்டீர் எனவும்; உற்றான், உற்றாள், உற்றார், உற்றது,
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 85 உம்மூர் கடதற விகுதி விரவுத்திணைத் தன்மைப்பன்மை ; ஆய் விகுதி விரவுத்திணை முன்னிலையொருமை ; மின் இர் ஈர் விகுதி விரவுத்தினை முன்னிலைப் பன்மை ; ஈயர் கய உம் விகுதி இருதிணை ஐம்பால் மூன்றிடத்துக்கும் பொது . ( 13 ) 141. இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பலிற் பகுதி விகுதி பகுத்திடை நின்றதை வினைப்பெய ரல்பெயர்க் கிடைநிலை யெனலே . சூ - ம் பெயர்ப் பகுபதங்கட்கு இடைநிலை ஆமாறு கூறியது . ( - ள் ) இலக்கியங் கண்டு - முற்காலத்து இலக்கியங் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பலிற் - அவ்விலக்கியத்துக்கே இலக் கணம் காட்டலில் பகுதி விகுதி பகுத்து - முடிக்கலுறும் பகுபதத்தின் பகுதியும் விகுதியும் பிரித்து இடை நின்றதை - இடையிலே நிற்பது யாது அதனை வினைப் பெயரால் பெயர்க்கு - வினையாலணையும் பெயரல்லாத பெயர்ப்பகுதி பதத்திற்கு இடைநிலை எனலே - இடை நிலையென்று கொள்ளவேண்டும் என்றவாறு . - ம் : நடந்தான் வானவன் மீனவன் எல்லவன் வில்லவன் பகலவன் கதிரவன் கரியவன் என அவ்வென்னும் இடைநிலை பெற்றன . சேரமான் கட்டிமான் என மகர இடைநிலை பெற்றன . வலைச்சி புலைச்சி எனச் சகர இடைநிலை பெற்றன . புலத்தி வண்ணாத்தி எனத் தகர இடைநிலை பெற்றன . வெள் ளாட்டி மலையாட்டி என டகர இடைநிலை பெற்றன . கணக் கிச்சி தச்சிச்சி என இச்சென்னும் இடைநிலை பெற்றன . பிறவும் இவ்வாறு அறிந்து முடிக்க . ( 14 ) 142. தடறவொற் றின்னே யைம்பான் மூவிடத் திறந்த காலந் தருந்தொழி லிடைநிலை சூ - ம் வினைப் பகுபதத்திற்கு இடைநிலை ஆமாறு கூறியது . ( - ள் ) தடறவொற்றின்னே - தகார டகார றகார மெய்களும் இன் னும் ஐம்பான் - ஆண்பால் பெண்பால் பலர்பால் ஒருமைப்பால் பன்மைப்பாலென ஐம்பாலினும் மூவிடத்து - தன்மை முன்னிலை படர்க்கை மூன்றிடத்தும் இறந்த காலந் தரும் - இறந்த காலங் காட் டும் தொழில் இடைநிலை - வினைப் பகுபத இடைநிலையாம் என்ற வாறு . - ம் : நடந்தான் நடந்தாள் நடந்தார் நடந்தது நடந்தன நடந் தேன் நடந்தேம் நடந்தாய் நடந்தீர் எனவும் ; விட்டான் விட் டாள் விட்டார் விட்டது விட்டன விட்டேன் விட்டேம் விட் டாய் விட்டீர் எனவும் ; உற்றான் உற்றாள் உற்றார் உற்றது