நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 71 மயக்கமுமாய், உடனிலை - தன் முன்னர்த் தாம் வந்தொன்றும் உட னிலை மயக்கமாவது, ர ழ ஒழித்து ஈரெட்டாகும் - ரகார ழகாரம் ஒழித்து ஒழிந்து நின்ற பதினாறு மெய்யுமாம், இவ்விருபான் மயக்கும் - இனமெய் பிறமெய் கூடிய மெய் மயக்கமும் தன் முன்னர்த் தான் மயங்கும் உடனிலை மயக்கமும் என்னும் இவ்விரு கூறு மயக்கமும், மொழியிடை மேவும் - மொழிக்கிடையிலே பொருந்தும், உயிர்மெய், மயக்கு - உயிர்மெய்யும் உயிர்மெய்யும் கூடிய மயக்கமும், அளவின்றே - இன்னதன் பின் இன்னது வருமென்னும் வரையறை இல்லை என்றது. (55) 111. நம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே. சூ-ம், ஙகர வகர மெய்மயக்கம் கூறியது. (இ-ள்) நும்முன் கவ்வாம் - ஙகரத்துக்கு முன்னே ககரமும், வம்முன் யவ்வே - வகரத்தின் முன்னர் யகரம் வந்து மயங்கும் என்றவாறு. உ-ம்: கங்கன், தெவ்யாது என வரும். (56) 112. ஞ ந முன் றம்மினம் யகரமோ டாகும். சூ-ம், ஞகார நகார மெய்மயக்கம் கூறியது. (இ-ள்) ஞந முன் - ஞகாரமெய் முன்னும் நகாரத்தின் முன்னும், தம் இனம் - தமக்கு இனமாகிய சகரமும், தகரமும், யகரமோடாகும் யகாரமும் வந்து மயங்கும் என்றவாறு. உ-ம்: கஞ்சன், உரிஞ் யாது, கந்தன், வெரிந் யாது. (57) 113. டறமுன் கசப மெய்யுடன் மயங்கும். சூ-ம், டகார றகார மெய்மயக்கம் கூறியது. (இ-ள்) டறமுன் - டகாரத்தின் முன்னும் றகாரத்தின் முன்னும், கசப மெய்யுடன் மயங்கும் - க ச ப என்னும் மூன்று மெய்யும் மயங்கும் என்றது. உ-ம்: கட்கம், கட்கிறார், தட்பம் எனவும்; கற்க, கற்கிறார், கற்பம் எனவும் வரும். (58) 114. ண ன முன னினங்கச ஞபமய வவ்வரும். சூ-ம், ணகார னகார மெய்மயக்கம் கூறியது. .
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 71 மயக்கமுமாய் உடனிலை - தன் முன்னர்த் தாம் வந்தொன்றும் உட னிலை மயக்கமாவது ஒழித்து ஈரெட்டாகும் - ரகார ழகாரம் ஒழித்து ஒழிந்து நின்ற பதினாறு மெய்யுமாம் இவ்விருபான் மயக்கும் - இனமெய் பிறமெய் கூடிய மெய் மயக்கமும் தன் முன்னர்த் தான் மயங்கும் உடனிலை மயக்கமும் என்னும் இவ்விரு கூறு மயக்கமும் மொழியிடை மேவும் - மொழிக்கிடையிலே பொருந்தும் உயிர்மெய் மயக்கு - உயிர்மெய்யும் உயிர்மெய்யும் கூடிய மயக்கமும் அளவின்றே - இன்னதன் பின் இன்னது வருமென்னும் வரையறை இல்லை என்றது . ( 55 ) 111 . நம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே . சூ - ம் ஙகர வகர மெய்மயக்கம் கூறியது . ( - ள் ) நும்முன் கவ்வாம் - ஙகரத்துக்கு முன்னே ககரமும் வம்முன் யவ்வே - வகரத்தின் முன்னர் யகரம் வந்து மயங்கும் என்றவாறு . - ம் : கங்கன் தெவ்யாது என வரும் . ( 56 ) 112 . முன் றம்மினம் யகரமோ டாகும் . சூ - ம் ஞகார நகார மெய்மயக்கம் கூறியது . ( - ள் ) ஞந முன் - ஞகாரமெய் முன்னும் நகாரத்தின் முன்னும் தம் இனம் - தமக்கு இனமாகிய சகரமும் தகரமும் யகரமோடாகும் யகாரமும் வந்து மயங்கும் என்றவாறு . - ம் : கஞ்சன் உரிஞ் யாது கந்தன் வெரிந் யாது . ( 57 ) 113. டறமுன் கசப மெய்யுடன் மயங்கும் . சூ - ம் டகார றகார மெய்மயக்கம் கூறியது . ( - ள் ) டறமுன் - டகாரத்தின் முன்னும் றகாரத்தின் முன்னும் கசப மெய்யுடன் மயங்கும் - என்னும் மூன்று மெய்யும் மயங்கும் என்றது . - ம் : கட்கம் கட்கிறார் தட்பம் எனவும் ; கற்க கற்கிறார் கற்பம் எனவும் வரும் . ( 58 ) 114 . முன னினங்கச ஞபமய வவ்வரும் . சூ - ம் ணகார னகார மெய்மயக்கம் கூறியது . .