நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

48 பாயிரம் யாப்பு, ஈரிரண்டென்ப - நான்கு கூற்றதாம் என்றவாறு. மரத்தினது அடியே தொகையும், மரத்தினது இலை, பூ, காய், கனி, மேற்கோடு கள் இவை முதலாகிய யாப்பே விரிவும், அடியுங் கூடிய நடுவே தொகை விரியாகவும் கூறினார் அதன் வகை என்றுணர்க. (4) 51. சிறப்புப் பாயிரம் செய்தற்குரியோர் தன்னா சிரியன் றன்னொடு கற்றோன் தன்மா ணாக்கன் றகுமுரை காரனென் றின்னோர் பாயிர மியம்புதற் கடனே. சூ-ம், சிறப்புப் பாயிரம் செய்வார் இவரெனக் கூறுகின்றது. (இ-ள்) தன்னாசிரியன் - நூல் செய்தோன் தனது ஆசிரியனும், தன் னொடு கற்றோன் - தன்னோடு ஒருங்கொப்பக் கற்ற மாணாக்கரும், தன் மாணாக்கன் - தன்னிடத்திற் கற்ற சீடரும், தகும் உரைகாரன் - நூற்கு உரை செய்யத்தகும் உரைகாரனும், என்றின்னோர் - எனக் கூறப்பட்ட இப்பகுதியை உடையோர், பாயிரம் இயம்புதல் கடனே - சிறப்புப் பாயிரம் கூறுதல் முறையாம் என்றவாறு. (5) சிறப்புப் பாயிரம் பிறர் செய்தற்குக் காரணம் 52. தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும் தான்றற் புகழ்த றகுதி யன்றே. சூ-ம், நூல் செய்தோன் பாயிரம் செய்தற்பாலன் அல்லானைக் கூறு கின்றது. (இ-ள்) தோ தோற்றித் - தோன்றாத இலக்கணங்கள் எல்லாம் தோன்றச் செய்து, துறை பல முடிப்பினும் - பல பல முகமாக ஓர் துறையை முடிப்பினும், தான் தற்புகழ்தல் - தன்னைத் தான் புகழ்வது, தகுதியன்றே - நெறியன்று என்றவாறு. (6) தற்புகழ்ச்சிக்குரிய இடங்கள் 53. மன் ரனுடை மன்றத் தோலைத் தூக்கினும் - தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும் மன்னிய வவையிடை வெல்லுறு பொழுதினும் தன்னை மறுதலை பழித்த காலையும் தன்னைப் புகழ்தலுந் தகும்புல வோற்கே. சூ-ம், தன்னைத் தான் புகழ்வது இவ்விடத்தெனக் கூறுகின்றது.
48 பாயிரம் யாப்பு ஈரிரண்டென்ப - நான்கு கூற்றதாம் என்றவாறு . மரத்தினது அடியே தொகையும் மரத்தினது இலை பூ காய் கனி மேற்கோடு கள் இவை முதலாகிய யாப்பே விரிவும் அடியுங் கூடிய நடுவே தொகை விரியாகவும் கூறினார் அதன் வகை என்றுணர்க . ( 4 ) 51 . சிறப்புப் பாயிரம் செய்தற்குரியோர் தன்னா சிரியன் றன்னொடு கற்றோன் தன்மா ணாக்கன் றகுமுரை காரனென் றின்னோர் பாயிர மியம்புதற் கடனே . சூ - ம் சிறப்புப் பாயிரம் செய்வார் இவரெனக் கூறுகின்றது . ( - ள் ) தன்னாசிரியன் - நூல் செய்தோன் தனது ஆசிரியனும் தன் னொடு கற்றோன் - தன்னோடு ஒருங்கொப்பக் கற்ற மாணாக்கரும் தன் மாணாக்கன் - தன்னிடத்திற் கற்ற சீடரும் தகும் உரைகாரன் - நூற்கு உரை செய்யத்தகும் உரைகாரனும் என்றின்னோர் - எனக் கூறப்பட்ட இப்பகுதியை உடையோர் பாயிரம் இயம்புதல் கடனே - சிறப்புப் பாயிரம் கூறுதல் முறையாம் என்றவாறு . ( 5 ) சிறப்புப் பாயிரம் பிறர் செய்தற்குக் காரணம் 52 . தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும் தான்றற் புகழ்த றகுதி யன்றே . சூ - ம் நூல் செய்தோன் பாயிரம் செய்தற்பாலன் அல்லானைக் கூறு கின்றது . ( - ள் ) தோ தோற்றித் - தோன்றாத இலக்கணங்கள் எல்லாம் தோன்றச் செய்து துறை பல முடிப்பினும் - பல பல முகமாக ஓர் துறையை முடிப்பினும் தான் தற்புகழ்தல் - தன்னைத் தான் புகழ்வது தகுதியன்றே - நெறியன்று என்றவாறு . ( 6 ) தற்புகழ்ச்சிக்குரிய இடங்கள் 53 . மன் ரனுடை மன்றத் தோலைத் தூக்கினும் - தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும் மன்னிய வவையிடை வெல்லுறு பொழுதினும் தன்னை மறுதலை பழித்த காலையும் தன்னைப் புகழ்தலுந் தகும்புல வோற்கே . சூ - ம் தன்னைத் தான் புகழ்வது இவ்விடத்தெனக் கூறுகின்றது .