நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 65 ஐகாரக் குறுக்கமும் ஒளகாரக் குறுக்கமும் 95. தற்சுட் டளபொழி யைம்மூ வழியும் நையு மௌவு முதலற் றாகும். சூ-ம், ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் ஆமாறு கூறியது. (இ-ள்) தற்சுட்டு - தன்னைச் சொல்லுதற்கண்ணும், அளபு - அள பெடுத்தற்கண்ணும், ஒழி ஐ - அல்லாத வழி வந்த ஐகாரம், மூவழி யும் நையும் - மொழிந்த முதல் இடை கடையென்னும் மூன் றிடத்தும் குறுகும், ஒளவு முதல் - ஔகாரம் மொழி முதற்கண்ணே, அற்றாகும் - அத்தன்மையை உ.டையவாகும் என்றவாறு. உ-ம்: ஐப்பசி, மடையன்; குவளை என வரும் ஐகாரக் குறுக்கம் 3. மௌவல் என வரும் ஔகாரக் குறுக்கம் 1. (40) மகரக் குறுக்கம் 96. ணனமுன்னும் வஃகான் மிசையுமக் குறுகும். சூ-ம், மகாரக் குறுக்கம் ஆமாறு கூறியது. (இ-ள்) ண ன முன்னும் - ளகார லகாரங்கள் திரிந்த ணகார னகாரத் தின் முன்னும், வஃகான் மிசையும் - வகாரத்தின் மேலும், மக் குறுகும் - நின்ற மகாரம் குறுகி மகாரக் குறுக்கமாம் என்றவாறு. உ-ம்: மருண்ம், போன்ம், வாழும் வளவன் என வரும். ஆக மகரக் குறுக்கம் 3. (41) ஆய்தக் குறுக்கம் 97. லளவிற் றியைபினா மாய்த மஃகும். சூ-ம், ஆய்தக் குறுக்கம் ஆமாறு கூறியது. (இ-ள்) லளவீற்று இயைபினாம் - லகார ளகார ஈறு புணருமிடத்தே உண்டாகும், ஆய்தம் அஃகும் - ஆய்தம் குறுகி ஆய்தக் குறுக்கமாம் என்றவாறு. உ-ம்: கஃறீது, முஃடீது என வரும். ஆயுதக் குறுக்கம் ஆக 2. (42) எழுத்தின் உருவம் 98. தொல்லை வடிவின வெல்லா வெழுத்துமாண் டெய்து மெகார- மொகாரமெய் புள்ளி. சூ-ம், நிறுத்திய முறையே எழுத்துக்களது வடிவிலக்கணம் கூறியது.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 65 ஐகாரக் குறுக்கமும் ஒளகாரக் குறுக்கமும் 95. தற்சுட் டளபொழி யைம்மூ வழியும் நையு மௌவு முதலற் றாகும் . சூ - ம் ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் ஆமாறு கூறியது . ( - ள் ) தற்சுட்டு - தன்னைச் சொல்லுதற்கண்ணும் அளபு - அள பெடுத்தற்கண்ணும் ஒழி - அல்லாத வழி வந்த ஐகாரம் மூவழி யும் நையும் - மொழிந்த முதல் இடை கடையென்னும் மூன் றிடத்தும் குறுகும் ஒளவு முதல் - ஔகாரம் மொழி முதற்கண்ணே அற்றாகும் - அத்தன்மையை உ.டையவாகும் என்றவாறு . - ம் : ஐப்பசி மடையன் ; குவளை என வரும் ஐகாரக் குறுக்கம் 3 . மௌவல் என வரும் ஔகாரக் குறுக்கம் 1 . ( 40 ) மகரக் குறுக்கம் 96 . ணனமுன்னும் வஃகான் மிசையுமக் குறுகும் . சூ - ம் மகாரக் குறுக்கம் ஆமாறு கூறியது . ( - ள் ) முன்னும் - ளகார லகாரங்கள் திரிந்த ணகார னகாரத் தின் முன்னும் வஃகான் மிசையும் - வகாரத்தின் மேலும் மக் குறுகும் - நின்ற மகாரம் குறுகி மகாரக் குறுக்கமாம் என்றவாறு . - ம் : மருண்ம் போன்ம் வாழும் வளவன் என வரும் . ஆக மகரக் குறுக்கம் 3 . ( 41 ) ஆய்தக் குறுக்கம் 97 . லளவிற் றியைபினா மாய்த மஃகும் . சூ - ம் ஆய்தக் குறுக்கம் ஆமாறு கூறியது . ( - ள் ) லளவீற்று இயைபினாம் - லகார ளகார ஈறு புணருமிடத்தே உண்டாகும் ஆய்தம் அஃகும் - ஆய்தம் குறுகி ஆய்தக் குறுக்கமாம் என்றவாறு . - ம் : கஃறீது முஃடீது என வரும் . ஆயுதக் குறுக்கம் ஆக 2. ( 42 ) எழுத்தின் உருவம் 98. தொல்லை வடிவின வெல்லா வெழுத்துமாண் டெய்து மெகார- மொகாரமெய் புள்ளி . சூ - ம் நிறுத்திய முறையே எழுத்துக்களது வடிவிலக்கணம் கூறியது .