நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

74 எழுத்தியல் 121. தம்பெயர் மொழியின் முதலு மயக்கமும் இம்முறை மாறியு மியலு மென்ப. சூ-ம், முதனிலை இடைநிலைக்குரியதோர் வழுவமைப்புக் கூறியது. (இ-ள்) தம் பெயர் மொழியின் - எழுத்துக்கள் தம் பெயர்களை மொழி யுமிடத்து, முதலு மயக்கமும் - மொழிக்கு முதலாய் நின்றதும் மொழிக்கு இடையே நிற்பனவும், இம்முறை மாறியும், ஈண்டுச் சொன்ன முறையேயன்றி முதலாகாதன் முதலாகியும் மயங்காதன மயங்கியும், இயலுமென்ப - வரப்பெறுமென்றும் சொல்லுவர் புலவர் என்றவாறு. உ-ம்: "அவற்றுள், லளஃகான் முன்னர் யவவும் தோன்றும் " (தொல். நூன்மரபு, 24) என்பதனுள் ளகாரமெய் முன்னர் லகாரம் மயங்கின வாறும் லகாரம் மொழிக்கு முதலாயினவாறும் காண்க. (66) 122. மகர விறுதி யஃறிணைப் பெயரின் னகரமோ டுறழா நடப்பன வுளவே. சூ-ம், மகர மெய்மயக்கம் உரைத்தது. (இ-ள்) மகர விறுதி - மகரவிறுதியாகிய சொற்களுள், அஃறிணைப் பெயரின் - அஃறிணைப் பெயர்களுட் சிலவிடத்து ஈற்றினின்ற மகரம், னகரமோடு உறழா நடப்பன உளவே - னகரத்துடனே பொருந்தி வருவனவும் உள என்றவாறு. உ-ம்: நிலம், நிலன்; புலம், புலன்; வலம், வலன்; முகம், முகன்; அகம், அகன் எனவும் வரும். 'உறழா நடப்பன உள' எனவே உறழாதன பெரும்பான்மையவரம் என்க. அவை விட்டம், பட்டம், குடம் எனவும் வரும். (67) 123. அ ஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன். சூ-ம், அகரமும் ஐகாரமும் ஒரோவிடத்துத் தம்மில் வேறுபாடில்லை என உரைத்தது. (இ-ள்) அ ஐ முதலிடை - அகரமும் ஐகாரமும் மொழிக்கு முதலினும் மொழிக்கு இடையினும், ஒக்கும் - தம்மில் வேறுபாடின்றி ஒத்து நடக்கும், சஞ்ய முன் - சகரஞகர யகரங்கள் முன்னாக வந்த விடத்து என்றவாறு. உ-ம்: பசல், பைசல்; மஞ்சு, மைஞ்சு; முரஞ்சு, முரைஞ்சு; அரயர், அரையர் எனவும் வரும். (68)
74 எழுத்தியல் 121. தம்பெயர் மொழியின் முதலு மயக்கமும் இம்முறை மாறியு மியலு மென்ப . சூ - ம் முதனிலை இடைநிலைக்குரியதோர் வழுவமைப்புக் கூறியது . ( - ள் ) தம் பெயர் மொழியின் - எழுத்துக்கள் தம் பெயர்களை மொழி யுமிடத்து முதலு மயக்கமும் - மொழிக்கு முதலாய் நின்றதும் மொழிக்கு இடையே நிற்பனவும் இம்முறை மாறியும் ஈண்டுச் சொன்ன முறையேயன்றி முதலாகாதன் முதலாகியும் மயங்காதன மயங்கியும் இயலுமென்ப - வரப்பெறுமென்றும் சொல்லுவர் புலவர் என்றவாறு . - ம் : அவற்றுள் லளஃகான் முன்னர் யவவும் தோன்றும் ( தொல் . நூன்மரபு 24 ) என்பதனுள் ளகாரமெய் முன்னர் லகாரம் மயங்கின வாறும் லகாரம் மொழிக்கு முதலாயினவாறும் காண்க . ( 66 ) 122 . மகர விறுதி யஃறிணைப் பெயரின் னகரமோ டுறழா நடப்பன வுளவே . சூ - ம் மகர மெய்மயக்கம் உரைத்தது . ( - ள் ) மகர விறுதி - மகரவிறுதியாகிய சொற்களுள் அஃறிணைப் பெயரின் - அஃறிணைப் பெயர்களுட் சிலவிடத்து ஈற்றினின்ற மகரம் னகரமோடு உறழா நடப்பன உளவே - னகரத்துடனே பொருந்தி வருவனவும் உள என்றவாறு . - ம் : நிலம் நிலன் ; புலம் புலன் ; வலம் வலன் ; முகம் முகன் ; அகம் அகன் எனவும் வரும் . ' உறழா நடப்பன உள ' எனவே உறழாதன பெரும்பான்மையவரம் என்க . அவை விட்டம் பட்டம் குடம் எனவும் வரும் . ( 67 ) 123 . முதலிடை யொக்குஞ் சஞயமுன் . சூ - ம் அகரமும் ஐகாரமும் ஒரோவிடத்துத் தம்மில் வேறுபாடில்லை என உரைத்தது . ( - ள் ) முதலிடை - அகரமும் ஐகாரமும் மொழிக்கு முதலினும் மொழிக்கு இடையினும் ஒக்கும் - தம்மில் வேறுபாடின்றி ஒத்து நடக்கும் சஞ்ய முன் - சகரஞகர யகரங்கள் முன்னாக வந்த விடத்து என்றவாறு . - ம் : பசல் பைசல் ; மஞ்சு மைஞ்சு ; முரஞ்சு முரைஞ்சு ; அரயர் அரையர் எனவும் வரும் . ( 68 )