நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 4 காரங்கள் மட்டுமே நமக்குக் கிடைக்கின்றன. மற்ற அதிகாரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. நன்னூலார் ஐந்து இலக்கணங்களையும் எழுதியிருப்பின் எழுத்து, சொல் ஆகிய இரு அதிகாரங்களைப் போற்றிய தமிழ் அறிஞர்கள் பிற அதிகாரங்களையும் போற்றிப் பாதுகாக்காமல் இருந்திருக்க முடியாது. மேலும் நன்னூலார் இயற்றியதாகச் சொல்லப்படுகின்ற பொருள், யாப்பு, அணி ஆகிய அதிகாரங்களில் இடம்பெற்றுள்ள ஒரு நூற்பா கூட நமக்குக் கிடைக்கவில்லை. எனவே நன்னூலார் எழுத்து, சொல் ஆகிய இரு அதிகாரங்களை மட்டுமே எழுதினார் என்று கொள்ளுவது ஏற்புடைத்து என்று அறிஞர் கருதுவர். நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர் சீயகங்கன் அரசாண்ட காலத்தில் வாழ்ந்தவர். சீயகங்கன் மூன்றாம் குலோத்துங்கன் காலத் தில் வாழ்ந்த சிற்றரசன். எனவே பவணந்தி முனிவர் வாழ்ந்த காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்று கொள்ளலாம். நன்னூல் ஆசிரியர் பெரும் புலமை பெற்றவர் என்று இலக் கணக்கொத்து ஆசிரியர் சாமிநாத தேசிகர் புகழ்கிறார். முன்னூ லொழியப் பின்னூற் பலவினுள் நன்னூலார் தமக்கு எந்நூலாரும் இணையோ என்னும் துணிவே மன்னுக என்பார் இலக்கணக் கொத்து ஆசிரியர் (இலக்கண வரலாறு, புலவர் சோம. இளவரசு, ப.140). நன்னூல் உரையாசிரியர் சங்கரநமச்சிவாயர் நூலியற்றும் அறி வினையுடைய மக்கட்குப் பல்கலைக் குருசில் பவணந்தி என்னும் புலவர் பெருமான்' என்று போற்றியுள்ளார். வைத்தியநாத தேசிகர் தான் எழுதிய இலக்கண விளக்கம் எனும் நூலில் நன்னூலில் இருந்து 250 பாக்களை எடுத்து ஆண்டுள்ளார். இங்ஙனம் நன்னூலாசிரியர் அறிஞர் பெருமக்கள் பலராலும் பாராட்டப்படுகின்றார். நன்னூலுக்கு முதல் நூல் தொல்காப்பியமும் இளம்பூரணர் உரையுமாகும். நன்னூல் ஆசிரியர் அவிநயம்' என்ற தமிழ் நூலையும் 'சினேந்திரம்' எனும் வடமொழி நூலையும் தழுவி எழுதியுள்ளார்.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 4 காரங்கள் மட்டுமே நமக்குக் கிடைக்கின்றன . மற்ற அதிகாரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை . நன்னூலார் ஐந்து இலக்கணங்களையும் எழுதியிருப்பின் எழுத்து சொல் ஆகிய இரு அதிகாரங்களைப் போற்றிய தமிழ் அறிஞர்கள் பிற அதிகாரங்களையும் போற்றிப் பாதுகாக்காமல் இருந்திருக்க முடியாது . மேலும் நன்னூலார் இயற்றியதாகச் சொல்லப்படுகின்ற பொருள் யாப்பு அணி ஆகிய அதிகாரங்களில் இடம்பெற்றுள்ள ஒரு நூற்பா கூட நமக்குக் கிடைக்கவில்லை . எனவே நன்னூலார் எழுத்து சொல் ஆகிய இரு அதிகாரங்களை மட்டுமே எழுதினார் என்று கொள்ளுவது ஏற்புடைத்து என்று அறிஞர் கருதுவர் . நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர் சீயகங்கன் அரசாண்ட காலத்தில் வாழ்ந்தவர் . சீயகங்கன் மூன்றாம் குலோத்துங்கன் காலத் தில் வாழ்ந்த சிற்றரசன் . எனவே பவணந்தி முனிவர் வாழ்ந்த காலம் கி.பி .12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்று கொள்ளலாம் . நன்னூல் ஆசிரியர் பெரும் புலமை பெற்றவர் என்று இலக் கணக்கொத்து ஆசிரியர் சாமிநாத தேசிகர் புகழ்கிறார் . முன்னூ லொழியப் பின்னூற் பலவினுள் நன்னூலார் தமக்கு எந்நூலாரும் இணையோ என்னும் துணிவே மன்னுக என்பார் இலக்கணக் கொத்து ஆசிரியர் ( இலக்கண வரலாறு புலவர் சோம . இளவரசு .140 ) . நன்னூல் உரையாசிரியர் சங்கரநமச்சிவாயர் நூலியற்றும் அறி வினையுடைய மக்கட்குப் பல்கலைக் குருசில் பவணந்தி என்னும் புலவர் பெருமான் ' என்று போற்றியுள்ளார் . வைத்தியநாத தேசிகர் தான் எழுதிய இலக்கண விளக்கம் எனும் நூலில் நன்னூலில் இருந்து 250 பாக்களை எடுத்து ஆண்டுள்ளார் . இங்ஙனம் நன்னூலாசிரியர் அறிஞர் பெருமக்கள் பலராலும் பாராட்டப்படுகின்றார் . நன்னூலுக்கு முதல் நூல் தொல்காப்பியமும் இளம்பூரணர் உரையுமாகும் . நன்னூல் ஆசிரியர் அவிநயம் ' என்ற தமிழ் நூலையும் ' சினேந்திரம் ' எனும் வடமொழி நூலையும் தழுவி எழுதியுள்ளார் .