நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

82 பதவியல் (இ-ள்) ஈறு போதல் - பண்புப் பதத்தின் இறுதி கெடுதலும், இவை யுகர மிய்யாதல் - இடையிலே நின்ற உகரம் இகரமாதலும், ஆதி நீடல் - முதலினின்ற உயிர்கள் நீடலும், முதலினின்ற அகாரம் ஐகார மாதலும், தன்னொற் றிரட்டல் - இடையே தன்னொற்று இரட்டித்த லும், முன்னின்ற மெய்திரிதல் - முன்பு நின்ற மெய்யெழுத்துத் திரித லும், இனமிகல் - வருமொழி முதலுக்கு இனவெழுத்து மிகுதலும், இனையவும் - இவை போல்வன பிறவும், பண்பிற்கு இயல்பே - பண் புப் பதத்துக்கு முறைமை என்றவாறு. அருகியவுரை: ஈற்றிற் செய்கையை முற்கூறியவதனால் இக் கேடு ஒருதலை அல்ல என்பதூஉம், கெடுவழி ஈற்றுயிர் கெடுதலும் ஈற்றுயிர்மெய் கெடுதலும், ஈற்றுயிர்மெய்யோடு ஈற்றயலுயிர் கெடுதலும், இனவெழுத்து வருமொழிக்கண்ளது என்பதூஉம், கெடுவழி ஈற்றுயிர் இவ்விதி எல்லாம் ஒன்றற்கு அல்ல என்பதூ டம் கொள்க. வ-று: கரியன், பெரியன், சிறியன், நெடியன் என்பன ஈற்றுயிர் மெய் கெட்டும், உகரம் இகரமாகியும் வந்தன. கருங் குதிரை, செங்கோலம் என்பன ஈற்றுயிரும் ஈற்றுயிர்மெய்யும் முறையே கெட்டன. கார், பேரா, பாசிழை, பாசடை என்பன ஈற்றுயிர் மெய்யும் ஈற்றுயிரும் கெட ஆதி நீண்டன. பைங்கண், பைந்தார் ஈற்றுயிர்மெய்யும் ஈற்றயலுயிரும் கெட்டு அடியில் நின்ற அகரம் ஐகாரமாய் முன்னின்ற மெய் திரிந்தன. வெற்றிலை, சிற்றாடை, குற்றடி, குற்றுயிர், நெட்டிலை, நெட்டெழுத்து என்பன ஈற்றுயிர்மெய்யும் ஈற்றயலுயிரும் கெட்டு இடையே தன்னொற்று இரட்டித்தன. சேதா என்பது ஈற்றுயிர்மெய் கெட்டு முன்னின்ற மெய் திரிந்து ஆதி நீண்டது. செங்கன்று என் பது வருமொழிக்கு இனமான மெல்லெழுத்து மிக்கது. கருங் குதிரை முதலாயின பகுபதம் அல்லவெனினும் பண்பு அதி காரப்பட்டமையாற் பதப்புணர்ச்சிக்கும் ஈண்டே சொன்னார் என்க. (9) 137. நடவா மடிசீ விடுகூ வேவை நொப்போ வௌவுரி நுண்பொருந் திருந்தின் தீய்பார் செல்வவ் வாழ்கே ளஃகென் றெய்திய விருபான் மூன்றா மீற்றவும் செய்யெ னேவல் வினைப்பகாப் பதமே. சூ-ம், வினைப் பகாப்பதம் விளங்கித் தோன்றாமையின் அவற்றை எடுத்து விரித்துரைத்தது. (இ-ள்) நட .... அஃகு என்றெய்திய - நட ... அஃகு என்று சொல்லப் பட்ட, இருபான் மூன்றாம் ஈற்றவும் - இருபத்து மூன்று ஈற்றவாய ஏவல் வாய்பாட்டான் வருவனவெல்லாம், செய்யென் ஏவல் செய்
82 பதவியல் ( - ள் ) ஈறு போதல் - பண்புப் பதத்தின் இறுதி கெடுதலும் இவை யுகர மிய்யாதல் - இடையிலே நின்ற உகரம் இகரமாதலும் ஆதி நீடல் - முதலினின்ற உயிர்கள் நீடலும் முதலினின்ற அகாரம் ஐகார மாதலும் தன்னொற் றிரட்டல் - இடையே தன்னொற்று இரட்டித்த லும் முன்னின்ற மெய்திரிதல் - முன்பு நின்ற மெய்யெழுத்துத் திரித லும் இனமிகல் - வருமொழி முதலுக்கு இனவெழுத்து மிகுதலும் இனையவும் - இவை போல்வன பிறவும் பண்பிற்கு இயல்பே - பண் புப் பதத்துக்கு முறைமை என்றவாறு . அருகியவுரை : ஈற்றிற் செய்கையை முற்கூறியவதனால் இக் கேடு ஒருதலை அல்ல என்பதூஉம் கெடுவழி ஈற்றுயிர் கெடுதலும் ஈற்றுயிர்மெய் கெடுதலும் ஈற்றுயிர்மெய்யோடு ஈற்றயலுயிர் கெடுதலும் இனவெழுத்து வருமொழிக்கண்ளது என்பதூஉம் கெடுவழி ஈற்றுயிர் இவ்விதி எல்லாம் ஒன்றற்கு அல்ல என்பதூ டம் கொள்க . - று : கரியன் பெரியன் சிறியன் நெடியன் என்பன ஈற்றுயிர் மெய் கெட்டும் உகரம் இகரமாகியும் வந்தன . கருங் குதிரை செங்கோலம் என்பன ஈற்றுயிரும் ஈற்றுயிர்மெய்யும் முறையே கெட்டன . கார் பேரா பாசிழை பாசடை என்பன ஈற்றுயிர் மெய்யும் ஈற்றுயிரும் கெட ஆதி நீண்டன . பைங்கண் பைந்தார் ஈற்றுயிர்மெய்யும் ஈற்றயலுயிரும் கெட்டு அடியில் நின்ற அகரம் ஐகாரமாய் முன்னின்ற மெய் திரிந்தன . வெற்றிலை சிற்றாடை குற்றடி குற்றுயிர் நெட்டிலை நெட்டெழுத்து என்பன ஈற்றுயிர்மெய்யும் ஈற்றயலுயிரும் கெட்டு இடையே தன்னொற்று இரட்டித்தன . சேதா என்பது ஈற்றுயிர்மெய் கெட்டு முன்னின்ற மெய் திரிந்து ஆதி நீண்டது . செங்கன்று என் பது வருமொழிக்கு இனமான மெல்லெழுத்து மிக்கது . கருங் குதிரை முதலாயின பகுபதம் அல்லவெனினும் பண்பு அதி காரப்பட்டமையாற் பதப்புணர்ச்சிக்கும் ஈண்டே சொன்னார் என்க . ( 9 ) 137. நடவா மடிசீ விடுகூ வேவை நொப்போ வௌவுரி நுண்பொருந் திருந்தின் தீய்பார் செல்வவ் வாழ்கே ளஃகென் றெய்திய விருபான் மூன்றா மீற்றவும் செய்யெ னேவல் வினைப்பகாப் பதமே . சூ - ம் வினைப் பகாப்பதம் விளங்கித் தோன்றாமையின் அவற்றை எடுத்து விரித்துரைத்தது . ( - ள் ) நட .... அஃகு என்றெய்திய - நட ... அஃகு என்று சொல்லப் பட்ட இருபான் மூன்றாம் ஈற்றவும் - இருபத்து மூன்று ஈற்றவாய ஏவல் வாய்பாட்டான் வருவனவெல்லாம் செய்யென் ஏவல் செய்