நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

80 பதவியல் பெயரும், சினை - சினை காரணமாக வரும் பெயரும், குணம் - குணம் காரணமாக வரும் பெயரும், தொழிலின் வருபெயர் - தொழில் காரண மாக வரும் பெயரும், பொழுதுகொள் வினை - காலத்தைக் கொண்டு முடியும் வினையும், பகுபதமே இவையெல்லாம் பகுபதம் என்றவாறு. பொருள் முதல் மூன்றும் முதலும் சினைமுதல் மூன்றும் சினை யுமாய் அடங்குதற்கு இம்முறை வைத்தார் என்க. உ-ம்: குழையன், வாணன், உத்திரட்டாதியான், கூனன், கரியன், கூத்தன் எனப் பெயர்ப் பகுபதம் ஆறும் வந்தன. நடந்தான், நடக்கின்றான், நடப்பான் என முக்காலமும் காட்டும் வினைப் பகுபதம் வந்தன. (5) பகுபதவுறுப்பு 133. பகுதி விகுதி யிடைநிலை சாரியை சந்தி விகார மாறினு மேற்பவை முன்னிப் புணர்ப்ப முடியுமெப் பதங்களும். சூ-ம், பகுபத முடித்தற்கு வேண்டும் கருவி கூறியது. (இ-ள்) பகுதி விகுதி இடைநிலை - முதல் நிற்பதுவம் இடை நிற் பதுவும் இறுதி நிற்பதுவும், சாரியை சந்தி விகாரம் - பொதுச் சாரி யையும் சந்தி வகையும் விகாரக் கூறுபாடும். ஆறினும் ஏற்பவை - இங்ஙனம் கூறிய ஆறினுள்ளும் ஈண்டைக்கேற்பன இவையென, முன்னிப் புணர்ப்ப - கருதி வருவித்து முடிக்க, முடியும் எப்பதங்களும் - பொருளாதி அறுவகைப் பெயர்ப்பதமும் வினைப்பதமும் முடியும் என்றவாறு. இடைநிலையாவன: பதம் முடிப்புழிக் காலமும் பொருண் மையும் காட்டி வருவன. சாரியையாவன; அன், ஆன் முதலாக ஓதிய தில் எல்லாப் புணர்ச்சிக்கும் பொதுவாய்ப் பெரும்பாலும் இன்னொ லியே பயனாக வருவன. சந்தியாவன: இன்னது வந்தால் இன்னது ஆமென வருவன. விகாரமாவன: பதத்துள் அடிப்பாடும் செய்யுள் தொடையும் ஒலியும் காரணமாக வலித்தல் முதலாக வருவன. “ஏற் பவை” எனவே ஒன்றற்கே இவை ஆறும் வரவேண்டுமென்னும் யாப் புறவு இல்லையென்க. (6) பகுதி 134. தத்தம், பகாப் பதங்களே பகுதி யாகும். சூ-ம், பகுபதங்கட்குப் பகுதியாமாறு கூறியது.
80 பதவியல் பெயரும் சினை - சினை காரணமாக வரும் பெயரும் குணம் - குணம் காரணமாக வரும் பெயரும் தொழிலின் வருபெயர் - தொழில் காரண மாக வரும் பெயரும் பொழுதுகொள் வினை - காலத்தைக் கொண்டு முடியும் வினையும் பகுபதமே இவையெல்லாம் பகுபதம் என்றவாறு . பொருள் முதல் மூன்றும் முதலும் சினைமுதல் மூன்றும் சினை யுமாய் அடங்குதற்கு இம்முறை வைத்தார் என்க . - ம் : குழையன் வாணன் உத்திரட்டாதியான் கூனன் கரியன் கூத்தன் எனப் பெயர்ப் பகுபதம் ஆறும் வந்தன . நடந்தான் நடக்கின்றான் நடப்பான் என முக்காலமும் காட்டும் வினைப் பகுபதம் வந்தன . ( 5 ) பகுபதவுறுப்பு 133. பகுதி விகுதி யிடைநிலை சாரியை சந்தி விகார மாறினு மேற்பவை முன்னிப் புணர்ப்ப முடியுமெப் பதங்களும் . சூ - ம் பகுபத முடித்தற்கு வேண்டும் கருவி கூறியது . ( - ள் ) பகுதி விகுதி இடைநிலை - முதல் நிற்பதுவம் இடை நிற் பதுவும் இறுதி நிற்பதுவும் சாரியை சந்தி விகாரம் - பொதுச் சாரி யையும் சந்தி வகையும் விகாரக் கூறுபாடும் . ஆறினும் ஏற்பவை - இங்ஙனம் கூறிய ஆறினுள்ளும் ஈண்டைக்கேற்பன இவையென முன்னிப் புணர்ப்ப - கருதி வருவித்து முடிக்க முடியும் எப்பதங்களும் - பொருளாதி அறுவகைப் பெயர்ப்பதமும் வினைப்பதமும் முடியும் என்றவாறு . இடைநிலையாவன : பதம் முடிப்புழிக் காலமும் பொருண் மையும் காட்டி வருவன . சாரியையாவன ; அன் ஆன் முதலாக ஓதிய தில் எல்லாப் புணர்ச்சிக்கும் பொதுவாய்ப் பெரும்பாலும் இன்னொ லியே பயனாக வருவன . சந்தியாவன : இன்னது வந்தால் இன்னது ஆமென வருவன . விகாரமாவன : பதத்துள் அடிப்பாடும் செய்யுள் தொடையும் ஒலியும் காரணமாக வலித்தல் முதலாக வருவன . ஏற் பவை எனவே ஒன்றற்கே இவை ஆறும் வரவேண்டுமென்னும் யாப் புறவு இல்லையென்க . ( 6 ) பகுதி 134. தத்தம் பகாப் பதங்களே பகுதி யாகும் . சூ - ம் பகுபதங்கட்குப் பகுதியாமாறு கூறியது .