நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 67 (இ-ள்) இயல்பெழு மாந்தர் - இயற்கையாக - எழாநின்ற மாந்த ருடைய, இமை நொடி - கண்ணிமை இமைத்தலும் கைநொடி நொடித் தலும், மாத்திரை - மாத்திரை ஒன்றுக்கு அளபாம் என்றவாறு. அரும்பதவுரை: கட்புலனாகிய இமைக்காலமும் செவிப் புல னாகிய நொடிக் காலமும் கருதிக் கோடற்கு இரண்டும் ஓதி னார். அன்றி இரண்டும் கூடி ஒரு மாத்திரைய அல்லவென்க. (45) 101. மாத்திரைக்குப் புறநடை ஆவியு மொற்று மளபிறந் திசைத்தலும் மேவு மிசைவிளி பண்டமாற் றாதியின். சூ-ம், மேலுரைத்த மாத்திரைக்கு ஓர் புறநடை உரைத்தது. (இ-ள்) ஆவியுமொற்றும் - உயிரும் ஒற்றுமென்னும் இவ்விரு கூற் றெழுத்தும், அளபிறந்து இசைத்தலும் மேவும் - தத்தமக்குச் சொன்ன மாத்திரை கடந்து மிக்கிசைக்கவும் பெறும், இசை விளி பண்டமாற் றாதியின் - இசை கூறுமிடத்தும் விளக்குமிடத்தும் பண்டமாற்று முத லானவற்றின்கண்ணும் என்றவாறு. முதனிலை 102. பன்னீ ருயிருங் கசதந பமவய ஙஞவீ ரைந்துயிர் மெய்யு மொழிமுதல் சூ-ம், நிறுத்திய முறையே மொழிக்கு முதல் வரும் எழுத்து இன்ன தென உரைத்தது. (இ-ள்) பன்னீருயிரும் - உயிர் பன்னிரண்டெழுத்து:), க சத நபமவ ய ஞ ங ஈரைந்துயிர்மெய்யும் இப்பத்து உயிர்மெய்யெழுத்தும், மொழி முதல் - மொழிக்கு முதற்கண்ணே வரும் என்றவாறு. உ-ம்: அருள், ஆகம், இகல், ஈகை, உருவம், ஊசல், எது, ஏது, ஐயா, ஒள்வாள், ஓம், ஔவிய நெஞ்சு எனவும்; கண்டு, காடு, கிளி, கீரி, குளி, கூவல், கெடு, கேடு, கையறம், கொஞ்சம், கோலடி, கௌவை, சதம், சாடு, சிறுமி , சீயம், சுவடு, சூகரம், செல்வம், சேது, சைவம், சொல், சோரன், சௌவுரியம், தந்தி, தாதை, திரு, தீனம், துருவை, தூது, தெய்வம், தேக்கு, தையல், தொந்தி, தோள், தெளவை, நகரம், நாடு நிலை, நீதி, நுனி, நூல், நெல், நேற்று, நைதல், நொறல், நோக்கம், நௌவி, படு, பாடு, பிடி, பீடு, புடை, பூவை, பெண், பேதை, பையல், பொறி, போது, பௌவம், மலை,
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 67 ( - ள் ) இயல்பெழு மாந்தர் - இயற்கையாக - எழாநின்ற மாந்த ருடைய இமை நொடி - கண்ணிமை இமைத்தலும் கைநொடி நொடித் தலும் மாத்திரை - மாத்திரை ஒன்றுக்கு அளபாம் என்றவாறு . அரும்பதவுரை : கட்புலனாகிய இமைக்காலமும் செவிப் புல னாகிய நொடிக் காலமும் கருதிக் கோடற்கு இரண்டும் ஓதி னார் . அன்றி இரண்டும் கூடி ஒரு மாத்திரைய அல்லவென்க . ( 45 ) 101 . மாத்திரைக்குப் புறநடை ஆவியு மொற்று மளபிறந் திசைத்தலும் மேவு மிசைவிளி பண்டமாற் றாதியின் . சூ - ம் மேலுரைத்த மாத்திரைக்கு ஓர் புறநடை உரைத்தது . ( - ள் ) ஆவியுமொற்றும் - உயிரும் ஒற்றுமென்னும் இவ்விரு கூற் றெழுத்தும் அளபிறந்து இசைத்தலும் மேவும் - தத்தமக்குச் சொன்ன மாத்திரை கடந்து மிக்கிசைக்கவும் பெறும் இசை விளி பண்டமாற் றாதியின் - இசை கூறுமிடத்தும் விளக்குமிடத்தும் பண்டமாற்று முத லானவற்றின்கண்ணும் என்றவாறு . முதனிலை 102. பன்னீ ருயிருங் கசதந பமவய ஙஞவீ ரைந்துயிர் மெய்யு மொழிமுதல் சூ - ம் நிறுத்திய முறையே மொழிக்கு முதல் வரும் எழுத்து இன்ன தென உரைத்தது . ( - ள் ) பன்னீருயிரும் - உயிர் பன்னிரண்டெழுத்து :) சத நபமவ ஈரைந்துயிர்மெய்யும் இப்பத்து உயிர்மெய்யெழுத்தும் மொழி முதல் - மொழிக்கு முதற்கண்ணே வரும் என்றவாறு . - ம் : அருள் ஆகம் இகல் ஈகை உருவம் ஊசல் எது ஏது ஐயா ஒள்வாள் ஓம் ஔவிய நெஞ்சு எனவும் ; கண்டு காடு கிளி கீரி குளி கூவல் கெடு கேடு கையறம் கொஞ்சம் கோலடி கௌவை சதம் சாடு சிறுமி சீயம் சுவடு சூகரம் செல்வம் சேது சைவம் சொல் சோரன் சௌவுரியம் தந்தி தாதை திரு தீனம் துருவை தூது தெய்வம் தேக்கு தையல் தொந்தி தோள் தெளவை நகரம் நாடு நிலை நீதி நுனி நூல் நெல் நேற்று நைதல் நொறல் நோக்கம் நௌவி படு பாடு பிடி பீடு புடை பூவை பெண் பேதை பையல் பொறி போது பௌவம் மலை